தொடக்கம் |
தேடுதல் |
|
|
விக்கிரம சோழனுலா
சோழர் குலம் தோன்றிய வழிவழிமன்னர்
|
1
5 |
சீர்தந்த தாமரையாள் கேள்வன் திருஉருவக்
கார்தந்த உந்திக் கமலத்துப் - பார்தந்த
ஆதிக் கடவுள் திசைமுகனும் ஆங்கு அவன்தன்
காதல் குலமைந்தன் காசிபனும் - மேதக்க
மைஅறு காட்சி மரீசியும் மண்டிலம் சேர்
செய்ய தனிஆழித் தேரோனும் - மையல்கூர் |
|
|
உரை
|
|
|
|
|
10 |
சிந்தனை யாவிற்கும் முற்றத் திருத்தேரின்
மைந்தனை ஊர்ந்த மனுவோனும் - பைந்தடத்து
ஆடுதுறையில் அடுபுலியும் புல்வாயும்
கூட நீர் ஊட்டிய கொற்றவனும் - நீடிய
மாக விமானம் தனிஊர்ந்த மன்னவனும்
போக புவிபுரந்த பூபதியும் - யாகத்துக்
|
|
|
உரை
|
|
|
|
|
20 |
கூற அரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத்
தேற வழக்கு உரைத்த செம்பியனும் - மாறு அழிந்து
ஓடி மறலி ஒளிப்ப முதுமக்கள்
சாடி வகுத்த தராபதியும் - கூடார்தம்
தூங்கும் எயில் எறிந்த சோழனும் மேல்கடலில்
வீங்குநீர் கீழ்கடலில் விட்டோனும் - ஆங்குப்
பிலம் அதனில் புக்குத் தன் பேரொளியால் நாகர்
குலமகளைக் கைப்பிடித்த கோவும் - உலகு அறியக் |
|
|
உரை
|
|
|
|
|
|
காக்கும் சிறுபுறவுக்காகக் களிகூர்ந்து
தூக்கும் துலை புக்க தூயோனும் - மேக்குயரக்
கொள்ளும் குடகக் குவடு ஊடு அறுத்து இழியத்
தள்ளும் திரைப்பொன்னி தந்தோனும் - தெள்ளருவிச்
சென்னிப் புலியே திருத்திக் கிரி திரித்துப்
பொன்னிக் கரைகண்ட பூபதியும் - இன்னருளின் |
|
|
உரை
|
|
|
|
|
30 |
மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும் - மீதெலாம்
எண்கொண்ட தொண்ணூற்றின் மேலும் இருமூன்று
புண்கொண்ட வென்றிப் புரவலனும் - கண்கொண்ட
கோது இலாத் தேறல் குனிக்கும் திருமன்றம்
காதலால் பொன்வேய்ந்த காவலனும் - தூதற்காப் |
|
|
உரை
|
|
|
|
|
40 |
பண்டு பகல் ஒன்றில் ஈர் ஒன்பது சுரமும்
கொண்டு மலைநாடு கொண்டோனும் - தண்டினால்
கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு
கங்கா புரி புரந்த கற்பகமும் - வங்கத்தை
முற்று முரண்அடக்கி மும்மடிபோய்க் கல்யாணம்
செற்ற தனி ஆண்மைச் சேவகனும் - பற்று அலரை
வெப்பத்து அடுகளத்து வேழங்கள் ஆயிரமும்
கொப்பத்து ஒரு களிற்றால் கொண்டோனும் - அப்பழநூல் |
|
|
உரை
|
|
|
|
|
|
பாடு அரவத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால்
ஆடு அரவப் பாயல் அமைத்தோனும் - கூடலார்
சங்கமத்துக் கொள்ளும் தனிப்பரணிக்கு எண் இறந்த
துங்க மத யானை துணித்தோனும் - அங்கு அவன்பின்
காவல் புரிந்து அவனி காத்தோனும் என்று இவர்கள்
பூவலய முற்றும் புரந்ததன்பின் - மேவலர்தம் |
|
|
உரை
|
|
|
|
|
விக்கிரமசோழன்
பிறப்பும் சிறப்பும்
|
50
|
சேலைத் துரந்து சிலையைத் தடிந்து இருகால்
சாலைக் களம் அறுத்த தண்டினான் - மேலைக்
கடல்கொண்டு கொங்கணமும் கன்னடமும் கைக்கொண்டு
அடல்கொண்ட மாராட்டு அரசை - அடலை
இறக்கி வடவரையே எல்லையாத் தொல்லை
மறக்கலியும் சுங்கமும் ஆற்றி - அறத்திகிரி
வாரிப் புவனம் வலமாகத் தந்தளிக்கும்
ஆரின் பொலிதோள் அபயற்குப் - பார்விளங்கத்
தோன்றிய விக்கிரம சோழன் தொடைத் தும்பை |
|
|
உரை
|
|
|
|
|
60
|
மூன்று முரசு முகில் முழங்க - நோன் தலைய
மும்மைப் புவனம் புரக்க முடிகவித்துச்
செம்மைத் தனிக்கோல் திசை அளப்ப - வெம்மை
விட உட் படுத்து விழுக் கவிகை எட்டுக்
கடவுள் களிறும் கவிப்பச் - சுடர்சேர்
இணைத் தார் மகுடம் இறக்கி அரசர்
துணைத் தாள் அபிடேகம் சூடப் - பணைத்து ஏறு
|
|
|
உரை
|
|
|
|
|
70 |
நீர் ஆழி ஏழும் நில ஆழி ஏழும் தன்
போர் ஆழி ஒன்றால் பொதுநீக்கிச் - சீர் ஆழி
மேய திகிரி விரி மேகலை அல்குல்
தூய நிலமடந்தை தோள்களினும் - சாயலின்
ஓதும் உலகங்கள் ஏழும் தனித்து உடைய
கோதில் குலமங்கை கொங்கையினும் - போதின்
நிறைகின்ற செல்வி நெடுங்கண்களினும்
உறைகின்ற நாளில் ஒரு நாள் - அறைகழல் கால் |
|
|
உரை
|
|
|
|
|
துயில்
எழுதல்
|
80 |
தென்னர் திறை அளந்த முத்தில் சிலபூண்டு
தென்னர் மலை ஆரச் சேறு அணிந்து - தென்னர்
வரவிட்ட தென்றல் அடிவருட வாள்கண்
பொரவிட்ட பேராயம் போற்ற - விரவிட்ட
நித்திலப் பந்தர்க்கீழ் நீள் நிலாப் பாயல் மேல்
தொத்தலர் மாலைத் துணைத்தோளும் - மைத்தடம்
கண்ணு முலையும் பெரிய களி அன்னம்
எண்ணும் உலகங்கள் ஏழ் உடைய பெண் அணங்கு
பெய்த மலர் ஓதிப் பெண் சக்ரவர்த்தியுடன்
எய்திய பள்ளி இனிது எழுந்து - பொய்யாத
|
|
|
உரை
|
|
|
|
|
கடவுள்
வணக்கம்
|
|
பொன்னிப் புதுமஞ்சனம் ஆடிப் பூசுரர்கைக்
