| 111 முதல் 120 வரை 
 | 
		
				|  | 
					
			
			| 
  
  
    | 111. பெண்ணென்றால் விண்ணும் 
      நிறையும் |  
 
  
  
    | 
        (பதவுரை) 
      கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால்-மூதேவி போன்ற ஒருத்தியைப் 
      பாடுமிடத்து, ஞாலத்தார் விரைந்து ஓடி வேட்டு அவாய்க் 
      கேட்பர்-உலகத்தவர் விரைந்து சென்று அதனை மிக விரும்பி கேட்பர், 
      கோட்டிலா ஓதுமின்-மாறுபாடில்லாத அற நூல்களைக் கற்பீர்களாக, 
      ஓதி அடங்குமின்-கற்று அவற்றிற்குத் தகவொழுகுங்கள், 
      என்னுஞ் சொல்-என்று பெரியோர் கூறுஞ்சொல், கூதற்குக் 
      கூதிரனைத்து-முன்னமே குளிரால் நடுங்கிய உடலினிடத்தே வீசிய குளிர்காற்றை 
      யொக்கும் (வெறுக்கப்படும்.
      (குறிப்பு) 
      கிழத்தியைப் பாடுங்கால்: பெண்ணொருத்தி பாடுமிடத்து எனலாம்.  இப்பொருள் முதல் 
      வேற்றுமையினிடத்தே இரண்டாம் வேற்றுமை மயக்கம் கொள்க.  கோட்டில்லா (தன) 
      வினையாலணையும் பெயர்.  கூதற்கு; வேற்றுமை மயக்கம்.  
      விண்-ஆகாயம்.                          
      (111)வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி 
        ஞாலத்தார்கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால்-கோட்டில்லா
 ஓதுமின் ஓதி 
        அடங்குமின் என்னுஞ்சொல்
 கூதற்குக் கூதி ரனைத்து.
 
 |  |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | 112. உணவொடுங்கினால் 
      உயிரொடுங்கும் |  
 
  
  
    | 
        (பதவுரை) 
      இறை இறையின் சந்தித்து-உறுப்புக்களின் மூட்டு வாய்களை 
      ஒன்றோடொன்று பொருத்தி, என்பொடு ஊன்சார்த்தி-எலும்போடு தசையை 
      இணைத்து, முறையின்-முறையே, நரம்பு எங்கும் 
      யாத்து-நரம்பால் எல்லாவிடங்களையும் உறுதியாகக் கட்டி, நிறைய 
      அவாப் பெய்த பண்டியை-ஆசையாகிய சரக்கை நிறைய ஏற்றிய உடலாகிய வண்டியை, 
      ஊர்கின்ற பாகன்-ஏறிச் செலுத்துகின்ற உயிராகிய பாகன், 
      புகாச் சுருக்கில் பூட்டாவிடும்-ஆகாரத்தைக் குறைத்தால் அதனைச் 
      செலுத்துதலைவிட்டு நீக்குவான்.
      (குறிப்பு) ''அன்ன 
      மொடுங்கினால் ஐந்து மொடுங்கும்'' என்ற பழமொழியின் பொருளை இங்குக் காண்க.  
      பூட்டுதல்: பொருத்திச் 
      செலுத்துதல்.                          
      (112)இறையிறை யின்சந்தித் தென்பொடூன் 
        சார்த்திமுறையின் நரம்பெங்கும் யாத்து-நிறைய
 அவாப்பெய்த பண்டியை 
        ஊர்கின்ற பாகன்
 புகாச்சுருக்கில் பூட்டா விடும்.
 
