தொடக்கம் |
தேடுதல் |
|
|
10 |
தேர்மேவும் பாய்புரவிப்
பாசடைச் செங்கமலம்
போர்மேவும் பாற்கடல் பூத்தனையோன்-பார்மேல்
மருளப் பசு ஒன்றின் மம்மர் நோய் தீர
உருளும் திருத்தேர் உரவோன்- அருளினான்
பேராப் பெரும்பகை தீரப் பிற வேந்தர்
ஊராக் குலிச விடை ஊர்ந்தோன் - சோராத்
துயில் காத்து அரமகளிர் சோர்குழை காத்து உம்பர்
எயில் காத்த நேமி இறையோன் - வெயில்காட்டும்
அவ்வானவர் கோன் ஒரு மணிஆசனத்தில்
ஒவ்வாமல் ஏத்த உடன் இருந்தோன் - கவ்வை |
|
|
உரை
|
|
|
|
|
20 |
எழக் குரைக்கும் பேழ்வாய் இருங்கூற்றுக்கு ஏற்ப
வழக்கு உரைக்கும் செங்கோல் வளவன் - பழக்கத்தால்
போந்த புலியுடனே புல்வாய் ஒருதுறை நீர்
மாந்த உலகு ஆண்ட மன்னர்பிரான் - காந்து எரியில்
வெந்தார் உயிர்பெற்று உடல்பெற்று விண் ஆள
மந்தாகினி கொணர்ந்த மன்னர்கோன் - முந்திப்
பொருதேர்கள் ஈரைந்தின் ஈரைவர் போர்பண்டு
ஒருதேரால் வென்ற உரவோன் - கருதி
மலை பத்தும் வெட்டும் உருமின் மறவோன்
தலை பத்தும் வெட்டும் சரத்தோன் - நிலைதப்பர்
|
|
|
உரை
|
|
|
|
|
30 |
மீளி தலை கொண்ட தண்டத்தான் மீளிக்குக்
கூளி தலை பண்டு கொண்ட கோன் - நாளும்
பதுமக் கடவுள் படைப்பு அடையக் காத்த
முதுமக்கள் சாடி முதலோன் - பொது மட்க
வாங்கு எயில் நேமி வரையாக மண் ஆண்டு
தூங்கு எயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய
மால்கடல் பள்ளி வறிதாக மண்காத்து
மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன்று
அலை எறியும் காவேரி யாற்றுப் படைக்கு
மலை எறிய மன்னர்க்கு மன்னன் - நிலை அறியாத் |
|
|
உரை
|
|
|
|
|
40
|
தொல்லார் கலிவலையம் தோள்வலைய முன் திருந்த
வில்லால் நடு உள்ள வெற்பு எடுத்தோன் - ஒல்லைக்
கொலை ஏறு உடம்பு அடையக் கொய்தாலும் எய்தாத்
துலை ஏறி வீற்று இருந்த தோன்றல் - தலை ஏறு
மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
கண்கொண்ட சென்னி கரிகாலன் - எண்கொள்
பணம் புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டு
மணம் புணர்ந்த கிள்ளி வளவன் - அணங்கு
படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக்களவழிப் பாக் கொண்டோன்-அடுத்து அடுத்துச் |
|
|
உரை
|
|
|
|
|
50 |
சீறும் செருவில் திருமார்பில் தொண்ணூறும்
ஆறும் படுதழும்பின் ஆகத்தோன் - ஏறப்
பிரம அரக்கன் அகலம் பிளந்து
பரமர் திருத்தில்லை பார்த்தேன் - நரபதியர்
தாழ முன்சென்று மதுரைத் தமிழ்ப்பதியும்
ஈழமும் கொண்ட இகலாளி - சூழவும்
ஏறிப் பகல் ஒன்றில் எச்சுரமும் போய் உதகை
நூறித்தன் தூதனை நோக்கினோன் - வேறாகக்
கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு
சிங்காதனத்து இருந்த செம்பியர்கோன் எம்கோன் |
|
|
உரை
|
|
|
|
|
|
புவிராச ராசர் மனுமுதலோர் நாளில்
தவிராத சுங்கம் தவிர்த்தோன் - கவிராசர்
போற்றும் பெரியோன் இவன் பின்பு பூதலங்கள் |
|
|
உரை
|
|
|
|
|
|
ஆற்றும் திருத்தோள் அகளங்கன் - வேற்றார்
விரும்பு அரணில் வெங்களத் தீ வேட்டுக் கலிங்கப்
பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும்புதல்வன் |
|
|
உரை
|
|
|
|
|
60
|
கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள்
முற்றப் புரக்கு முகில்வண்ணன் - பொன் துவரை
இந்து மரபில் இருக்கும் திருக்குலத்தில்
வந்து மனுகுலத்தை வாழ்வித்த - பைந்தளிர்க்கை
மாதர்ப் பிடி பெற்ற வாரணம் அவ் வாரணத்தின்
காதல் பெயரன் கனகளபன் - யாதினும்
தீட்டற்கு அரிய திருவே திருமாலை
சூட்டத் திருமகுடம் சூடியபின் - நாட்டு |
|
|
உரை
|
|
|
|
|
70
|
முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம்
சிறைவிட்டு அரசு அருளிச் செய்து - கறைவிட்டு
மைஞ்ஞாகம் எட்டும் மதநாகம் ஓர் எட்டும்
பைஞ்ஞாகம் எட்டும் பரம் தீர - இஞ்ஞாலம்
தாதைக்குப் பின்பு தபனற்கும் தோலாத
போதத்து இமிரப் பொறை நீக்கி - மாதரில்
ஒக்க அபிடேகம் சூடும் உரிமைக்கண்
தக்க தலைமைத் தனித் தேவி - மிக்க
புவனி முழுது உடைய பொன் தொடியும் தானும் |
|
|
உரை
|
|
|
|
|
80 |
அவனி சுரர்சுருதி ஆர்ப்ப - நவநிதி தூய்
ஏத்தற்கு அருங்கடவுள் எல்லை இல் ஆனந்தக்
கூத்துக் களிகூரக் கும்பிட்டுப் - போத்தின்மேல்
தில்லைத் திருமன்ற முன்றில் சிறுதெய்வத்
தொல்லைக் குறும்பு தொலைத்து எடுத்து - மல்லல்
தசும்பு வளர்கனித் தண்பெரு நாவல்