கன்னித் தளிர் அறுகில் காப்பு அணிந்து - முன்னை
மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மௌலிப்
பிறைக்கொழுந்தை வைத்த பிரானைக் - கறைக்களத்துச்
செக்கர்ப் பனி விசும்பைத் தெய்வத் தனிச்சுடரை
முக்கண் கனியை முடிவணங்கி - மிக்கு உயர்ந்த |
|
|
உரை
|
|
|
|
|
அணிகலன்
புனைதல்
|
90
100 |
தானத் துறை முடித்துச் சாத்தும் தகைமையன
மானக் கலன்கள் வர அருளித் - தேன்மொய்த்துச்
சூழும் மலர் முகத்துச் சொல் மாமகளுடனே
தாழும் மகரக் குழைதயங்க - வாழும்
தடமுலைப் பார்மடந்தை தன்னுடனே தோளில்
சுடர்மணிக் கேயூரம் சூழப் - படரும்
தணிப்பில் பெருங்கீர்த்தித் தையலுடனே
மணிக்கடகம் கையில் வயங்கப் - பிணிப்பின்
முயங்கும் திருவுடனே முந்நீர் கொடுத்த
வயங்கு மணிமார்பின் மல்க - உயங்கா
வரும் கொற்றம் ஆக்கும் அணங்கினுடனே
மருங்கில் திருவுடையாள் வாய்ப்பத் - திருந்திய
அண்ணல் படிமத்து அரும்பேர் அணி அணிந்து
வண்ணத்து அளவில் வனப்பு அமைத்துக் - கண்நுதலோன் |
|
|
உரை
|
|
|
|
|
அரண்மனைப்
புறம் வருதல்
|
|
காமன் சிலைவாங்க வாங்கிய கட்டழகு
தாம முடிவணங்கத் தந்தனைய - காமருபூங்
கோலத்தொடு பெயர்ந்து கோயில் புறம் நின்று
|
|
|
உரை
|
|
|
|
|
பட்டத்து
யானைச் சிறப்பு
|
110
|
காலத்து அதிரும் கடாக் களிறு - ஞாலத்துத்
தானே முழங்குவது அன்றித் தனக்கு எதிர்
வானே முழங்கினும் அவ்வான் தடவி - வானுக்கு
அணியு மருப்பும் அடல் கையும் இன்மைத்
தணியும் யமராச தண்டம் - தணியாப்
பரிய பெருங்கோடு இணைத்துப் பணைத்தற்கு
அரியது ஒருதானே ஆகிக் - கரிய
மலைக்கோடு அனைத்து மடித்து இடியக் குத்தும்
கொலைக்கோட்டு வெம்கால கோபம் - அலைத்து ஓட
|
|
|
உரை
|
|
|
|
|
120
|
ஊறு மதம் தனதே ஆக உலகத்து
வேறு மதம்பொறா வேகத்தால் - கூறு ஒன்றத்
தாங்கிப் பொறை ஆற்றாத் தத்தம் பிடர்நின்றும்
வாங்கிப் பொதுநீக்கி மண்முழுதும் - ஓங்கிய
கொற்றப் புயம் இரண்டால் கோமான் அகளங்கன்
முற்றப் பரித்ததன் பின் முன்புதாம் - உற்ற
வருத்தம் அற மறந்து மாதிரத்து வேழம்
பருத்த கடாம் திறந்து பாயப் - பெருக்கத்
துவற்றும் மதுரச் சுவடு பிடித்து ஓடி
அவற்றின் அபரம் கண்டு ஆறி - இவற்றை
அளித்தனன் எம்கோமான் ஆதலால் இன்று
களித்தன என்று உவக்கும் காற்று - நெளித்து இழிய |
|
|
உரை
|
|
|
|
|
|
வேற்றுப் புலத்தை மிதித்துக் கொதித்து அமரில்
ஏற்றுப் பொருமன்னர் இன்னுயிரைக் - கூற்றுக்கு
அருத்தும் அயிராபத நின்றதனை
இருத்தும் பிடி படியா ஏறித் - திருத்தகக் |
|
|
உரை
|
|
|
|
|
130
|
கொற்றக் கவிகை நிழற்றக் குளிர்ந்து இரட்டைக்
கற்றைக் கவரிகளின் கால் அசைப்ப - ஒற்றை
வலம்புரி ஊத வளைக்குலம் ஆர்ப்பச்
சிலம்பு முரசம் சிலம்பப் - புலம்பெயர்ந்து
வாள் படை கொட்ப மறமன்னவர் நெருங்கக்
கோட்புலிக் கொற்றக் கொடி ஓங்கச் - சேட்புலத்துத் |
|
|
உரை
|
|
|
|
|
உலாவில்
உடன் வருவோர்
|
140
150 |
தென்னரும் மாளுவரும் சிங்களரும் கொங்கணத்து
மன்னரும் தோற்க மலைநாடர் - முன்னம்
குலையப் பொருது ஒருநாள் கொண்ட பரணி
மலையத் தரும் தொண்டைமானும் - பலர் முடிமேல்
ஆர்க்கும் கழல்கால் அனகன் தனது அவையுள்
பார்க்கும் மதிமந்த்ர பாலகரில் - போர்க்குத்
தொடுக்கும் கமழ்தும்பை தூசினொடும் சூடக்
கொடுக்கும் புகழ்முனையர் கோனும் - முடுக்கரையும்
கங்கரையும் மாராட் டரையும் கலிங்கரையும்
கொங்கரையும் ஏனைக் குடகரையும் - தம்கோன்
முனியும் பொழுது முரிபுருவத்தோடு
குனியும் சிலைச் சோழகோனும் - சனபதிதன்
தோளும் கவசமும் சுற்றமும் - கொற்றப் போர்
வாளும் வலியும் மதிஅமைச்சும் - நாளுமா
மஞ்சைக் கிழித்து வளரும் பெரும் புரிசைக்
கஞ்சைத் திருமறையோன் கண்ணனும் - வெம்சமத்துப் |
|
|
உரை
|
|
|
|
|
160
170
180
|
புல்லாத மன்னர் புலால் உடம்பு பேய்வாங்க
ஒல்லாத கூற்றம் உயிர் வாங்கப் - புல்லார் வந்து
ஆங்கு மடமகளிர் தத்தம் குழைவாங்க
வாங்கும் வரிசிலைக்கை வாணனும் - வேங்கையினும்
கூடார் விழிஞத்தும் கொல்லத்தும் கொங்கத்தும்
ஓடா இரட்டத்தும் ஒட்டத்தும் - நாடாது
அடி எடுத்து வெவ்வேறு அரசு இரிய வீரக்
கொடி எடுத்த காலிங்கர்கோனும் - கடி அரணச்
செம்பொன் பதணம் செறிஇஞ்சிச் செஞ்சியர்கோன்
கம்பக் களியானைக் காடவனும் - வெம்பிக்
கலக்கிய வஞ்சக் கலியாணர் போரில்
விலக்கிய வேணாடர் வேந்தும் - தலைத்தருமம்
வாரிக் குமரிமுதல் மந்தாகினி அளவும்
பாரித்தவன் அனந்த பாலனும் - பேரமரின்
முட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலும்
மட்டித்த மால்யானை வத்தவனும் - மட்டை எழக்