 |  |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
 
  
  
    | 
        (பதவுரை) 
      ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கி-பொருள்கள்மேல் வேட்கையையும் 
      உற்றார்பால் தளைப்பட்ட அன்பையும், மனைவிபால் வைத்த காதலையும் உள்ளே 
      அடக்கி, பூசிப்பொதிந்த-தசையால் கட்டிய, புலால் 
      உடம்பு-புலால் நாற்றம் வீசும் உடம்பானது, கூற்றத்து எயிறு உற்று இடை 
      முரிந்தக்கால்-எமனது பல்லில் சிக்கி அழிந்தவிடத்து, ஊசல் கயிறு 
      அற்றால் போலக் கிடக்கும்-கயிறற்றவிடத்து ஊஞ்சலே போல அது செயலற்று 
      வீழ்ந்து கிடக்கும்.
      (குறிப்பு) ஏ: 
      அசைநிலை.  முரிந்தக்கால்: எதிர்கால வினையெச்சம்.   
      (113)ஆசையும் பாசமும் அன்வும் அகத்தடக்கிபூசிப் 
        பொதிந்த புலாலுடம்பு-ஊசல்
 கயிறற்றாற் போலக் கிடக்குமே கூற்றத்
 தெயிறுற் 
        றிடைமுரிந்தக் கால்.
 
 |  |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | 114. உலகவாழ்க்கை 
      உறுதியன்று |  
 
  
  
    | 
        (பதவுரை) 
      ஒருவன் மறந்துவாழும் இம்மாயம் ஆம் வாழ்க்கை- ஒருவன் தனது ஆன்ம 
      சொரூபத்தை மறந்து வாழ்வதலாகிய இப்பொய்யாகிய வாழ்க்கை, ஒருவன் அறிந்து 
      வாழுமேல் இல்லை-இவன் ஆன்மவடிவை அறிந்து வாழ்வானாயின் இல்லையாகும்; 
      ஒருவன் செறிந்து ஊற்றம் இறந்து-ஒருவன் மிகவும் பற்றைவிட்டு, 
      உறுதிகொள்ளாக்கால்-ஞானத்தையடையானாயின், கூற்றம் 
      இடைகொடுத்த நாள்-அவன் கூற்றினிடம் அகப்படும் ஞான்று, ஓ 
      கொடிதே-அனுபவிக்கும் துன்பம் மிகக்கொடியதாகும்.
      (குறிப்பு) 
      அழியுந்தன்மைத்தாய உடம்பு உள்ளபொழுதே அழிவல்லாத ஞானத்தை முயற்சியா 
      லடையவேண்டுமென்பது கருத்து. ஓ, ஏ: இரக்கப் பொருளன.   
                            
      (114)மறந்தொருவன் வாழுமிம் மாயமாம் 
        வாழ்க்கைஅறிந்தொருவன் வாழுமேல் இல்லை--செறிந்தொருவன்
 ஊற்றம் இறந்துறுதி 
        கொள்ளாக்கால் ஓகொடிதே
 கூற்றம் இடைகொடுத்த  
        நாள்.
 
 |  |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | 115. இவ்வுலகம்  
      ஏமாற்றமாகிய மாய வித்தையாம் |  
 
  
  
    | 
        (பதவுரை) 
      தோற்றமும் சம்பிரதம்-பிறப்பும் சித்தே, துப்புரவும் 
      சம்பிரதம்-பிறந்த உயிர் உலகப் பொருள்களை அனுபவித்தலும் சித்தே, 
      கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம்-உலகில் வாழும் உயிர்களை எமன் 
      கவர்ந்துபோதலும் சித்தே, கற்று அறிந்தார்-அற நூல்களை 
      ஓதியுணர்ந்தவர்கள், தோற்றம் கடைப்பட்டவா றறிந்து-பிறப்பின் 
      இழிவை யறிந்து-படைப்பட்ட நாயகனே போன்று-போர் முனையை அடைந்த 
      சேனாதிபதியேபோல, துஞ்சார்-சோர்வில்லாமல் பிறப்பினை யறுக்க 
      முயல்வர்.
      (குறிப்பு) 
      சித்து-வியத்தகு செய்தி; மாயவித்தை. ஏ: அசைநிலை, கடை: இறுதியாகிய 
      இழிவு.      (115)தோற்றமும் சம்பிரதம் துப்புரவுஞ் 
        சம்பிரதம்     கூற்றமும் கொள்ளுங்கால் 
        சம்பிரதம்--தோற்றம்
 கடைப்பட்ட வாறறிந்து கற்றறிந்தார் 
        துஞ்சார்
 படைப்பட்ட நாயகனே போன்று
 
 
 |  |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | 116. சின்னாள் வாழ்க்கையைத் 
      தெளியார் |  
 