அசும்பு பசும்பொன் அடுக்கிப் - பசும்பொன் |
|
|
உரை
|
|
|
|
|
|
அலகை இகந்த அசல குல வச்ரம்
பலகை ததும்பப் பதித்து - மலர்கவிகை
காக்கும் கடல் ஏழின் முத்தும் வர கங்கை
தூக்கும் அருவியில் சூழ்போக்கி - நோக்கம்
தொடுக்கும் சிரச்சேடன் சூடாமணி கொண்டு
எடுக்கும் திருத்தீபம் ஏற்றி - அடுக்கிய
|
|
|
உரை
|
|
|
|
|
90
|
தூய வயிரத்தால் வாவியாய்ச் சூழ்கிடந்த
பாய மரகதத்தால் பாசடையாய்த் - தூய
பருமுத்தால் ஆலியாய்ப் பற்பராகத்தால்
திருமிக்க செந்தாமரையாய்ப் - பெருவர்க்க
நீலத்தால் வண்டின் இரையாய் உரை இகந்த
கோலத்தால் கோயில் பணி குயிற்றிச் - சூலத்தான் |
|
|
உரை
|
|
|
|
|
100 |
ஆடும் திருப்பெரும் பேர்அம்பலமும் கோபுர
மாடம் பரந்து ஓங்கு மாளிகையும் - கூடிப்
பொலம் கோட்டு மாமேருப் பூதரமும் போய
வலம் கோள் திகிரியும் ஆனத் - தலம்கொள்
நிலை ஏழு கோபுரங்கள் நேரே நெருங்க
மலை ஏழும் என்ன வகுத்துத் - தலையில்
மகரம் கொள் கோபுரங்கண் மாக விமானச்
சிகரங்கள் ஆகித் திகழ - நிகர் இல் |
|
|
உரை
|
|
|
|
|
110 |
எரிபொன் படர்பாறை என்னலா எங்கும்
விரிபொன் திருமுற்றம் மின்னச் - சொரிபொன்
கடாரம் பனிநீர் கவினிக் கனபொன்
தடாகங்கள் ஆகித் ததும்ப - விடாது நின்று
அல் பகல் ஆக அனந்த சதகோடி
கற்பக சாதி கதிர் கதுவப் - பொன் பூண்
வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த
சுர மகளிர் ஆகித் துறும - ஒருதான்
பிறக்கும் இமயப் பெருங்கடவுள் குன்றம்
மறக்கும்படி செல்வ மல்கச் - சிறக்கும்
|
|
|
உரை
|
|
|
|
|
|
இருக் ஆதி எம்மறையும் எவ்வுலகும் ஈன்றாள்
திருக்காமக் கோட்டத் திகழ்வித் - தருக்கர்
புனையா மணியாலும் பொன்னாலு மின்ன
மனையாலோர் ஓர்தேர் வகுத்து - முனைவன்
திருவீதி ஈரிரண்டும் தேவர்கோன் மூதூர்ப்
பெருவீதி நாணப் பிறக்கி - வருநாளில் |
|
|
உரை
|
|
|
|
|
120
|
பொங்கார் கலிசூழ் புவனம் பதினாலும்
கங்கா புரி புகுந்து கண்டு உவப்பத் - தங்கள்
புவனி பெறவந்த பூபாலர்க்கு எல்லாம்
பவனி எழுச்சி பணித்துக் - கவினும்
மடமயில் ஒக்க மகுடம் கவித்தாள்
உடன் உறை பள்ளி உணர்ந்து - தடமுகில் |
|
|
உரை
|
|
|
|
|
130 |
அஞ்சன சைலத்து அபிடேகம் செய்வது என
மஞ்சனம் ஆடி வழிமுதல் - செஞ்சடை
வானவன் பொன் தாள் வணங்கி மறையவர்க்குத்
தானம் அனைத்தும் தகைபெறுத்தி - வானில்
கிளைக்கும் சுடர் இந்த்ர நீலக் கிரியை
வளைக்கும் இளநிலா மானத் - திளைக்கும்
உருவுடை ஆடை தவிர்த்து ஒரு வெள்ளைத்
திரு இடை ஆடை திகழ்த்தி - ஒருபுடைப்
பச்சை உடைவாள் விசித்தது ஒரு பசும்பொன்
கச்சை நவரத்னக் கட்டு எறிப்ப - வச்ர
வெருவு தர எல்லா இரவிகளும் வீழத்
திரு உதர பந்தனம் சேர்த்தித் - திருமார்பில் |
|
|
உரை
|
|
|
|
|
140
|
கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள்
பால் கடல் போர்த்தது எனப் பரப்பிய - பால் கடல்
வந்த வனச மகளேபோல் மற்று அது
தந்த கடவுள் மணி தயங்கப் - பந்தச்
சுர கனகத் தோள்வலையம் சூட்டுக் கவித்த
உரக பணாமணி ஒப்ப - விரவி
மகரக் குழைதோள் மேல் வந்த சைவ மேருச்
சிகரச் சுர்போல் திகழ - நிகர் இல்
முடியின் மணி வெயிலும் முத்தக் குடையில்
வடிவு நிலவு மலையப் - படியில்
வயங்கு கடக மகுட ஆதி மின்னத்
தயங்கு பெரும் போதி சாத்தி - முயங்கிய |
|
|
உரை
|
|
|
|
|
150 |
செவ்வி நுதலில் திருநீற்றுப் புண்டரம்
வவ்வி மகளிர் மனம் கவற்ற - நொவ்விய
நாவியு மான்மதச் சாந்து நறை அகில்
ஆவியு மாகண்டமும் அளப்பத் - தீவிய
தோள் மாலை வாசக் கழுநீர் சுழல் சோதிக்
கோள் மாலை கூசக் குளிர் கொடுப்ப - நாள் மாலை
வேந்தர் தொழுது இறைஞ்ச வேதியர் ஏத்தெடுப்பப்
போந்து புறநின்ற போர்க்களிற்றை - வேந்தரில் |
|
|
உரை
|
|
|
|
|
160
|
மாக்காதல் யாதவனும் மாறு அழித்த மீனவனும்
வீக்காமல் எங்குள்ள மெய்ம்முகிற்கும் - கோக்கடவுட்கு
எட்டாத வச்சிரமும் எல்லா உரும் ஏறும்
வெட்டாமல் எங்குள்ள வெற்பினுக்கும் - முட்டா
முதுவாய் வடவையு முந்நான்கு கோளும்
கதுவாமல் எல்லாக் கடற்கும் - பொதுவாய்
அபயம் கொடுக்கும் அயிராபதத்தை
உபய வயக்கோட்டு உருமை - விபவ
நிருத்தம் தரும் ஓர் நிதிப்பொருப்பைக் கண் உற்று
எருத்தம் திருக்கவின ஏறித் - திருத்தக்க
|
|
|
உரை
|
|
|
|
|
170
|
பள்ளித் திருத்தொங்கல் சோலை பகல்விலக்க
வெள்ளிக் கவிகை மிசை ஓங்க - ஒள்ளிய
ஒற்றை வலம்புரி ஊத அதன்பின்பு