காதிக் கருநாடர் கட்டரணம் கட்டு அழித்த
சேதித் திருநாடர் சேவகனும் - பூதலத்து
முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல்
கட்டிய காரானைக் காவலனும் - ஒட்டிய
மான அரசர் இரிய வடகலிங்கத்
தானை துணித்த அதிகனும் - மீனவர்தம்
கோட்டாறும் கொல்லமும் கொண்ட கொடைநுளம்பன்
வாள் தார் மதயானை வல்லவனும் - மோட்டரணக்
கொங்கைக் குலைத்துக் குடகக் குவடு ஒடித்த
செங்கைக் களிற்றுத் திகத்தனும் - அங்கத்து
வல்லவனும் கோசலனும் மாகதனும் மாளுவனும்
வில்லவனும் கேரளனும் மீனவனும் - பல்லவனும்
என்னும் பெரும் போர் இகல்வேந்தர் மண்டலிகர்
முன்னும் இருமருங்கும் மொய்த்து ஈண்டப் - பன்மணிச் |
|
|
உரை
|
|
|
|
|
பரத்தையர்
பார்க்கும் சிறப்பு
|
190
|
சோதி வயிரம் அடர்க்கும் சுடர்க்குழையார்
வீதி குறுகுதலும் மேல் ஒருநாள் - மாதவத்தோன்
சார்ந்த பொழுது அனங்கன் தன்னை அறிவித்த
பூந்துவரை அந்தப்புரம் போன்றும் - ஏந்திப்
பரக்கும் கலை அல்குல் பாவையரே ஆணை
புரக்கும் திருநாடு போன்றும் - வரக்கருதா
ஏனை முனிக்குறும்பு கொல்ல இகல்மாரன்
சேனை திரண்ட திரள்போன்றும் - கானல் அம்
கண்டன் மணல் குன்றத்து அன்னக் கணம் போன்றும்
கொண்டலின் மின்னுக் குழாம் போன்றும் - மண்டும்
திரைதொறும் தோன்றும் திருக்குழாம் போன்றும்
வரைதொறும் சேர்மயில்கள் போன்றும் - விரைவினராய்
இந்து நுதல்வெயர்ப்ப எங்ஙணும் கண்பரப்பிச்
சிந்தை பரப்பித் தெரு எங்கும் - வந்து ஈண்டி |
|
|
உரை
|
|
|
|
|
|
உத்தி சுடர ஒளிமணிச் சூட்டு எறிப்பப்
பத்தி வயிரம் பரந்தெறிப்ப - முத்தின்
இணங்கும் அமுத கலசங்கள் ஏந்தி
வணங்கு தலையினராய் வந்து - கணங்கொண்டு |
|
|
உரை
|
|
|
|
|
200
|
பார்க்கும் கொடுநோக்கு நஞ்சு உறைப்பக் கிஞ்சுக வாய்
கூர்க்கும் எயிறு வெறும் கோள் இழைப்ப - வேர்க்க
வரைகொள் நெடுமாடக் கீழ்நிலையின் மல்கி
உரக வரமகளிர் ஒப்பர் - விரல்கவரும் |
|
|
உரை
|
|
|
|
|
|
வீணையும் யாழும் குழலும் விசிமுழவும்
பாணி பெயர்ப்பப் பதம் பெயர்த்துச் - சேண் உயர்
மஞ்சு இவர் வெண்பளிங்கு மாடத்து இடைநிலையின்
விஞ்சையர் மாதர் என மிடைவார் - அஞ்சனவேல் |
|
|
உரை
|
|
|
|
|
210 |
கண்ணில் சிறிதும் இமையாத காட்சியும்
மண்ணில் பொருந்தா மலர் அடியும் - தண்மலர்
வாடா நறுஞ்செவ்வி மாலையும் கொண்டு அழகு
வீடா நிலா முற்ற மேனிலையில் - கூடி
உருவின் ஒளியின் உணர்வின் உரையின்
பொருவில் அரமகளிர் போல்வார் - அருகு அணைந்து |
|
|
உரை
|
|
|
|
|
220
|
சீர் அளவில்லாத் திருத்தோள் அயன் படைத்த
பார் அள வல்ல பணைப்பு என்பர் - பாருமின்
செய்ய ஒரு திருவே ஆளும் சிறுமைத்தோ
வையம் உடைய பிரான் மார்பு என்பார் - கையிரண்டே
ஆனபோது அந்த முருகவேள் அல்லன் இவன்
வேனில் வேள் கண்டீர் என மெலிவார் - யான் எண்ணும்
எண்ணுக்கு இசைய வருமே இவன் என்பார்
கண்ணில் கருணைக் கடல் என்பார் - மண் அளிக்கும்
ஆதி மனுகுலம் இவ் அண்ணலான் மேம்படுகை
பாதியே அன்றால் எனப் பகர்வார் - தாது எடுத்த
கொங்கை பசப்பார்தம் கோல்வளை காப்பார்போல்
செங்கை குவிப்பார் சிலர்செறிய - அங்கு ஒருத்தி |
|
|
உரை
|
|
|
|
|
பேதை
|
230
|
வந்து பிறந்து வளரும் இளந்திங்கள்
கொந்து முகிழாக் கொழுங்கொழுந்து - பைந்தழைத்
தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல்
வாகை புனைய வளர்கரும்பு - கோகிலத்தின்
பிள்ளை இள அன்னப் பேடை பிறந்து அணிய
கிள்ளை பவளம் கிளைத்த கிளை - கள்ளம்
தெரியாப் பெருங்கண் சிறுதேறல் தாயர்
பிரியாப் பருவத்துப் பேதை - பரிவோடு |
|
|
உரை
|
|
|
|
|
240
|
பாவையு மானும் மயிலும் பசுங்கிளியும்
பூவையும் அன்னமும் பின்போதக் - காவலன்
பொன்னிப் புகார்முத்தின் அம்மனையும் தென்னாகை
நல் நித்திலத்தின் நகைக்கழங்கும் - சென்னிதன்
கொற்கைக் குளிர்முத்த வல்சியும் சோறு அடுகை
கற்கைக்கு வேண்டுவன கைப்பற்றிப் - பொற்கொடியார்
வீதி புகுந்து விளையாடும் எல்லைக்கண்
ஆதி யுகம்வந்து அடிக்கொள்ள - மேதினியில்
ஊன்று கலிகடந்த உத்துங்க துங்கன் தன்
மூன்று முரசு முழங்குதலும் - வான் துணையாய்த்
தாயர் வரவந்து தாயர் தொழத்தொழுது
தாயர் மொழிந்தனவே தான்மொழிந்தாள் - சேயோன் |
|
|
உரை
|
|
|
|
|
250
|
படியின் மதியும் பகலவனும் தோற்கும்
முடியில் ஒருகாலும் மூளா - வடிவின்
மகிழ்ந்த மலராண் மலர்க்கண்ணும் நெஞ்சு
நெகிழ்ந்த திருநோக்கில் நேரா - முகிழ்ந்து
சிரிக்கும் திருப்பவளச் சேய் ஒளி ஊடு ஆடா
விரிக்கும் திருநிலவில் வீழா - பரிக்கும்
