51 முதல் 60 வரை
|
|
51. வீட்டினை யுறுவான்
இயல்பு |
- நூலுணர்வு நுண்ணொழுக்கம் காட்டுவிக்கும்
நொய்யவாம்
சால்பின்மை காட்டும் சவர்ச்செய்கை--பால்வகுத்துப் பட்டிமையா
லாகா பரமார்த்தம் பற்றின்மை ஓட்டுவா னுய்ந்துபோ வான்.
(பதவுரை)
நுண்ணொழுக்கம்-ஒருவன் சிறந்த ஒழுக்கம், நூலுணர்வு காட்டு
விக்கும்-அவன் கற்ற நூலின்கணுளதாகும், நுணுகிய உணர்வை
வெளிப்படுத்தும், சவர்ச்செய்கை-ஒருவனுடைய வெறுக்கத்தக்க இழிந்த செய்கை,
நொய்யவாம் சால்பின்மை காட்டும்-அவனுடைய இழிதகைமையாகிய சிறந்த
நூற் பயிற்சியின்மையையும் வெளிப்படுத்தும், பால்வகுத்துப் பயிற்சியின்மையையும்
வெளிப்படுத்தும், பால்வகுத்துப் பட்டிமையால்-பகுதிதோறும் வேறுபட்டு
ஒருவன் செய்யும் படிற்றொழுக்கத்தால், பரமார்த்தம்
ஆகா-பரம்பொருளை அடைதல் இயலாது, பற்றின்மை
ஓட்டுவான்-மெய்யாகவே ஒருவன் பற்றின்மையைப் பற்றுவனாயின் அவன்,
உய்ந்து போவான்-வீடடைவான்.
(குறிப்பு)
நொய்யாவாம் சொல்லின்மை-எளியவாகிய அறிவின்மை எனலுமாம். ஓட்டுவான்:
வினையாலணையும் பெயர். (51) |
|
|
|
|
|
52. வீரமில்லானைப் படைத்துணை
கோடல் வீணென்பது |
- புனைபடை கண்டஞ்சித் தற்காப்பான் றன்னை
வினைகடியு
மென்றடி வீழ்தல்--கனையிருட்கண் பல்லெலி தின்னப் பறைந்திருந்த
பூனையை இல்லெலி காக்குமென் றற்று.
(பதவுரை) புனை படை கண்டு
அஞ்சி-படைக்கலன்களை அணிந்துவரும் படையைக் கண்ட அளவானே பயந்து,
தற்காப்பான் தன்னை-தன்னைப் பாதுகாக்க விரைந்து ஒழியும் ஒருவனைப்
(பிறனொருவன்), வினை கடியும் என்று அடி வீழ்தல்-தனக்கு வந்த
போரைப் போக்கென அவனடி வீழ்ந்து வேண்டுதல், கனையிருட்
கண்-நள்ளிருளில் பல்லெலி தின்னப் பறைந்திருந்த
பூனையை-பல எலிகளும் வீட்டிலுள்ள பொருள்களைத் தின்றுகொண்டி ருப்பதைக் கண்டு
வைத்தும் ஒன்றுஞ் செய்யமுடியாது வறிதே கூச்சல் செய்துகொண்டிருந்த பயந்த பலனற்ற பூனையை,
இல்லெலி காக்கும் என்றற்று- (ஒருவன்)தன் வீட்டு எலிகளின்
துன்பத்தினின்று காக்குமென்று அத்னைக் கொண்டாற் போலும்.
(குறிப்பு)
புனைபடை: வினைத்தொகை. பல+எலி=பல்லெலி. பறைதல்-ஒலித்தல்.
(52) |
|
|
|
|
|
53. அவா மிகுந்துள்ளார்
ஆசிரியராகார் |
- மாடமும் மண்ணீடுங் கண்டடக்க மில்லாரைக்
கூடி
வழிபடுங் கோளாமை--ஆடரங்கின் நோவகமாய் நின்றானோர் கூத்தினை ஊர்வேண்டிச்
சேவகமாய் நின்ற துடைத்து.