  
  
    | 
        (பதவுரை) 
      தெரிவு இல் இளமையும்-பொருள்களை ஆராய்தற்கேலாத 
      இளமைப்பருவத்தையும், தீப்பிணியும்-கொடிய நோய்களையும், 
      மூப்பும்-கிழத்தன்மையையும், 
      பிரிவும்-உற்றாரைப் பிரிதலையும், 
      துயிலும்-மரணத்தால் வருந் துன்பங்களையும், 
      உறீஇ-அடைந்து, பருவந்து-வருந்தி, 
      பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு- பயனற்ற சின்னாள் 
      வாழ்க்கைக்கு, வித்துக்குற்று உண்பார் பலர்-உணவை விரும்பும் 
      வேளாளன் அறிவின்றி வித்தையும் அழித்து உண்பதைப்போல வீடுபேற்றுக்கு வித்தாய 
      அறத்தையே அழித்து வாழ முயல்பவரே உலகிடைப் பலராவர்.
      (குறிப்பு)  
      ''நனிபேதையே நயனில் கூற்றம்'' என்ற புறநானூற்றுச் செய்யுளில் ''விரகின்மையின் 
      வித்தட்டுண்டனை'' என்னுந் தொடரை நோக்குக. உறீஇ: 
      சொல்லிசையளபெடை.      (116)தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்பிரிவுந் 
        துயிலும் உறீஇப்--பருவந்து
 பத்தெட்டு நாளைப் பயனிலா 
        வாழ்க்கைக்கு
 வித்துக்குற் றுண்பார் பலர்.
 
 |  |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | 117. மதியிலா மாந்தரின் 
      மயக்கம்
 |  
 
  
  
    | 
        (பதவுரை) பிறப்பு 
      இறப்பு மூப்பு பிணி என்று இந்நான்கும்- பிறப்பு இறப்பு மூப்பு நோய் என்ற 
      இந்நான்கினையும், மதியிலா மாந்தர் மறப்பர்-அறிவில்லாத மக்கள் மறந்து வாழ்வர்; 
      (அவர் அவைகளை மறத்தற்குக் காரணமாய) குறைகூடாச் செல்வம் கிளைபொருள் காமம் என்று 
      இந்நான்கும்-குறையாத செல்வம், சுற்றம், மக்கள், காதன் மனைவி ஆகிய இந்நான்கும், 
      பொல்லாப் பொறியறுக்கப்பட்டு (போம்)-இடையே தீயூழ்வர ஒழிந்துபோயினும்போம், 
      ஆதலால் அறிவுடையார் பிறப்பு முதலியவற்றை மறவார்.
      (குறிப்பு)   
      குறைக்கூடா: விரித்தல் விகாரம். ''குறைகூடாச் செல்வம் கிளைபொருள் காமம் என்றிந் 
      நான்கும் பொல்லாப் பொறியறுக்கப்பட்டுப் போமென்னும் மதியிலாமாந்தர் பிறப்பிறப்பு 
      மூப்புப் பிணியென்றிந் நான்கும் மறப்பர்'' எனக் கொண்டு கூட்டலுமாம். பொருள்-மக்கள்; 
      ''தம்பொரு ளென்பதம் மக்கள்'' என்பதனாற் 
      கொளக.        (117)பிறப்பிறப்பு மூப்புப் பிணியென்றிந் 
        நான்கும்மறப்பர் மதியிலா மாந்தர்--குறைக்கூடாச்
 செல்வம் கிளைபொருள் 
        காமமென் றின்நான்கும்
 பொல்லாப் 
        பொறியறுக்கப்பட்டு
 
 |  |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | 118. உடற்குறுதி ஒப்பற்ற 
      தவமே |  
 