உலகம் பரவும் திருப்புருவத்து ஓடா
திலக முக அம்புயத்தில் சேரா - பலவும்
திசையை நெருக்கும் திருத்தோளில் செல்லா
இசையுந் திருமார்பத் தெய்தா - வசையிலாக்
கைம்மலரில் போகா வடிமலரில் கண் உறா
மெய்ம்மலர்ப் பேரொளியின் மீதூரா - அம்மகள்
கண்ணும் மனமும் கழுநீர்க் குலம் முழுதும்
நண்ணும் தொடையன்மேல் நாட்செய்ய உள் நெகிழா |
|
|
உரை
|
|
|
|
|
260
|
வம்மின்கள் அன்னைமீர் மாலை அது வாங்கித்
தம்மின்கள் என்றுரைப்பத் தாயரும் - அம்மே
பெருமானை அஞ்சாதே பெண்ணமுதே யாமே
திருமாலை தாவென்று செல்வேம் - திருமாலை
யாம் கொள்ளும் வண்ணம் எளிதோ அரிது என்னத்
தேங்கொள்ளும் இன்சொல் சிறியாளும் - ஆங்குத் தன்
மார்பத்துக் கண்ணின் நீர் வாரப் பிறர்கொள்ளும்
ஆர்வத்துக்கு அன்றே அடியிட்டாள் - சேர
இருத்தி மணற்சோறு இளையோரை ஊட்டும்
அருத்தி அறவே அயர்த்தாள் - ஒருத்தி |
|
|
உரை
|
|
|
|
|
பெதும்பை
|
270
280
|
மழலை தனது கிளிக்கு அளித்து வாய்த்த
குழலின் இசைகவர்ந்து கொண்டாள் - நிழல்விரவு
முன்னர் நகைதனது முல்லை கொள முத்தின்
பின்னர் நகைகொண்ட பெற்றியாள் - கன்னி
மடநோக்கம் தான்வளர் த்த மானுக்கு விட்டு
விடநோக்க வேல் இரண்டு கொண்டாள் - சுடர்நோக்கும்
தானுடைய மெய்ந்நுடக்கம் தன்மாதவிக்கு அளித்து
வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள்- பூநறும்
பாவைதன் பைங்குரவு ஏந்தப் பசுங்கிளியும்
பூவையும் ஏந்தும் பொலிவினாள் - மேவும்
மடநடை அன்னப் பெடைபெறக் கன்னி
பிடிநடை பெற்றுப் பெயர்வாள் - சுடர்க் கனகக்
கொத்துக் குயின்ற கொடிப் பவளப் பந்தத்தின்
முத்துப் பொதி உச்சி முச்சியாள் - எத்திறத்தும்
வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேன்
மாரவேள் கண்சிவப்ப வாய்சிவப்பாள் - நேர் ஒத்த
கோங்க முகை அனைய கொங்கையாள் தன்கழுத்தால்
பூங்கமுகை இப்போது பொற்பழிப்பாள் - பாங்கியரும் |
|
|
உரை
|
|
|
|
|
290
|
தாயரும் போற்றாமே தானே துயில் எழுந்து
பாயல் புடைபெயர்ந்து பையச்சென்று - யாயே
தளரும் இடை ஒதுங்கத் தாழும் குழைத்தாய்
வளரும் ஒரு குமரி வல்லி - கிளரும்
கொழுந்தும் அளவிறந்த கொந்தும் கவினி
எழுந்து கிளைகலிப்ப ஏறித் - தொழும் தகைய
கொங்குடைய பொன் அடரும் சென்னிக் கொழுங்கோங்கின்
பங்குடைய மூரிப் பணை அணைந்து - அங்குடைய
வண்டு முரல மணநாற வைகு மது
கண்டு மகிழ்ந்தேன் கனவில் எனக் - கொண்டு |
|
|
உரை
|
|
|
|
|
300 |
வருக வருக மடக் கிள்ளை முத்தம்
தருக தருக எனத் தாயர் - பெருக
விரும்பினர் புல்லி விரைய முலைவந்து
அரும்பின ஆகத்து அணங்கே - பெரும்புயங்கள்
புல்லி விடாத புது வதுவை சென்னியுடன்
வல்லி பெறுதி என வழுத்தும் - எல்லை |
|
|
உரை
|
|
|
|
|
310
320 |
அரசன் அபயன் அகளங்கன் எம்கோன்
புரசை மத வரை மேல் போத - முரசம்
தழங்கு மறுகில் தமரோடும் ஓடி
முழங்கு முகில் மாட முன்றில் - கொழுங்கயல் கண்
பொன் என எல்லா அழகும் புனைந்ததொரு
மின் என வந்து வெளிப்பட்டு - மன்னர் உயிர்
உண்டு ஆற்றிய வேங்கை வைக்க ஒருதிருக்கைச்
செண்டால் கிரிதிரித்த சேவகனைத் - தண்டாத
வேகம் கெடக் கலிவாய் வீழ்ந்து அரற்று பார்மகளைச்
சோகம் கெடுத்து எடுத்த தோளானை - ஆகத்துக்
கொங்கை பிரியாத வீறோடும் கோகனக
மங்கை பிரியாத மார்பானை அம்கமலக்
கையும் மலரடியும் கண்ணும் கனிவாயும்
செய்ய கரிய திருமாலைத் - தையலும்
கண்ட கண் வாங்காள் தொழ முகிழ்த்த கைவிடாள்
மண்டு மனம் மீட்கும் ஆறு அறியாள் - பண்டு அறியாக்
காமம் கலங்கக் கலங்கிக் குழல்சரியத்
தாமம் சரியத் தனிநின்றாள் - நாமவேல் |
|
|
உரை
|
|
|
|
|
|
சேரனும் மீனவனும் சேவிப்பச் செம்பியரில்
வீரனும் அவ்வெல்லை விட்டு அகன்றான் - மாரனும்
தக்குத் தகாதாளை எய்து தரைப்படுத்தம்
புக்குத் தொடைமடக்கிப் போயினான் - மைக்குழல் |
|
|
உரை
|
|
|
|
|
மங்கை
|
330
|
மங்கைப் பருவத்து ஒருத்தி மலர்பொதுளும்
கங்கைப் புளினக் களிஅன்னம் - என்கோனை
மன்னனை மன்னர் பிரானை வரோதயனைத்
தென்னனை வானவனைச் செம்பியனை - முன் ஒருநாள்
கண்ட பெதும்பைப் பருவத்தே தன்கருத்தில்
கொண்ட பரிவு கடைக்கூட்டப் - புண்டரிகச்
செய்ய அடிமுதலாச் செம்பொன் முடி அளவும்
மையல் அகல மனத்து இழைத்துக் - கையினால்
தீட்டும் கிழியிற் பகல் கண்டு இரவு எல்லாம்
காட்டும் கனவு தரக்கண்டு - நாட்டம் கொண்டு
யாது ஒன்றும் காணாது இருப்பாள் பொருகளிற்றுத் |
|
|
உரை
|
|
|
|
|
340
|
தாது ஒன்றும் தொங்கன் சயதுங்கன் - வீதி
வருகின்றான் என்று மணி அணிகள் யாவும்
தருக என்றாள் வாங்கித் தரித்தாள் - விரிகோதை