(பதவுரை)
மண்ணீடும்-சிறுவீட்டையும், மாடமும்-பெரு மாளிகைகளையும்,
கண்டு-பார்த்து, அடக்கம்
இல்லாரை-அவாவில்லாதிராது ஆசையுடையாரை, கூடி-தலைப்பட்டு,
வழிபடும்-ஆசிரியராகக்கொண்டு வழிபாடுசெய்யும்
,கோள்-கொள்கை, அமை ஆடரங்
கின்-அமைக்கப்பட்ட நடனசாலையில், நோவகமாய் நின்றானோர்
கூத்தினை-தன் பிழைப்பு நோக்கி வருத்தமுடன் நிற்பவனாகிய கூத்தன் நடிக்க
அவன், கொண்ட அரசகோலத்தைக் கண்டு மயங்கி அவனை, ஊர்வேண்டிச் சேவகமாய்
நின்றதுடைத்து-ஊரார் தங்களை ஆள்கவென்று கூறிப் பணிசெய்து நிற்றலோ
டொக்கும்.
(குறிப்பு)
கோள்: முதநிலை திரிந்த தொழிற்பெயர். ஆடரங்கு: வினைத் தொகை. ஊர்:
இடவாகுபெயர். (53) |
|
|
|
|
|
54. ஒழுக்கமும் நோன்பும்
இல்லார் உறுதிப்பொருள் உரையார் |
- நாற்றமொன் றில்லாத பூவொடு
சாந்தினை
நாற்றந்தான் வேண்டி யதுபோலும்--ஆற்ற மறுவறு சீலமும் நோன்புமில்
லாரை உறுபயன் வேண்டிக் கொளல்.
(பதவுரை) மறுவறு
சீலமும்-குற்றமற்ற ஒழுக்கமும், நோன்பும்-தவமும்,
ஆற்ற இல்லாரை-மிக இல்லாதவர்களை, உறுபயன்
வேண்டிக்கொளல்-உறுதிப் பொருள்களை உணர்த்துமறு வேண்டுதல்,
நாற்றம் ஒன்று இல்லாத-நறுமணம் ஒரு சிறிதும் இல்லாத,
பூவொடு சாந்தினை-பூவினையும் சந்தனத்தினையும்,
நாற்றந்தான் வேண்டியது போலும்-நறுமணத்தை அளிக்குமென்று விரும்பியது
போலாம்.
(குறிப்பு)
உறுபயன்: உரிச்சொற்றடர்; மிகுந்த பயன் தரும் உறுதிப்பொருள். தான்:
அசைநிலை. (54) |
|
|
|
|
|
55. நற்குணமில்லாரிடத்து
நயங்கோடல் கூடாது |
- மால்கடல்சூழ் வையத்து மையாதாங்
காத்தோம்பிப்
பால்கருதி யன்ன துடைத்தென்பர்--மேல்வகுத்து மன்னிய நற்குண
மில்லாரைத் தாம்போற்றிப் புண்ணியங் கோடுமெனல்.
(பதவுரை)
மன்னிய-நிலைபெற்ற, நற்குணம் இல்லாரை -
நற்குணங்கள் இல்லாத வர்களை, மேல் வகுத்து-உயர்ந்தோராகக்
கொண்டு, போற்றி-துதித்து, தாம் புண்ணியம் கோடும்
எனல்-நாம் புண்ணியத்தினை அடைவோம் என்று நினைத்தல், மால்கடல்
சூழ் வையத்து-பெரிய கடல் சூழ்ந்த உலகத்தில்,
தாம்-சிலர், மையா காத்து ஓம்பி -
மலட்டுப்பசுவை மிகவும் பாதுகாத்து பால் கருதி யன்ன துடைத்து
என்பர்-அதனால் பாலை அடையக் கருதியி ருந்தாற் போலும் என்று பெரியோர்
கூறுவர்.