மற்றை அலகு இல் வளை கலிப்பக் - கற்றைக்
கவரி இரட்டக் கடவுள் முரசு ஆர்த்து
உவரி உவா ஆடி ஒப்ப - அவிர்வாளும்
சங்கும் திகிரியும் சார்ங்கமும் தண்டமும்
எங்கும் சுடர்விட்டு இருள் களையக் - கொங்கத்து |
|
|
உரை
|
|
|
|
|
180 |
வில் கொடியு மீனக் கொடியும் கொடுவரிப்
பொன் கொடி ஒன்றின் புடைபோதத் - தெற்கின்
மலையான் நிலம்வரவே வார்பூங் கருப்புச்
சிலையான் வரவு தெரியத் - தொலையாது
வீசும் திவலை விசும்புகூர் மங்குலால்
வாசவன் வந்த வரவு அறியக் - கூசாதே
யாவர் ஒழிவார் இவன்வரவே மற்று உள்ள
தேவர் வருவர் எனத் தெளிய - யாவர்க்கும்
பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத்
தென்னர் முதலானோர் சேவிப்ப - முன்னர்ப்
பரவி உலகில் பலமண்டலீகர்
புரவி மிசைகொண்டு போத - அருவிபோல் |
|
|
உரை
|
|
|
|
|
190
200 |
விட்டு மதம்பொழியும் வேழம் திசைவேழம்
எட்டும் ஒழியப் புகுந்து ஈண்டக் - கட்டி
இரவிக்கு நிற்பன ஏழும் ஒழியப்
புரவிக் குலமுழுதும் போத - விரவி
உடைய நிதிக்கடவுள் ஊர்தி ஒழிய
அடைய நரவெள்ளம் ஆர்ப்ப - இடையே
எழுந்த துகள் உருவ ஏறியும் சுண்ணம்
விழுந்த துகள் உருவ வீழ்ந்தும் - தொழும் தகைய
விண் உலகு மண் உலகு ஆகி விளங்க இம்
மண் உலகு பொன் உலகாய் மாறாட - எண்ணரிய
மாகதரும் மங்கலப் பாடகரும் விஞ்சையர்
பூகதர் ஆயினார் போல் பரவ - நாகர்
கொழுந்து எழு கற்பக சாதி குவித்துத்
தொழும் தொறும் மன்னர் சொரிய - எழுந்துள
கைம்மழை என்னக் கனகப் பெயல் தூர்த்து
மைம்மழை மாட மறுகு அணைந்தான் - தம்முடைய |
|
|
உரை
|
|
|
|
|
|
சாலை தொறும் திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார்
மேலை நிலா முற்ற மேல் தொகுவார் - மாலைதாழ்
தெற்றி அடைய மிடைவார் சிலர்பலர்
நெற்றி சுருங்க நெருங்குவார் - பொன் தொடியார்
மாளிகையில் ஏறுவார் மண்டபத்தின் மண்டுவார்
சூளிகை மாடம் தொறும் துறுவார் - நீளும்
இரண்டு மருங்கினும் இப்படி மொய்ப்பத் |
|
|
உரை
|
|
|
|
|
210 |
திரண்டு பலர் எதிரே சென்று - புரண்ட
கரும்புருவ வல் வில்லும் கண்மலர் அம்பும்
பெரும்புவன எல்லை பிடிப்பச் - சுரும்பு
நிரைக்கு நிரை முரல நீலக் குழாங்கள்
இரைப்பின் மொகு மொகு என்ன - விரைச்சுருள்
மேகா களங்கள் மிஞிறு வாய் வைத்து ஊதக்
காகாளம் என்னும்படி கவிப்பப் - போகத்
தகரம் கமழ்கதுப்பின் தாழ்குழை தோடாழ்
மகரம் பிறழ்கொடியின் வாய்ப்ப இகல் அனங்கன்
சேனா சமுகம் தெரிப்ப அதன் எதிர் |
|
|
உரை
|
|
|
|
|
220
230 |
சேனா பராகம் எனத் திகழப் - பூநாறும்
சுண்ணம் எதிர் தூய் உடனே தொடியும் தூய்
வண்ணம் இழப்பார் மனம் இழப்பார் - மண்ணுலகில்
இன்னல் பகைவன் இவன்காண் அகளங்கன்
மன்னர்க்கு மன்னன் மகன் என்பார் - முன்னர்
முதுகுல மன்னர் முடிவணங்க வந்த
விதுகுல நாயகி சேய் என்பார் - குதுகலத்தால்
கண்மரும் செவ்விக் கடவுள் திசாதேவர்
எண்மரும் காணும் இவன் என்பார்- மண்ணவர்க்கும்
தேவர்க்கு நாகர்க்கும் தெய்வ முனிவர்க்கும்
யாவர்க்கும் காவல் இவன் என்பார் - தீவிய
மாதவியும் செங்கழு நீரும் வலம்புரியும்
தாதகியும் கொள்ளத் தரின் என்பார் - மாதை
ஒறுக்கும் மிதிலை ஒருவில்லைத் தொல்லை
இறுக்கும் அவன் இவன் என்பார் - மறுக்காமல் |
|
|
உரை
|
|
|
|
|
240 |
சென்று கனைகடல் தூர்த்துத் திருக்குலத்து
நின்ற பழிதுடைப்பாய் நீ என்பார் - இன்றளவும்
துஞ்சும் துயில் இழந்த தண்டர் குழல் துளையில்
நஞ்சும் குமிழி எழு நாள் என்பார் - பஞ்சவனே
வாடையினும் தண் என்னும் மாந்தா நிலம் எமக்குக்
கோடையினும் தீது கொடிது என்பார் - கூடி
முருகுவார் கூந்தலார் மொய்த்து அலர்ந்த கண்ணால்
பருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் - பொரு மதனன் |
|
|
உரை
|
|
|
|
|
|
பார்த்தானோ புங்கானு புங்கம் படப் பகழி
தூர்த்தானோ யாது என்று சொல்லுகேம் - ஆர்த்தான்
உளைத்தான் சிலை இக்கு ஒருகோடி கோடி
வளைத்தான் அரும்பு உலகின் மாய்த்தான் - இளைத்தார்
இனையர் பலர்நிகழ ஈங்கு ஒருத்தி முத்தில் |
|
|
உரை
|
|
|
|
|
250
|
புனையும் சிறுதொடிக்கைப் பூவை - கனைமுகில் நேர்
ஆடாத தோகை அலராத புண்டரிகம்
பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை - சூடத்
தளிராத சூதம் தழையாத வஞ்சி
குளிராத திங்கள் குழவி - அளிகள்
இயங்காத தண்கா இறக்காத தேறல்