சூடினாள் பைம்பொன் துகில் உடுத்தாள் சந்தனச்சேறு
ஆடினாள் தன்பேரணி அணிந்தாள் - சேடியர் |
|
|
உரை
|
|
|
|
|
350
|
காட்டும் படிமக் கலத்தில் கமலத்தை
ஓட்டும் வதனத்து ஒளிமலர்ந்து - கேட்டு
விடைபோம் அனங்கன்போல் வேல்விழிகள் தாமும்
படைபோய் வருவனபோல் பக்கம் - கடைபோய்
மறித்து மதர்மதர்த்து வார்கடிப்பு வீக்கி
எறிக்கும் குழைக்காதிற்கு ஏற்றும் - நெறிக்கும்
அளக முதலாக ஐம்பால் படுத்த
வளர்கருங் கூந்தல் மலிந்தும் - கிளர
அரியன நித்திலத்தின் அம்பொன் தொடித்தோள்
பரியன காம்பில் பணைத்தும் - தெரியல்
சுவடு படு களபத் தொய்யில்சூழ் கொங்கைக்
குவடு பட எழுச்சி கொண்டும் - திவடர
முந்தும் கலைஅல்குல் மூரித் தடம்அகன்று
நொந்து மருங்குல் நுடங்கியும் - வந்து |
|
|
உரை
|
|
|
|
|
360
|
மிடையும் புதுவனப்பு விண்ணோரும் வீழ
அடையும் தனது உருக்கண்டு அஞ்சிக் - கொடையனகண்
பண்டு அறியும் முன்னைப் பருவத்து உருவத்துக்
கண்டு அறியும் அவ்வடிவு காண்கிலேன் - பண்டு அறியும்
முன்னை வடிவும் இழந்தேன் முகநோக்கி
என்னை அறிகலன்யான் என்செய்கேன் - தன்னை
வணங்கி வருவது அறிவன் எனவந்து
இணங்கு மகளிர் இடைநின்று - அணங்கும் |
|
|
உரை
|
|
|
|
|
370
|
இறைவன் அகளங்கன் எம் கோன் குமரித்
துறைவன் நிருபகுல துங்கன் - முறைமையால்
காக்கும் கடல்கடைந்த கைம்மலரும் உந்திமலர்
பூக்கும் உலகு அளந்த பொற்கழலும் - நோக்கும்
திருக்கொள்ளும் மார்பமும் தெவ்வேந்தர் எல்லாம்
வெருக்கொள்ளு மூரித்தோள் வெற்பும் - உருக்கும்
மகரக் குழைக் காது மாதரார் மாமை
நுகரப் புடைபெயரும் நோக்கும் - துகிர் ஒளியை
வௌவிய கோல மணிவாயும் எப்பொழுதும்
செவ்வி அழியாத் திருமுகமும் - எவ்வுருவும்
மாறுபடா வண்ணம் அவ்வண்ணல் படிவத்து
வேறுபடு வனப்பும் மெய்விரும்பித் - தேறும்
பிறையாம் பருவத்துப் பேருவகை ஆம்பல்
நிறையா மதிக்கு நெகிழ்ந்தாங்கு - இறைவனைக்
கண்டு மனமும் உயிரும் களிப்பு அளவில்
கொண்டு பெயர்ந்தது கொல்யானை - பண்டு |
|
|
உரை
|
|
|
|
|
380
|
நனவு கிழியிற் பகல் கண்டு நல்ல
கனவு தர இரவில் கண்டு - மனம் மகிழ்வாள்
தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும்
நாட்டம் உறங்காமையை நல்க - மீட்டுப்
பெயர்ந்தாள் தமர்தம் பெருந்தோள்களில் வீழ்ந்து
அயர்ந்தாள் அவள் நிலை ஈது அப்பால் - சயம் தொலைய |
|
|
உரை
|
|
|
|
|
மடந்தை
|
390
|
வெந்து வடிவு இழந்த காமன் விழிச்சிவப்பு
வந்து திரண்டு அனைய வாயினாள் - அந்தம் இல்
ஓலக் கடல் ஏழும் ஒன்றா உலகு ஒடுக்கும்
காலக் கடை அனைய கண் கடையாள் - ஞாலத்தை
வீட்டி வினை முடிக்க வெங்கால தூதுவர்போல்
கோட்டி இருக்கும் குவிமுலையாள் - நாட்ட
வடிவின் மருங்குலாள் மாரனைப்போல் மேலோர்
முடிவில் உணர்வை முடிப்பாள் - கடிது ஓடிப்
போகாது ஒழியாது இடை என்று போய்முடியல்
ஆகாமை கைவளரும் அல்குலாள் - பாகு ஆய
சொல்லி ஒரு மடந்தை தோழியைத் தோள்வருந்தப் |
|
|
உரை
|
|
|
|
|
400 |
புல்லி நிலாமுற்றம் போய் ஏறி - வல்லிநாம்
சேடியர் ஒப்ப வகுத்துத் திரள்பந்து
கோடியர் கண்டு உவப்பக் கொண்டாடி - ஆடினால்
என்மாலை நீகொள்வது யான்கொள்வது எம்கோமான்
தன்மாலை வாங்கித் தருக என்று - மின் அனையாள்
வட்டித்து அளகமும் கொங்கையும் வார்தயங்கக்
கட்டிக் கனபந்து கைப்பற்றி - ஒட்டிப் |
|
|
உரை
|
|
|
|
|
410
|
பொருதிறத்துச் சேடியர்தம் போர்தொலையத் தானே
இருதிறத்துக் கந்துகமும் ஏந்திப் - பெரிதும்
அழுந்து தரளத்து அவைதன்னைச் சூழ
விழுந்தும் எழுந்தும் இடைய - எழுந்துவரி
சிந்த விசிறு திரையின் நுரை ஊடு
வந்த வனச மகள் ஏய்ப்ப - முந்திய
செங்காந்தள் அங்கை சிவக்கும் சிவக்கும் என்று
அங்காந்து தோள்வளைகள் ஆர்ப்பு எடுப்பத் - தங்கள்
நுடங்கு கொடிமருங்குல் நொந்து ஒசிந்தது என்று அன்
றடங்கு கலாபம் அரற்றத் - தொடங்கி
அரிந்த குரலினவாய் அம்சீறடிக்குப்
பரிந்து சிலம்பு பதைப்ப - விரிந்து எழுசெங்
கைக்கோ விடைக்கோ கமல மலர் அடிக்கோ
மைக்கோல ஓதியின்மேல் வண்டு இரங்க - அக்கோதை
பந்து ஆடி வென்று பருதி அகளங்கன்
சந்தாடும் தோள் மாலை தா என்று - பைந்துகில்
தானை பிடித்து அலைக்கும் போதில் தனிக்குடைக்கீழ் |
|
|
உரை
|
|
|
|
|
420
430
|
யானைமேல் வெண் சாமரை இரட்டச் - சேனை
மிடையப் பவளமும் நித்திலமும் மின்ன
அடையப் பணிலங்கள் ஆர்ப்பப் - புடைபெயர
வார்ந்து மகர வயமீன் குலமுழுதும்
பேர்ந்து மறுகும்படி பிறழச் - சேர்ந்து
பதலை முழங்கப் பகடு ஏற்றி விட்ட
மதலைகண் முன்னர் மலிய - விதலையராய்த்