(குறிப்பு)
மை-மலடாகிய குற்றம், கோடும்=கொள்+தும்: கோடும்: தன்மைப் பன்மை
வினைமுற்று. (55) |
|
|
|
|
|
56. பலர் கூறினும் பொய்
மெய்யாகாது |
- உடங்கமிழ்தங் கொண்டா னொருவன் பலரும்
விடங்கண்டு
நன்றிதுவே என்றால்-- மடங்கொண்டு பல்லவர் கண்டது நன்றென் றமிழ்தொழிய
நல்லவனும் உண்ணுமோ நஞ்சு.
(பதவுரை)
உடங்கு-உயிரும் உடம்பும் கூடிநிற்றற்குக் காரணமாகிய அமிழ்தம்
கொண்டா னொருவன்-தேவாமிர்தத்தினைப் பெற்றா னொருவன்,
விடங்கண்டு பலரும் இதுவேநன்று என்றால்-நஞ்சினைப் பார்த்துப்
பலரும் இதுவே தேவாமிர்தமென்று கூறினாலும், பல்லவர் கண்டது நன்று
என்று-பலர் கண்டதே உண்மையாக இருக்குமென்று நம்பி, நல்லவனும்
மடங்கொண்டு-அமிழ்தத்தைப் பெற்ற அவனும் அறியாமையை யுடையவனாய்,
அமிழ்து ஒழிய-கையிலுள்ள அமிர்தத்தை நீக்கி, நஞ்சு
உண்ணுமோ-நஞ்சினை உண்பானோ? உண்ணான்.
(குறிப்பு)
என்றால்:உம்மை தொகுத்தல் விகாரம் பெற்றுள்ளது. நல்லவனும்: உம்மை உயர்வு
சிறப்பு. ஓ: எதிர்மறை. (56) |
|
|
|
|
|
- தன்னையும் தன்னிற் பொருளையும் பட்டாங்கிற்
பன்னி
யறமுரைக்க வல்லாரை--மன்னிய துட்ட ரெனச்சிட்டன் தோற்றுவ
தல்லாரைச் சிட்டரென் றேத்தல் சிதைவு.
(பதவுரை) தன்னையும்
தன்னிற் பொருளையும் பட்டாங்கிற் பன்னி-தன்னையும் தன்னால் அறியத்தகும்
பொருளையும் உண்மையாகக் கூறி, அற முரைக்க வல்லாரை-அறங்கூற
வல்லாரை, மன்னிய சிட்டரென-நிலைபெற்ற ஞானமுடையவரென,
சிட்டன்-ஞானி, தேற்றுவது-பலருக்கும்
தெளிவிப்பது நன்மை பயப்பதாகும், அல்லாரை-அத்தகைய
ரல்லாதவர்களை, சிட்டர் என்று-ஞானிகளென,
ஏத்தல்-புகழ்தல், சிதைவு-கேடு
பயப்பதாகும்.
(குறிப்பு)
பன்னுதல்-கூறுதல், பட்டாங்கு-நூல்நெறியெனலுமாம். (57) |
|
|
|
|
|
58. ஏகான்மவாதிகளின்
இயல்பு |
- எத்துணை கற்பினும் ஏகான்ம வாதிகள்
யுத்தியும்
சொல்லும் பொலிவிலவாய்--மிக்க அறிவனூல் கற்றா ரலவெனவே
நிற்கும் எறிகதிர்முன் நீல்சுடரே போன்று.
(பதவுரை) எத்துணை
கற்பினும்-மிகப்பல நூல்களைக் கற்றாலும், ஏகான்ம
வாதிகள்-ஆன்மா ஒன்றே என்று வாதிப்போரது, புத்தியும்
சொல்லும்-அறிவும் சொல்லும், எறி கதிர்முன் நீள்சுடரே
போன்று-சூரியன் முன் ஓங்கி எரியும் விளக்கேபோல்,
பொலிவிலவாய்-விளங்குதலின்றி,
மிக்க-பெருமைமிக்க, அறிவன் நூல் கற்றார் அல எனவே
நிற்கும்-இறைவனோதிய நூலைக் கற்றவரல்லர் என்று சொல்லுமாறே
நிற்கும்.