வயங்காத கற்பக வல்லி - தயங்கு இணர்க்
கூழைச் சுருள் முடிக்கக் கூடுவதும் கூடாதாம்
ஏழைப் பருவத்து இளம்பேதை - சூழும் |
|
|
உரை
|
|
|
|
|
260
270
280 |
நிலைத்து ஆய வெள்ள நெருங்க மருங்கே
முலைத் தாயர் கைத்தாயர் மொய்ப்பத் - தலைத்தாமம்
தொக்க கவிகைக் குலோத்துங்க சோழனை
மிக்க பராந்தகனை மீனவனைப் - புக்கார்
வணங்க வணங்கி வழுத்த வழுத்தி
அணங்க அணங்காள் அகலாள் - குணம் காவல்
மன்னன் புனையும் திருமுத்த மாலையை
அன்னம் படிந்து ஆட ஆறு என்னும் - பின்னவன்
கோவைத் திருப்பள்ளித் தொங்கல் குழாம் கிளிக்கும்
பூவைக்கு நல்ல பொழில் என்னும் - பாவை
அயிர்க்கும் இறுகோட்டு அயிராபதத்தை
மயிற்கு மலையென்னு மன்னும் - குயில்கிளவி
தேன் வாழும் தாமம் சூழ் தெய்வக் கவிகையை
மான்வாழும் மாசின் மதி என்னும் - கோன் உடைப்
பாங்கு வளை யாழிப் பார்மடந்தை தன்னுடைய
பூங்குவளை மாலை புனைக என்னும் - தேங்கமலத்து
அற்புத வல்லி அவளே பிறந்துடைய
கற்பக மாலையைக் காதலிக்கும் - பொற்பார்
பொலம்புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்க
வலம்புரி மாலைக்கு மாழ்கும் - பொலன் தொடி
போர் ஆர வாரப் பொலன்கொடி பெற்றுடைய
போர் ஆர மாலைக்குப் பேது உறும் - நேரியன்
ஏந்திழை மாதர் எவர்க்கும் பொதுவாய
பூந்துழாய் மாலை புனைக என்னும் - வேந்தன்முன்
இவ்வகை அல்லது இலங்கு இழையார் மால்கூரும்
அவ்வகை கூராள் அயல் ஒருத்தி - எவ்வுலகும் |
|
|
உரை
|
|
|
|
|
290
|
முற்ற முடிக்க முடிக் காம வேள் சூட்டும்
கொற்ற முடி அனைய கொண்டையாள் - அற்றைநாள்
சாத்தும் அபிடேகத் தாரைபோல் தாழ்கின்ற
கோத்த பருமுத்தக் கோவையாள் - தேத்து
விடம்போல் பணிகட்கு வேழங்கட் கெல்லாம்
கடம்போல் கொலை ஊறும் கண்ணாள் - அடங்கா
அயிர்ப்பான் மறலி மகள் உருக்கொல் ஈது என்று
அயிர்ப்பார் அயிர்க்கும் அழகாள் - உயிர்ப்பாவை
கொல்லிக்கும் உண்டு உயிர் உண்மை த்ரி கூடத்துச்
சொல்லிக் கிடக்கும் துணைமணிக்கும் - வல்லி
இதற்கு நடைவாய்த்து உயிர்வாய்த்தது என்ன
மதர்க்கும் ஒரு திரு மாது - முதல் தன்
|
|
|
உரை
|
|
|
|
|
300
|
பணிவாயில் ஆயம் பரந்து அகலக் கிள்ளைக்கு
அணிவாயின் முத்தம் அருளி - மணிவாயால்
சொல்லாய் எனக்கு அன்னை சொல்லையோ நீ என்றே
வல்லாய் பிற அறிய வல்லவோ - கல் அரணக்
கோழித் திருநகரக் கொற்றவற்கு வெற்றிப் போர்
ஆழித் தடக்கை அபயற்கு - ஆழியாய்
காக்கும் கடலேழும் ஆடும் கடாரமோ
ஆக்கு நதி ஏழும் ஆரமோ - தேக்கிய
பண் ஏழும் கன்னாவ தங்கிசமோ பண்டு அளந்த
மண் ஏழும் வாகு வலயமோ - தண் நறும்
தூவல் நறவப் பொழில் ஏழும் தொங்கலோ
காவல் மலை ஏழும் கந்துகமோ - ஏவலால்
செய்யு நலன் உடைய கோள் ஏழும் தீபமோ
பெய்யு முகில் ஏழும் பேரியமோ - வையகம்
கூறும் அவை இவை என்று குறுந்தொடி
வேறு தனிவினவும் வேலைக்கண் - சீறும் |
|
|
உரை
|
|
|
|
|
310 |
ஒருதன் அடியின் மடிய உபய
மருது பொருத வயவன் - விருதன்
விலையில் அமுத மதன விமலை
முலையின் முழுகு முருகன் - வலைய
கனக சயில எயிலி கணவன்
அனகன் அதுலன் அமலன் - தினகரன்
வாசவன் தென்னன் வருணன் அளகேசன்
கேசவன் பூச்சக்ர கேயூரன் - வாசிகை
ஆழிப் பெருமான் அபயன் அனபாயன்
சூழிக் கடாயானை தோன்றுதலும் - தாழாது |
|
|
உரை
|
|
|
|
|
320
330
340 |
சென்றாள் திரு முன்பு செந்தளிர்க் கைகுவித்து
நின்றாள் இனி வறிதே நிற்குமே - என்றாலும்
கோடு கழல் கண்டல் கொண்டற்கு மாலதி
ஓடு நகாதே டையாதே - பீடுஉற
வந்து தொடும் குன்ற வாடைக்கு இளம் கொன்றை
கொந்து தொடாதே குழையாதே - செந்தமிழ்த்
தென்றல் எதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று
மன்றல் கமழாதே வாழாதே - என்றுபோய்
சூது அளவு அல்ல துணைமுலை தூயகண்
காது அளவு அல்ல கடந்தனபோய் - மாதர்
உருவத்து அளவு அன்று ஒளி ஓக்கம் ஆக்கம்
பருவத்து அளவு அன்று பாவம் - தெருவத்து
உடையது உடையாதாம் உள்ளம் உற ஓர்ந்து
அடைவது அடையாதாம் அச்சம் - கடைகடந்து
சேயினு நல்ல பெருமாள் திருத்தடந்தோள்
தோயினும் தோய மனம் துணியும் ஆயினும்
ஏந்து தடந்தோள் இணைப்பணைப்புக் கண்டிலன்
காந்து தனதடம் கண்டிலன் - பூந்தடந்
தேரின் அகலும் திருந்து அல்குல் கண்டிலன்
காரின் நெகிழ் அளகம் கண்டிலன் - மாரவேள்
எய்யும் ஒரு கருப்பு வல்வில் எடுத்தானோ
கொய்யு மலர் அம்பு கோத்தானோ - தையல் மால்
மந்தாகினிக் கோன் திருப்புருவ வார்சிலையும்
செந்தாமரைக் கண்ணும் செய்தது என - நொந்தார் |