தாழும் தொழிலில் கிளைபுரக்கத் தன்னடைந்து
வாழும் பரதர் மருங்கு ஈண்ட - வீழுந்திக்
கன்னியும் நன்மதையும் கங்கையும் சிந்துவும்
பொன்னியும் தோயப் புகார்விளங்க - மன்னிய
செங்கோல் தியாக சமுத்திரம் நல் நுதலும்
தங்கோ மறுகில் தலைப்பட்டுத் - தங்களில் |
|
|
உரை
|
|
|
|
|
440
|
ஒட்டிய ஒட்டம் உணராதே தோள்வளையும்
கட்டிய மேகலையும் காவாதே - கிட்டித்
தொழுதாள் அயர்ந்தாள் துளங்கினாள் சோர்ந்தாள்
அழுதாள் ஒருதமியள் ஆனால் - பழுது இலாக்
காக்கும் துகிலும் இலங்கு பொலன்கலையும்
போக்கு நிதம்பம் புனைக என்று - வீக்கு
மணிக்கச்சும் தம்முடைய வான்றூசும் கொங்கை
பணிக்கக் கடைக்கண்கள் பாரா - அணிக்கு அமைந்த
குன்றாத நித்திலக் கோவையும் பொன் நிறத்த
பொன்றாத பட்டும் புனைக என்று - நின்று
கொடுத்தனர் கொங்கைகளும் கொண்டன தானும்
அடுத்தனர் தோள்மேல் அயர்ந்தாள் - கடுத்துக்
|
|
|
உரை
|
|
|
|
|
450
|
கவரும் அனங்கனுடன் கைகலந்தது அன்றித்
தவறு முதுகிளவித் தாயர் - அவர் எங்கும்
கூசினார் சந்தில் பனிநீர் குழைத்து இழைத்துப்
பூசினார் ஆலி பொழிந்து ஒழிந்தார் - வீசினார்
இட்டார் நிலவில் இளந்தென்றலும் கொணர்ந்து
சுட்டார் குளிரி தொடுத்து எடுத்தார் - விட்டாரோ
பள்ளம் அதனிற் படரும் பெரும்புனல்போல்
உள்ளம் உயிரை யுடன்கொண்டு - வள்ளல்பின்
ஓதை மறுகில் உடன்போன போக்காலிப்
பேதை நடுவே பிழைத்து ஒழிந்தாள் - மாதரில்
|
|
|
உரை
|
|
|
|
|
அரிவை
|
460 |
வாரிபடும் அமுதம் ஒப்பாள் மதுகரம்சூழ்
வேரி கமழ்கோதை வேறு ஒருத்தி - மூரித்தேர்த்
தட்டும் சிறுகப் பெருகு மரகதத்தில்
கட்டும் கனபொன் கலாபாரம் - பட்டும்
துகிலும் கரப்பச் சுடர்பரப்பிக் கைபோய்
அகல்கின்ற அல்குல் அரிவை - இகலி |
|
|
உரை
|
|
|
|
|
|
ஒருக்கி மருங்கு கடிந்து ஒன்றினை வந்து ஒன்று
நெருக்கி அமைய நிரம்பித் - தருக்கி
இடங்கொண்டு மின்னுக் கொடி ஒன்று இரண்டு
குடம்கொண்டு நின்றது எனக் கூறத் - தடம்கொண்டு
இணைத்துத் ததும்பி இளையோர்கள் நெஞ்சம்
பிணைத்துத் தடமுகட்டில் பெய்து - பணைத்துப்
பெருமை உவமை பிறங்கு ஒலிநீர் ஞாலத்து
அருமை படைத்த தனத்து அன்னம் - கருமை |
|
|
உரை
|
|
|
|
|
470
|
எறித்துக் கடைபோய் இருபுடையும் எல்லை
குறித்துக் குழை அளவும் கொண்டு - மறித்து
மதர்த்து வரிபரந்து மைந்தர் மனங்கள்
பதைத்து விழநிறத்தில் பட்டுத் - ததைத்த
கழுநீர் மலரின் கவின் அழித்து மானின்
விழிநீர்மை வாய்த்த விழியாள் - முழுதும் |
|
|
உரை
|
|
|
|
|
480
|
நெறிந்து கடைகுழன்று நெய்த்து இருண்டு நீண்டு
செறிந்து பெருமுருகு தேக்கி - நறுந்துணர்
வார்ந்து கொழுந்து எழுந்த வல்லியாய் மாந்தளிர்
சோர்ந்து மிசை அசைந்த சோலையாய்ச் - சேர்ந்து
திருஇருந்த தாமரையாய்ச் சென்று அடைந்த வண்டின்
பெருவிருந்து பேணும் குழலாள் - பொருகளிற்றின் |
|
|
உரை
|
|
|
|
|
490
|
வந்து மறுகில் ஒருநாள் மனுகுலத்தோன்
தந்த பெரிய தனிமைக்கண் - செந்தனிக்கோல்
கோனேகவர்ந்து எம்மைக் கொண்டனன் வந்து எமக்குத்
தானே தரின் தருக என்பனபோல் - பூநேர்
இணைக்கையும் தோளும் இடுதொடிகள் ஏந்தா
துணைக்கண் துயிற்றத் துயிலா - மணக்கூந்தல்
போது மறந்தும் புனையா பொலங்கச்சு
மீது படத்தரியா வெம்முலைகள் - சோதி
அடுக்கும் கனபொன் கலைபேணாது அல்குல்
கொடுக்கும் தெருள் நெஞ்சு கொள்ளாது - எடுக்கும்
கருப்புச் சிலை அனங்கன் கைஅம்பால் வீழு
நெருப்புக்கு உருகி நிறைபோய் - இருப்புழிப் |
|
|
உரை
|
|
|
|
|
500
510 |
பாடிய பூவைக்கும் யாதும் பரிவு இன்றி
ஆடிய தோகைக்கும் அன்பு இன்றிக் - கூடிய
கிள்ளைக்கும் தம்மில் கிளரும் இள அன்னப்
பிள்ளைக்கு மாற்றாள் பெயர்ந்துபோய்க் - கொள்ளை
பயக்கு மலர்க்குரவப் பந்தர்ப் படர்ப்பை
நயக்கும் இளமரக்கா நண்ணி - வயக்களிற்று
மன்னன் குலப்பொன்னி வைகலும் ஆடுதிரால்
அன்னங்காள் நீர் என்று அழிவுற்றும் - சென்னி
பெருகும் புகார் அடையப் பெற்றீரான் மற்றைக்
குருகுகாள் என்று குழைந்தும் - கருகிய
கோலக் குயிலினங்காள் நீர்போலும் சோணாட்டுச்
சோலைப் பயில்வீர் எனத்துவண்டும் - பீலிய
பேரியல் மஞ்ஞை பெறுதிரால் கொல்லியும்
நேரியும் சேர்வீர் எனநெகிழ்ந்தும் - நேரியன்
தண்துழாய் மாலை பலகாலும் தைவந்து
வண்டுகாள் வாழ்வீர் எனமருண்டும் - தொண்டிக்கோன்
மன்றல் மலையத்து வாள் அருவி தோய்ந்தன்றே
தென்றல் வருவது எனத் திகைத்தும் - நின்றயர்கான் |
|
|
உரை
|
|
|
|
|
520
|
மன்னர்க்கு மன்னன் வளவன் அகளங்கன்
முன்னர்ப் பணில முழங்குதலும் - மின்னில்போய்ப்