(குறிப்பு)
ஏகான்மவாதிகள்-அத்துவைத சமயிகள். ''விரி வெயிலில்
விளக்காளியும்............போல் வெட்கி முகம் வெளுத்தான்'' என்ற சிவகாமி சரிதத்
தொடரினை ஒப்புநோக்குக. (58) |
|
|
|
|
|
59. பிறவிநோயை அறுக்கவல்ல பெரியார்
இவரென்பது |
- அவ்விநய மாறும் மும்மூட
மெண்மயமும்
செவ்விதி னீக்கிச் சினங்கடிந்து-கவ்விய எட்டுறுப்பி னாய
இயல்பினற் காட்சியார் சுட்டறுப்பர் நாற்கதியிற் றுன்பு.
(பதவுரை) அவ்விநயம் ஆறும்-அச்சத்தால் வணங்குதல்
முதலிய ஆறு ந்வ்விநயங்களும், மும்மூடம்-உலக மயக்க முதலான மூன்று
மயக்கங்களும், எண் மயமும்-அறிவால் வருஞ் செருக்கு முதலிய எண்வகைச்
செருக்குகளுமாகிய இவற்றை, செவ்விதின் நீக்கி-நன்றாகப்
(முற்றிலும்) போக்கி, சினம் கடிந்து-வெகுளியையும் நீக்கி,
கவ்விய-மேற்கொள்ளுதற்குரிய, எட்டுறுப்பின் ஆய
இயல்பின்-ஐய மின்மை முதலான எட்டு உறுப்புக்களோடு கூடிய,
நற்காட்சியார்-சிறந்த காட்சியாராகிய அறிவினையு முடையவர்கள்,
நாற்கதியில் துன்பு-நால்வகைப்பட்ட பிறவியால் வரும் நோயைஇ
சுட்டு அறுப்பர்-சுட்டு அறுப்பவராவர்:
(அழிப்பவராவர்.)
(குறிப்பு)
விநயம்-ஒழுக்கமுடைமை, அவ்விநயம்-ஒழுக்கமின்மை. ‘மும்மூடமும்’
என உம்மையை விரிக்க அவ்விநய மாறாவன-அச்சம், ஆசை, லௌகிகம், அன்புடைமை,
பாசண்டம், தீத்தெய்வ வணக்கம், மும்மூடம்: உலக மூடம், பாசண்டி மூடம்,
தேவமூடம். எண்மயம்-அறிவுச்செருக்கு, புகழ்ச்செருக்கு, குலச்செருக்கு,
வீரச்செருக்கு, தவச்செருக்கு, செல்வச்செருக்கு, ஆகூழ்ச்செருக்கு, அழகுச்செருக்கு,
எண்வகையுறுப்பு ஐயமின்மை, அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கின்மை, பழிநீக்கல்,
நன்னெறியில் நிற்றல், அருளுடைமை, அறப்பொருளை விளக்கல். இவற்றையெல்லாம்
பின்வருஞ் செய்யுட்களில் விளங்கக்
காணலாம்.
(59) |
|
|
|
|
|
- அச்சமே ஆசை உலகிதம்
அன்புடைமை
மிக்கபா சண்டமே தீத்தெய்வ-மெச்சி வணங்குத லவ்விநயம் என்பவே
மாண்ட குணங்களிற் குன்றா தவர்.
(பதவுரை) மாண்ட குணங்களில்
குன்றாதவர்-மாட்சிமைப்பட்ட குணங்களால் குறையாத நிறைந்த பெரியோர்கள்,
அச்சம்-அச்சமும், ஆசை-ஆசையும்,
உலகிதம்-லௌகிகமும், அன்புடைமை-அன்புடைமையும்,
மிக்க பாசண்டம்-இழிவு மிக்க புறச்சமயமும்,
தீத்தெய்வம்-கொடுந்தெய்வத்தை, மெச்சி
வணங்குதல்-துதித்து வணங்குதலும், அவ்விநயம்
என்ப-விநயமல்லாததென்று சொல்லுவர்.
(குறிப்பு)
ஏ: அசைநிலைப் பொருளன. என்ப: உயர்திணைப் பலர்பால்
எதிர்கால
வினைமுற்று (60) |
|
|
|
|
|