  
  
    | 
        (பதவுரை) மூப்பு பிணியே 
      தலைப்பிரிவு நல்குரல் சாக்காடும் எல்லாம்-மூப்பு நோய் மனைவி மக்களைப் 
      பிரிதல் வறுமை மரணம் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் அவற்றின் காரணங்களையும், 
      சலமிலவாய் நோக்கீர்-பொய்யின்றி மெய்யாக ஆராயமாட்டீர், 
      பருந்துக்கு இரை ஆம்-கழுகுகளுக்கு இரை ஆகிய, இவ் 
      யாக்கையைப் பெற்றால்-இவ்வுடலைப் பெற்றால், மருந்து மறப்பதோ 
      மாண்பு-இனி உடலையடையாவாறு தடுக்கும் மருந்தாகிய தவத்தினை மறப்பது 
      பெருமையாகுமோ? ஆகாது.மூப்புப் பிணியே தலைப்பிரிவு நல்குரவுசாக்காடு 
        மெல்லாம் சலமிலவாய்--நோக்கீர்
 பருந்துக் கிரையாமிவ் யாக்கையைப் பெற்றால்
 மருந்து மறப்பதோ மாண்பு.
 
 (குறிப்பு) 
      ''பருந்துக் கிரையா மிவ் யாக்கையைப் பெற்றால், நோக்கீர், மறப்பதோ 
      மாண்பு'' எனக் கூட்டிப் பொருள் காணலுமாம். யாக்கை-உடல்: தொழிலாகுபெயர். 
      ஓ:எதிர்மறை வினா. (118)
 |  |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | 119. மெய்யுணர்வில்லார் மிக 
      நலிவடைவர் |  
 
  
  
    | 
        (பதவுரை) துறந்து எய்தும் 
      இன்பத்து இயல்பு அறியாதார்-பற்று விடுவதனால் அடையும் இன்பத்தின் தன்மையை 
      அறியாதவர்கள், நீக்க அருநோய்-தீர்த்தற் கரியநோயும், 
      மூப்பு-கிழத்தன்மையும், தலைப்பிரிவு-மனைவி 
      மக்களைப் பிரிதலும், நல்குரவு-வறுமையும், 
      சாக்கடு-மரணமும், என்ற ஐந்து களிறு உழக்க-ஆகிய 
      ஐந்து யானைகளும் வருத்த, போக்க அரிய துன்பத்துள் துன்பம் 
      உழப்பர்-நீக்குதற்கு அரிய மிகப்பெருந் துன்பத்தினை 
      யனுபவிப்பார்கள்.
      (குறிப்பு) 
      ''களிறு உழக்க'' என்பது குற்றுகரப் புணர்ச்சி. சாக்காடு: தொழிற்பெயர்; 
      காடு, தொழிற்பெயர் விகுதி. (119)நீக்கருநோய் மூப்புத் தலைப்பிரிவு 
        நல்குரவுசாக்காடென் றைந்து களிறுழக்கப்--போக்கரிய
 துன்பத்துள் துன்பம் 
        உழப்பர் துறந்தெய்தும்
 இன்பத் தியல்பறி யாதார்.
 |  |  | 
		
			|  |  |  | 
					
			
			| 
  
  
    | 120. இறத்தல் உறுதி : 
      துறத்தல் பெறுதி !  |  
 
  
  
    | 
        (பதவுரை) (நெஞ்சே) 
      எக்காலும் சாதல் ஒருதலையே - எப்பொழுதாவது இறப்பது உறுதி, 
      யான் உனக்கு புக்கில் நிறைய தருகிலேன்-நான் உனக்கு அழியும் 
      தன்மைத்தாகிய உடலை மேலும் மேலும் கொடுத்துக்கொண்டிரேன், மிக்க அறிவினை 
      வாழ்த்தி-உயர்ந்தோனாகிய அருகக்கடவுளைத் துதித்து, அடவி 
      துணையா-வனத்தைத் துணையாகக் கருதியடைந்து, துறத்தல்மேற் சார்தல் 
      தலை-துறவறத்தினை யடைந்து வாழ்தல் சிறந்ததாகும்.
      (குறிப்பு) 
      புகு+இல்=புக்கில்: உயிர்புகும் வீடு: உடல், துணையா: ஈறு கெட்ட 
      செயவென்வாய்பாட்டு வினையெச்சம். ஒரு தலை-உறுதி; ஒரு சொன்னீர்மைத்து. (120)எக்காலும் சாதல் ஒருதலையே யானுனக்குப்புக்கில் 
        நிறையத் தருகிலேன்--மிக்க
 அறிவனை வாழ்த்தி அடவி துணையாத்
 துறத்தன்மேற் 
        சார்தல் தலை.
 |  |  | 
		
			|  |  |  |