பேணும் திருமடனும் என்றும் பிரியாத
நாணும் பெருவிருப்பால் நல்கூரக் - காணுங்கால்
ஏய்ப்ப எதிர்வந்து இரவி உருவ ஒளி
வாய்ப்ப முக பங்கய மலர்ந்தாள் - போய்ப்பெருகு
மீதார் அகல்அல்குல் வீழ்கின்ற மேகலையும்
போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் - சோதி
குழைய நடு ஒடுக்கும் கொங்கையும் தோளும்
பழைய படியே பணித்தாள் - பிழையாத
பொன்னித் துறைவன் பொலந்தார் பெறத் தகுவார்
தன்னில் பிறர் இன்மை சாதித்தாள் - சென்னிக்குப்
பாராள் முலையாலும் பங்கயத்தாள் - தோளாலும்
வாரா விருப்பு வருவித்தாள் - ஓர் அணங்கு
|
|
|
உரை
|
|
|
|
|
தெரிவை
|
530
|
கோது விரவாக் கொழும்பாகு கொய்தளிரின்
போது புலராப் பொலம் கொம்பு - மீது
முயலால் அழுங்கா முழுத்திங்கள் வானின்
புயலால் அழுங்காப் புதுமின் - இயல்கொண்டு
எழுதாத ஓவம் எழுசிறையை வண்டு
கொழுதாத கற்பகத்தின் கொந்து - முழுதும்
இருளாக் கலாபத்து இளந்தோகை என்றும்
தெருளாக் களி அளிக்கும் தேறல் - பொருளால்
வருந்தக் கிடையாத மாணிக்கம் யார்க்கும்
அருந்தத் தெவிட்டா அமுதம் - திருந்திய |
|
|
உரை
|
|
|
|
|
540
|
சோலைப் பசுந்தென்றல் தூது வரவந்த
மாலைப் பொழுதின்கண் மண்டபத்து - வேலை
விரிந்த நிலா முன்றில் வீழ்மகரப் பேழ்வாய்
சொரிந்த மணிக் கற்றை தூங்கப் - பரிந்து உழையோ
பூசிய சாந்தம் கமழப் பொறி வண்டு
மூசிய மௌவல் முருகு உயிர்ப்பத் - தேசிகப்
பேரிசை யாழ்ப் பாணன் பேதை விறலியொடும்
சேர இனிது இருந்த செவ்விக்கண் - நேரியும் |
|
|
உரை
|
|
|
|
|
|
கோழியும் வேங்கையும் முப்பணையும் கோரமும்
பாழி அயிராபதப் பகடும் - ஆழியான்
சூடிய ஆரமும் ஆணையும் சோணாடும்
காடு திரைத்து எறியும் காவிரியும் - பாடுக எனக் |
|
|
உரை
|
|
|
|
|
550
|
கூனல் யாழ் எடுத்தான் பாணன் கொதித்து எழுந்து
வேனில் அரசனும் தன் வில் எடுத்தான் - தேன் இமிர்
தந்திரி யாழ்ப்பாணன் தைவந்தான் தைவந்தான்
வெந்திறன் மாரனும்தன் வில்லின் நாண் - முந்த
நிறைநரம்பு பண்ணி நிலைதெரிந்தான் பாணன்
திறன் மதனும் அம்பு தெரிந்தான் - விறலியொடும்
பாணன் ஒருபாணி கோத்தான் பலகோத்தான்
தூணி தொலையச் சுளிந்துவேள் - மாண
இசைத்தன பாணன் யாழ்ப் பாணி எய்து
விசைத்தன வேனிலான் பாணி - இசைத்து எழுந்த |
|
|
உரை
|
|
|
|
|
560
|
வீணை இசையாலோ வேனிலான் அம்பாலோ
வாள்நுதல் வீழா மதி மயங்காச் - சேண் உலாம்
வாடை அனைய மலையா நிலம்தனையும்
கோடை இது என்றே கூறினாள் - நீடிய
வாடை முனிந்த வனமுலைமேல் விட்ட பனி
நீரை இதுவோ நெருப்பு என்றாள் - ஊர் எலாம்
காக்கும் துடியை அழிக்கும் கணை மாரன்
தாக்கும் பறை என்றே சாற்றினாள் - சேக்கைதொறும்
வாழும் உலகத்து எவரும் மனம் களிப்ப
வீழும் நிலவை வெயில் என்றாள் - கோழிக்கோன்
எம் கோன் அகளங்கன் ஏழ் உலகும் காக்கின்ற
செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கு என்றாள் - கங்குல்
புலரும் தனையும் புலம்பினாள் ஆங்குப் |
|
|
உரை
|
|
|
|
|
570 |
பலரும் பணிந்து பரவக் - குல கிரிசூழ்
ஆழிப் புவனம் அடைய உடையபிரான்
சூழிக் கடாயானை தோன்றுதலும் - யாழின் |
பட்டத்து யானையை நோக்கிப் பரிவு கூறுதல்
|
|
இழைக்கும் இசைமுதலா எப்பகைக்கும் ஆற்றாது
உழைக்கும் உயிர் தழைப்ப ஓடிப் - பிழைத்தனளாய் |
|
|
உரை
|
|
|
|
|
580
|
முட்டும் திகிரி கிரியின் முதுமுதுகில்
கட்டும் கடவுள் கடாயானை - எட்டும்
தரிக்கும் உலகம் தனி தரித்த கோனைப்
பரிக்கும் அயிராபதமே - செருக்கிப்
பொருந்த நினையாத போர்க் கலிங்கர் ஓடி
இருந்த தடவரைகள் எல்லாம் - திருந்த
விதையம் பொருது அழிந்த விந்தமே போலப்
புதைய நடந்த பொருப்பே - சிதையாத
திங்கள் குலத்திற்கும் தெய்வப் பொதியிற்கும்
அங்கண் பழங்குமரி யாற்றிற்கும் - தங்கள்
படிக்கும் பொரு நிருப பன்னகங்கள் வீழ
இடிக்கும் தனி அசனி ஏறே - கடிப்பு அமைந்த |
|
|
உரை
|
|
|
|
|
590
|
யாம முரசால் இழந்த நிறைநினது
தாம முரசு தரப் பெற்றேன் - நாம
விடைமணி ஓசை விளைத்த செவிப் புண்ணின்
புடைமணி ஓசைப் புலர்ந்தேன் - தடமுலைமேல்
ஊறா மலையக்கால் சுட்ட சூடு உன் செவியின்
மாறாப் பெருங்காற்றான் மாற்றினேன் - வேறாகக்
கூசும் பனித் திவலை கொண்டுபோம் என் உயிர்நீ
வீசு மதத் திவலை யான் மீட்டேன் - மூசிய
கார் உலாம் ஓதக் கடல் முழங்க வந்த துயர்
நேரிலா நீ முழங்க நீங்கினேன் - பேரிரவில்
என்மேல் அனங்கன் வரவந்த இன்னல் எலாம்
நின்மேல் அனகன் வர நீங்கினேன் - இன்னம் |
|
|
உரை
|
|
|
|
|
600
|
கடைபோக என் உயிரைக் காத்தியேல் வண்டு