|
|
உரை
|
|
|
|
|
350 |
வளைத்தளிர்ச் செங்கை மடுத்து எடுத்து வாசக்
கிளைத்தளிர்ப் பாயல் கிடத்தித் - துளைத்தொகை
ஆய்க்குழல் என்றால் அதுவும் அவன் ஊதும்
வேய்க்குழல் என்று விளம்பியும் - தீக்கோள்
நிகழ்நிலா அன்று நிருபகுல துங்கன்
புகழ்நிலா என்று புகழ்ந்தும் - இகலிய
பல்லியம் அன்று பரராச கேசரி
வல்லியம் என்று மருட்டியும் - மெல்லிய
கல்லாரம் அன்று கதிரோன் திருமருமான்
மெல்லாரம் என்று விளம்பியும் - நல்லார்
அருத்தி அறிவார் அவை இவை என்று
திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் - ஒருத்தி |
|
|
உரை
|
|
|
|
|
360
|
உருவ வரிக்கண் ஒழுக ஒழுகப்
புருவம் உடன் போதப் போத - வெருவி
வனமுலை விம்மி வளர வளரப்
புனைத்தோள் புடை போதப் போத - வினைவர்
அருங்கலை அல்குல் அகல அகல
மருங்கு போய் உள்வாங்க வாங்க - நெருங்கு
பர அர ராச பயங்கரன்மேல் வேட்கை
வர வர ஆற்றாத மங்கை - பொர வரு |
|
|
உரை
|
|
|
|
|
370 |
தேம் இரைக்கும் காலையின் ஞாயிற்று இளஞ்செவ்வி
தாமரைக்கே சாலும் தரத்ததோ - காமர்
அமுத மதியத்து அலர்நிலா முற்றும்
குமுத நறுமுகைக்கே கூறோ - நமதுகார்
கானின் மடமயிற்கே காணியோ தண் இள
வேனில் குயிற்கோ விதித்ததோ - தேன் இமிர்
தண்டாமரையாள் தலைவனை யாமும் போய்க்
கண்டால் என் என்னும் கடைப்பிடியாள் - பண்டை |
|
|
உரை
|
|
|
|
|
380
|
ஒளியார் அணங்கு ஆதல் தம்மைத் தாம் ஒன்றும்
தெளியாத வாறே தெளிந்தும் - களி அன்னம்
வாவிக் கரையில் வர நீர் அர மகளிர்
சேவிக்க நின்று ஆடும் செவ்வியாள் - காவில்
புகுதில் வனதெய்வப் பூங்குழை ஆயத்
தொகுதி புடைபரந்து சூழ்வாள் - மிகுதேன்
இரை அரவம் தரு செய்குன்ற நீங்கா
வரை அர மாதரின் வாய்ப்பாள் - பெருவிலைய
முத்தில் விளங்கின் முளரித் தவளப் பூங்
கொத்தின் அணங்கு அனைய கோலத்தாள் - பத்திய
பச்சை மரகதம் பூணில் பணைமுலைசூழ்
கச்சை நிலமகள்போல் காட்சியாள் - நிச்சம்
உரக பணமணி கொண்டு ஒப்பிக்கில் ஒப்பு இல்
வரக மலை அன்ன வனப்பாள் - நரபதி |
|
|
உரை
|
|
|
|
|
390
|
மைம் முகில் வண்ணத்து வானவன் மீனவன்
கைம் முகில் மேல்வரக் கண்டதன் பின் - மொய்ம் மலர்
நீலமே வேய்ந்து அடுக்க நீலமே பூண்டு உடுக்க
நீலமே அன்றி நினையாதாள் - நீலமே
முன்னுடைய செங்கேழ் எறிக்கும் முறிக்கோலம்
தன்னுடைய மாமை தழீஇக் கொள்ளப் - பின்னர்
நெருங்கு கழுநீரும் நீலோற்பலமும்
ஒருங்கு மலர்தடம் ஒத்தும் - மருங்கே
இறங்கிய கற்பக வல்லியும் ஏறி
உறங்கிய தும்பியும் ஒத்தும் - பிறங்க
வயங்கு தளர் ஈனு மாங்கொம்பர் பூக்கொண்டு
உயங்கு கருவிளை ஒத்தும் - தயங்குவாள்
|
|
|
உரை
|
|
|
|
|
400
410
|
கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு
ஞாலத்தார் எல்லார்க்கு நாயகற்கு - நீலத்தின்
காசும் கலாபமும் மேகலையும் காஞ்சியும்
தூசும் துகிலும் தொடியு நான் - கூசேன்
வெளியே தருவேன் விரை ஆரத் தொங்கல்
கிளியே தருமேல் நீ கேளாய் - அளியே நீ
தாது கடிகமழ் தாதகித் தாமத்தின்
போது கொழுதப் புறப்படாய் - ஓதிமமே
எங்கள் பெருமாளை இங்கே தருவான் நீ
உங்கள் பெருமான் உழைச்செல்லாய் - பைங்கழல் கால்
சேயை நினைந்து ஏகி நம்முடைய சேக்கையான்
சாயல் மயிலே தலைப்படாய் - பாயும்
கடமானே போல்வாற்கு நீ நின்னைக் காட்டின்
மடமானே தானே வரும் காண் - கடிது என்று
கொள்ளை கொள் காமன் கொடும்பகைக்குக் கூசித் தன்
பிள்ளைகளோடு இருந்து பேசுவாள் - உள்ள |
|
|
உரை
|
|
|
|
|
420
430 |
அலகில் குல நீலரத்ன ஆபரணம்
விலகி வெயிலை விலக்க - உலகில்
பெரிய பெருமாள் பெரும்பவனி வீதி
இரிய எதிர் ஏற்று இழந்தாள் - வரிவளை
ஆயத்தார் என்னில் அளியத்தார் - எல்லாரும்
நேயத்தார் அல்லரே நிற்பரே - தேயத்தார்
மன்னனை அஞ்சாதே வாரணத்தே அஞ்சாதே
மின் அனையாளையு மீதூரா - முன்னர்க்
கடம் ஆக்கும் தெய்வக் களிறு விரும்பும்
இடமாதும் யாம் என்பார் போலப் - படமாய்
இரைப்பச் சுரும்போடு இருள் அளக பாரம்
நிரைத்து வனம் ஆகி நிற்பார் - விரைப்பூண்
முலையாய் வளரும் முரட்குவடு கொண்டு
மலையாய் நெருங்க வருவார் - தொலையாத
பாய பருமுத்தின் மாலை பல தூக்கித்
தூய அருவியாய்த் தோன்றுவார் - சாயல்
கொடியாய் அடிசுற்றிக் கொள்வார் புரக்கும்
பிடியாய் நறுந்துகள் பெய்வார் - விடுதுமோ
யாழாய் மிடற்றால் வணக்குதும் யாம் என்பார்
தோழாய் வளைத்து எங்கும் சூழ்போவார் - ஆழிக்கைத்