புடைபோதப் போதும் பொருப்பே - விடைபோய் நீ
ஆட்டும் தடம் கலக்கின் மாரற்கு அயில் வாளி
காட்டும் தடமே கலக்குவாய் - கேட்டு அருளாய்
கார் நாணும் நின்கடத்து வண்டு ஒழியக் காமனார்
போர் நாணின் வண்டே புடைத்து உதிர்ப்பாய் - பார்நாதன்
செங்கைக் கரும்பு ஒழியத் தின்கைக்கு அனங்கனார்
வெங்கைக் கரும்பே விரும்புவாய் - எங்கட்கு
உயிராய் உடலாய் உணர்வாகி உள்ளாய்
அயிராபதமே நீ அன்றே - பெயராது
நிற்கண்டாய் என்று இரந்து நின்றாள் நுதலாக |
|
|
உரை
|
|
|
|
|
610 |
வில்கொண்டபேரிளம்பெண்வேறுஒருத்திகொற்கையர் கோன் |
பேரிளம்பெண்
|
|
மல்லல் புயத்து அனகன் மால்யானைக் கைபோலக்
கொல்லத் திரண்ட குறங்கினாள் - எல்லையில்
கோடும் கொலை குயின்ற சேடன் குருமணி வேய்ந்து
ஆடும் படம் அனைய அல்குலாள் - சேடியாய்த்
தம்மை எடுக்கும் இடைகடிந்த தம் பழிக்குக்
கொம்மை முகம் சாய்த்த கொங்கையாள் - செம்மை
நிறையும் அழகால் நிகர் அழித்துச் செய்யாள்
உறையு மலர்பறிப்பாள் ஒப்பாள் - நறை கமழு |
|
|
உரை
|
|
|
|
|
620
|
மாலை பல புனைந்து மான்மதச் செழுசாந்து எழுதி
வேலை தருமுத்தம் மீது அணிந்து - சோலையின்
மானும் மயிலும் அனைய மடந்தையரும்
தானும் அழகு தர விருப்பத் - தேன் இமிர்
ஊறல் இளம்பாளை உச்சிப்படு கடும்
தேறல் வழிந்து இழிந்த செவ்விக்கண் - வேறாக
ஆக்கி மடல்நிறைத்து வண்டும் அதில் நுரையும்
போக்கி ஒருத்தி புகழ்ந்து தர - நோக்கி
வருந்திச் சிறுதுள்ளி வள் உகிரால் எற்றி
அருந்தித் தமர்மேல் அயர்ந்தாள் - பொருந்தும் |
|
|
உரை
|
|
|
|
|
630
640 |
மயக்கத்து வந்து மனுதுங்க துங்கன்
நயக்கத் திருக்கனவு நல்கு - முயக்கத்து
மிக்க விழைவு மிகுகளிப்பும் அத்துயிலும்
ஒக்க இகல உடன் எழுந்து - பக்கத்து
வந்து சுடரும் ஒருபளிக்கு வார்சுவரில்
தந்த தனதுநிழல் தான் நோக்கிப் - பைந்துகில்
காசுசூழ் அல்குல் கலையே கலையாகத்
தூது புடைபெயர்ந்து தோள் நெகிழ்ந்து - வாசம் சேர்
சூடிய மாலை பரிந்து துணைமுலைமேல்
ஆடிய சாந்தின் அணி சிதைந்து - கூடிய
செவ்வாய் விளர்ப்பக் கருங்கண் சிவப்பு ஊர
வெவ்வாள் நுதலும் வெயர் அரும்ப - இவ்வாறு
கண்டு மகிழ்ந்த கனவை நனவு என்று
கொண்டு பலர்க்கும் குலாவுதலும் - வண்டு வீழ் |
|
|
உரை
|
|
|
|
|
|
வேரிக் கமழ்கோதை வேறாகத் தன் மனத்தில்
பூரித்த மெய் உவகை பொய்யாகப் - பாரித்த
தாமக் கவிகை நிழற்றச் சயதுங்கன்
நாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும் |
|
|
உரை
|
|
|
|
|
650 |
கண்டதும் கெட்டேன் கனவை நனவாகக்
கொண்டதும் அம் மதுச்செய் கோலமே - பண்டு உலகில்
செய்த தவம் சிறிதும் இல்லாத தீவினையேற்கு
எய்த வருமே இவன் என்று - கைதொழுது
தேறி ஒருகாலும் தேறாப் பெருமையால்
ஏறி இரண்டாவது மயங்கி - மாறு இலாத்
தோழியர் தோள்மேல் அயர்ந்தாள் அத்தோழியரும் |
|
|
உரை
|
|
|
|
|
|
ஏழுயர் யானை எதிர் ஓடி - ஆழியாய் |
தலைவனை முன்னிலையாக்கிக் கூறல்
|
660
|
மாடப் புகாருக்கும் வஞ்சிக்கும் காஞ்சிக்கும்
கூடற்கும் கோழிக்கும் கோமானே - பாடலர்
சாரும் திகிரி தனை உருட்டி ஓர் ஏழு
பாரும் புரக்கும் பகலவனே - சோர்வு இன்றிக்
காத்துக் குடை ஒன்றால் எட்டுத் திசை கவித்த
வேத்துக் குலகிரியின் மேருவே - போர்த் தொழிலால்
ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க் கொண்ட
தானைத் தியாக சமுத்திரமே - மானப்போர்
இம்பர் எழுபொழில் வட்டத்து இகல்வேந்தர்
செம்பொன் மவுலிச் சிகாமணியே - நம்ப நின் |
|
|
உரை
|
|
|
|
|
670
|
பாரில் படுவன பன்மணியு நின் கடல்
நீரில் படுவன நித்திலமும் - நேரிய நின்
வெற்பில் வயிரமும் வேந்த நின் சோணாட்டுப்
பொற்பின் மலிவன பூந்துகிலும் - நின் பணியக்
கொண்டாய் இவள் தனது கொங்கைக் கொழுஞ்சுணங்கும்
தண்டா நிறையும் தளிர்நிறமும் - பண்டைத்
துயிலும் கவர்ந்தது நின் தொல்குலத்து வேந்தர்
பயிலும் திருநூல் படியோ - புயல்வளவ
|
|
|
உரை
|
|
|
|
|
680
685 |
மன்னிய தொண்டை வளநாடு வாளியும்
பொன்னி வளநாடு பூஞ்சிலையும் - கன்னித்
திருநாடு தேரும் குறை அறுப்பச் செய்தால்
திருநாண் மட மகளிர் தம்மை - ஒரு நாள் அவ்
வேனற்கு அரசன் விடுமே அவன்சினம் இப்
பானற்கண் நல்லாள் உயிர்ப்பரமே - ஆனக்கால்
குன்றே எனத்தகு நின் கோபுரத்தில் தூங்குமணி
ஒன்றே உலகுக்கு ஒழியுமே - என்று இனைய
கூறி வணங்கிடும் இவ்வளவும் கோதைமேல்
சீறி அனங்கன் சிலை வளைப்ப - மாறு அழியக்
குத்தும் கடாக்களிற்றுப் போந்தான் கொடைச்சென்னி
உத்துங்க துங்கன் உலா. |
|
|
உரை
|
|
|
|