தியாகனை மானதனைத் திக்கானை எட்டுக்கும்
பாகனையே பின்சென்று பற்றுவார் - தோகையர் |
|
|
உரை
|
|
|
|
|
440
|
நல் துகில் கொண்ட நறுந்துழாய் மார்பா நின்
பொன் துகில் தந்து அருளிப் போதென்பார் - மற்று இவள்
தன்சங்கம் கொண்ட தடந்தாமரைக் கண்ணா
நின்சங்கம் தந்து அருளல் நேர் என்பார் - மின்கொள்ளும்
இன் துயிற்கு எல்லாம் எறி பால்கடல் கொள்ளும்
நின் துயில் தந்து அருள் நீ என்பார் - என்று என்று
மானு மயிலும் அனையார் வளைத் துளைப்பத்
தானும் களிறும் தடையுண்ட - கோனும்
தடுத்த கொடிக்குச் சத மடங்கு வேட்கை
அடுத்த திருநோக்கு அருளாக் கொடுத்த
திருநகை மூரல் திகழ்ந்தான் அணங்கும்
ஒருநகை கூர்ந்து ஒருவாறு உய்ந்தாள் - பெருநகை
எய்தி அனங்கன் எழப் போனான் மாதரும்
உய்து சிறந்தாள் உழைச்சென்றார் - நொய்தில்
|
|
|
உரை
|
|
|
|
|
450 |
தொடுக்கும் புறம் சொல் தொடாமே முலைமீது
அடுக்கும் பசலை அடாமே - உடுக்கும்
துகிலும் சரியாமே சுற்றத்தார் எல்லாம்
புகிலும் புகாமே பொராமே - அகில் நாறும்
பள்ளியில் செல்லாள் பருவ முருகன் தோய்
வள்ளியின் சால வயங்கினாள் - ஒள்ளிழை
|
|
|
உரை
|
|
|
|
|
460
|
பின்னர் ஒருத்தி பெருமைக்கு அர மகளிர்
முன்னர் உரைக்கும் முதன்மையாள் - சென்னியில்
வண்டல் இடு நாவி வார்குழற்கு மாறு உடைந்து
கொண்டல் சொரிமுத்தின் கொண்டையும் - பண்டுவந்து
ஏற்றுப் பணை பணைக்கு மென்தோள் இரண்டுக்கும்
தோற்றுச் சொரிமுத்தின் சூழ்தொடியும் - ஆற்றல்
கலம்புரி செல்வக் கழுத்திற்குத் தோற்ற
வலம்புரி முத்தின் வடமும் - பொலம்பூண்
எதிர்க்கு முலைக்கு இரிந்த திக்கயக் கோடு இட்ட
கதிர்க்கு நகைமுத்தின் கச்சும் - அதிர்க்கும்
அடல்விடும் அல்குல் பரவைக்கு உடைந்து
கடல்விடு முத்தின் கலையும் - உடலி மேல்
ஏந்தும் இனைய இளநிலா விட்டு எறிப்பப்
போந்து மறுகு புகுந்து ஒழிந்தாள் - வேந்தனும் |
|
|
உரை
|
|
|
|
|
470
|
சண் கோடி மாணிக்கம் ஒன்றும் சமந்தகமும்
உள் கோடு கேயூரத் தூள் தெறிப்பக் - கொட்கும்
கடல்சேப்ப வந்த கவுத்துவம் ஒன்றும்
அடல்சேக்கு மார்பிற்கு அமைய - உடலி
அனந்த பணா மவுலி ஆயிரமும் ஒற்றை
நனந்தலை மௌலிக்கு நாண இனம் கொள்
முறுகு கதிரின் முகம் திரிய வேற்று
மறுகு திருமலர வந்தான் - குறுகும் |
|
|
உரை
|
|
|
|
|
480
|
நடை ஆய வெள்ளமும் நாண் நிரம்பு திங்கள்
குடை ஆய வெள்ளமும் கூடி - அடைய
மதி உதயம் என்று வணங்க வனச
புதி உதயம் என்று பணியத் - துதியில்
ஒருவரும் ஒவ்வா உருவ மீக்கூறும்
இருவரும் எய்திய எல்லைத் - தெருவில் |
|
|
உரை
|
|
|
|
|
490
|
நெருங்க மகளிர் நிறம் திறக்க எய்து
மருங்கு வருகின்ற மாரன் - திருந்திய
பாய பகட்டு அல்குல் பாரா அதன் பரப்பில்
போய மருங்குல் புறநோக்காச் - சாயா
முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள்
நிலையின் பணைப்பு நினையாக் - கொலையால்
இடைக்கும் உலகு அடைய ஊடு ஆடு கண்ணின்
கடைக்கு முடிவு இன்மை காணாக் - கிடைக்கும்
பருவக் கொடி வதன பங்கேருகத்தின்
புருவக் கொடி முடியப் போகா - உருவக்
களிக்கும் புடவி சதகோடி கற்பம்
அளிக்கும் பெருமானை அஞ்சாக் - குளிர்க்கும்
கருங்கால் கொடுந்தேரை முட்டக் கடாவிக்
கொடுங்கால் சிலையைக் குனித்து - நடுங்கா
முகுந்தன் இவன் என்று முன்பெய்த வேவில்
புகுந்தது இது என்று போனான் - திகந்த
|
|
|
உரை
|
|
|
|
|
500
510 |
முழுது ஆள் அபயன் முகிள் நகையும் தோளும்
தொழுதாள் ஒருதானே தோற்றாள் - அழுதாள்
திரிந்தாள் கலைநிலையும் செம்பொன் துகிலும்
சரிந்தாள் துணைவியர் மேல் சாய்ந்தாள் - பரிந்தார்
முடைக்கை எதிர்க் குரவை கோத்தாய் முரல்யாழ்
நடைக்கை தொடுக்கை நகையோ - விடைப்பேர்
இனந்தழுவிப் பின்னையைக் கொள்வாய் இவளைத்
தனம் தழுவிக் கொள்கை தவறோ - அனந்தம்
கரும் துகில் அக் கோவியரைக் கொள்வாய் கமலை
தரும் துகில் நோக்கத் தகாதோ - விருந்து
துளவ முகிற்கிது வந்தது தூய
வளவர் திருக்குலத்து வந்தோ - அளவு இறந்த
வன்கண் இவள் அளவும் கண்டே மடவரல்
புன்கண் அடியேம் பொறேம் என்று - மின்கண்
இவை இவை சொல்லிப் போய் இன் அமளி ஏற்றக்
கவிர் இதழ் பின்னும் கலங்கத் - துவரின்
|
|
|
உரை
|
|
|
|
|
520
|
வியக்கும் துகிர் இனைய மேம்பட்டு உலகை
மயக்கும் திருவாய் மலர்க்கும் - நயக்கும்
பொருப்பு உருவத் தோளின் புதுமைக்கு நேரே
திருப் புருவம் செய்த செயற்கும் - பரப்பு அடையச்
செங்கேழ் எறித்து மறிக்கும் திருநயன
பங்கேருகம் சூழ் படுகொலைக்கும் - அங்கே
தரிக்குமே தென்றலும் சந்த்ரோதயமும்
பரிக்குமே கண்கள் படுமே - புரிக்குழலார்
பால் இருத்தி மம்மர் படப் படப் பையப் போய்
மால் இருத்தி உள்ள மயங்கினாள் - மேல் ஒருத்தி
|
|
|
உரை
|
|
|
|
|
530
540
|
தாளை அரவிந்தச் சாதி தலைவணங்கத்
தோளை உரகர் தொழ விருப்பாள் - நாளை
வளவர் பெருமான் வரும் பவனி என்று
கிளவி விறலியர்வாய்க் கேட்டாள் - அளவு உடைத்
தோர் இரா அன்று அம்ம இவ் இரா ஓதிமத்தோன்
பேர் இரா என்று பிணங்கினாள் - பேர் இரா
என்று விடியும் கொல் என்றாள் விடிவு அளவும்
நின்று சுடும் கொல் நிலவு என்றாள் - நின்றார்
அடுத்து அடுத்து ஏந்திய திவ்யா பரணம்
எடுத்து எடுத்து ஒப்பித்து எழுந்து - சுடர்க் கதிரோன்
மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த
காலைத் துணைவியைக் கண்டு எழுந்தாள் - காலையோன்
சேமித்த பூங்கோயில் எல்லாத் திரு என்று
காமித்து இதழின் கடைதிறப்ப - நேமி
மணக்கத் துணைஅன்றில் வாய் அலகு வாங்கித்
தணக்கக் கடிகாவில் சார்ந்தாள் - கணக்கதிர்
வந்து பொருவது ஒரு மாணிக்கச் செய்குன்றில்
இந்து சிலாதலத்தில் ஏறினாள் - குந்திக்
|
|
|
உரை
|
|
|
|
|
550 |
கடப்பன கன்னிமான் நோக்கியும் அன்னம்
நடப்பன பார்த்து நயந்தும் - தொடக்கிக்
களிக்கு மயில் குலம் கூத்தாடக் கண்டும்
கிளிக் குலம் பாட்டு எடுப்பக் கேட்டும் - பளிக்கு உருவப்
பாவை மணக்கோலம் பார்த்தும் பல நகை
பூவை பகரப் புறம் சாய்த்தும் - கோவை
அளிக் களியாட்டம் அயர்ந்தும் கபோத
விளிக் களி கூர்ந்து வியந்தும் - களிக்கப்
பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி
எழுச்சி முரசு ஒர்ந்து இருந்தாள் - கழல் செழியர்
|
|
|
உரை
|
|
|
|
|
560
570 |
தென்சங்கம் கொண்டான் திருச்சங்கம் செய்குன்றில்
தன்சங்கம் ஆகி எதிர் தழங்க - மின்சங்கம்
போல விழுந்தும் எழுந்தும் புடை ஆயம்
கோல மறுகு குறுகுவாள் - ஞாலம்
எடுக்கும் பணிமன்னன் மின் என்று இறைஞ்சிக்
கொடுக்கும் சுடிகைக் குதம்பை - கடுக்கும்
மயில் வேண்டும் சாயல் வதனாம் புயத்து
வெயில்வேண்ட வேண்டி விளைப்பப் - பயில்கதிர்
வெல்லாது தோள் சுடிகை மேக அளக இருள்மேல்
எல்லாப் பருதியும் போல் எறிப்பக் - கொல்குயத்து
வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச் சிகரம்
சூழ்சோதிக் சக்ரந் தொலைவிப்பக் - கேழ் ஒளிய
பைம்பொன் கடிதடம் சூழ் மேகலை பார்சூழ்ந்த
செம்பொன் திகிரி எனத் திகழ - அம்பொன்
புறவும் சகோரமும் பூவையும் மானும்
பிறவும் இனம் என்று பெட்ப - உறவாய்
அடர்ந்த பொலன் கேழ் அடிச்சிலம்புக் கன்னம்
தொடர்ந்து மறுமாற்றம் சொல்ல - நடந்துபோய்
மானவற்குப் புக்கதுறை வல்லவற்கு வில்லவற்கு
மீனவற்குச் சென்று வெளிப்பட்டாள் - தானே
|
|
|
உரை
|
|
|
|
|
580
|
அலரு முகமும் குவி கையும்
ஆகி
மலரு முகுளமு மானப் - பலர்காணத்
தேனும் அமுதும் கலந்து அனைய தீங்கிளவி
மானும் அடைய மனம் கொடுத்தாள் - கோனும்
தடாதே தடுத்தாளைத் தன்கடைக்கண் சாத்தி
விடாதே களிறு அகல விட்டான் - படாமுலைமேல்
ஒத்து இலங்கு வேர் வந்து உறைப்ப நறைக் கழுத்து
நித்திலம் கால் சங்க நிதி நிகர்த்தாள் - எத்திசையும்
சோர்கின்ற சூழ்தொடிக்கைச் செம்பொன் தொடி வலயம்
நேர்கின்ற பற்ப நிதி நிகர்த்தாள் - தேரின்
அரிவை துகில் நெகிழ அல்குல் அரவின்
உரிவை விடும்படம் ஒத்தாள் - சொரி தளிர்
மாங்கொம்பர் என்ன வருவாள் சுர மரப்
பூங்கொம்பர் என்னப் புறம் கொடுத்தாள் - பாங்கியரும்
|
|
|
உரை
|
|
|
|
|
590
600 |
ஒற்றை உடைவாள் ஒருபுடையாள் கொற்றவையேல்
மற்றை அருகு இவளை வைத்திலனே - பெற்றுடைய
ஆரத் தரணியாள் வாழ்தோள் எதிர் மற்றை
ஆரத் திருத்தோள் அளித்திலனே - நேர் ஒத்த
பூந்தாமரையாள் எதிரே இப் பொற்றொடிக்கும்
ஏந்து ஆர மார்பம் இசைந்திலனே - வேந்தர்கோன்
அன்னங்காள் நீர்சென்று அரற்றீர் கபோதங்காள்
இன்னம் அபயம் புக்கு எய்திடிர் - நன்நுதல்
பாவைகாள்கொல்யானைப்பாஅடிக்கீழ்ப்பணியீர்
பூவைகாள் செங்கோன்மை போற்றி செய்யீர் - தாவிப்போய்ப்
பேதை மடமான் பிணைகாள் வளைத் துளையீர்
கோதை மதுகரங்காள் கூப்பிடீர் - யாது எல்லை
என்னா இதற்கு என்று இரங்கி இலங்கு இழை
தன்னார்வ மாற்று எதிர் சாற்றினார் - பின்னர்ப்
|
|
|
உரை
|
|
|
|
|
610 |
பொருவில் ஒருத்தி புறம் காக்கு மாதர்
இருவில் இடைநின்று இறைஞ்சித் - திரு உலாப்
போதும் பெருமாள் புகுதும் அளவும் இங்கு
யாதும் பயிலாது இருத்துமோ - சூது ஆடேம்
பந்து ஆடுது நாம் பசும்பொன் குழை சென்று
வந்து ஆடு கண்ணாய் வருக என்று - சந்து ஆடும்
கொம்மை வருமுலையும் தோளும் குறியாதே
அம்மென் மருங்குல் பார்த்து அஞ்சாதே - தம்முடனே
கொண்டாள் அருகு இருந்த பாணரும் கோடியரும்
கண்டார் எவரும் கடுகினார் - மண்டி
எடுத்தார் எடுத்தன யாவும் எவரும்
கொடுத்தார்ஒருதானே கொண்டாள் - அடுத்து அடுத்து
முன்னம் எறி பந்தின் மும்மடங்கு நான்மடங்கு
இன்னம் எறிய வருக என்றாள் - அன்னம்
|
|
|
உரை
|
|
|
|
|
620
|
அடியும் இருகையும் அம்புயம் என்று
படியும் ஒழுங்கில் பயில - முடியும்
தொடை இடை போய சுழல்கூந்தல் பந்தர்க்கு
இடை இடை நின்ற கால் ஏய்ப்ப - அடைய
விழுந்தன பார்கடவா வாறு போல் மேல் போய்
எழுந்தன கைகடவா என்னக் - கொழுந்தளிரால்
ஏற்றுதி விண்கொளா அம்மனை எம்மனை
ஆற்றுதி ஈது இங்கு அரிது என்னப் - போற்றரும்
கையோ பத யுகமோ கண்ணோ கடுகினவை
ஐயோ அறிதல் அரிது என்னப் - பொய்யோ
திலக நுதலின் திருவே என்று ஓதி
உலகு வியப்ப என்று ஓத அலகு இறந்த
பந்தாட்டு அயர்ந்து பணை முலையார் பாராட்ட
வந்தாட்டு நீராட்டு மண்டபத்து - விந்தை
|
|
|
உரை
|
|
|
|
|
630
|
பெருமான் அனபாயன் பேரிய மூன்றும்
தரும் ஆரவாரம் தழங்க - ஒரு மாதர்
ஏந்து துகில் ஒன்று உடுத்தாளோ இல்லையோ
போந்து மறுகு புகுந்து ஒழிந்தாள் - மாந்தளிரும்
|
|
|
உரை
|
|
|
|
|
640
650 |
தாதும் தமனிய மாலையும் தண்கழுநீர்ப்
போதும் பிறவும் புறம் புதையா - ஓதிக்குச்
சென்னி யமுனைத் தரங்கமும் தீம்புனல்
பொன்னி அறலும் புறம் கொடுப்பப் - பின்னர்
ஒழுங்காய சேய் அரிக் கண் ஊடு ஒட்டும் மையால்
மழுங்காது கைபோய் மதர்ப்பச் - செழுங் கழுத்து
ஒன்று புனைந்தது ஒருசங்க மாணிக்கம்
இன்று பயந்தது என விளங்க - நின்று இலங்கும்
உச்சக் கலன் அணியாத் தோள் இணைக்கோர் இரண்டு
பச்சைக் பசுங்காம்பு பாடு அழிய - நிச்சம்
அசும்பு பொலன் கச்சின் அற்றத்தே கொங்கை
விசும்பு குடிவாங்க வீங்கப் - பசுஞ்சுடர்க்
கோல வயிறுதர பந்தனக் கோண் நீங்கி
ஆலின் வளர் தளிர் இனைதாகி - மேலோர்
இழியும் ஒருசாம ரேகையும் உந்திச்
சுழியும் வெளி வந்து தோன்றக் - கெழிய
இசையின் கலாபாரம் யாப்பு உறா அல்குல்
திசையின் புடை அடையச் செல்ல - மிசையே
பொறை புரி கிம்புரி பூட்டாத் துடைதூசு
உறையின் மரகதம் ஒப்ப - அறையும்
சிலம்பு சுமவாத செந்தாமரை போய்
உலம்பு குரல் அஞ்சாது ஓடக் - கலம் பல
தாங்கி உலகத் தரிப்பத் தரி என்று
பாங்கியர் எம்மருங்கும் பாராட்டப் - பூங்கேழ்
உருவில் ஒளிபோய் உலகு அடையக் கோப்பத்
தெருவில் எதிர் கொண்டு சென்றாள் - பெருமாளும்
|
|
|
உரை
|
|
|
|
|
660
670 |
கொற்றக் குடைக் கீழ் வட மேருக் குன்று அனைய
வெற்றிக் களியானை மேல்வந்தான் - பற்றி
இருவரும் தம்மில் எதிர் எதிர் நோக்கா
ஒருவர் என வேட்கை ஒத்தார் - குருசில்
மறந்த கடல் கடைய வந்தாள் மேல் அன்பு
சிறந்த திரு உள்ளும் செல்லச் - சிறந்தவன்
ஆக அகத்து இருந்தாள் ஆகத் திருவுள்ளக்
கோ கனகத்தின் கொடு சென்றான் - நாகு இள
நவ்வி மட நோக்கான் ஞாலத்தை ஓர் அடியால்
வவ்வி இரு தோளில் வைத்த மால் - செவ்வி
முருகு கமழ முகந்து முகந்து
பருகு மட மகளைப் பாரா - அருகு
மடுத்து முயங்கி மயங்கிய தாயர்
எடுத்து மலர் அணை மேல் இட்டார் - அடுத்து ஒருவர்
|
|
|
உரை
|
|
|
|
|
680 |
கொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும்
நெய்யாத பொன் துகில் நீவிக்கும் - செய்யாத
தொங்கல் துளைக் கோவை அல்குற்கும் சூழ் கனகத்
துங்கப் பணி வலையம் தோளுக்கும் - கொங்கைக்குப்
பொன்னிப் புகாரின் பொலன் குழம்பும் வல்லத்தின்
கன்னிப் பனந்தோடு காதிற்கும் - சென்னி
அளிப்பக் கொணர்ந்தனம் யாம் அன்னமே என்று
தெளிப்பச் சிறிதே தெளிந்தாள் - கிளிக்கிளவி
|
|
|
உரை
|
|
|
|
|
690
|
மற்று ஒருத்தி செந்தாமரை மலர் மேல் என்னுடனே
செற்று ஒருத்தி வாழும் எனச் செறுவாள் - சுற்றவும்
தெட்டுத் தசும்பசும்பு தெங்கின் இளம்பாளை
மட்டுத் தமனிய வள்ளத்து - விட்டு
மறித்து வயிர மடல் ஒன்றின் வாக்கித்
தெறித்து ஞிமிறு ஓப்பிச் செவ்வி - குறித்துக்கொண்டு
ஏந்தி முகமன் இயம்பி இருந்து ஒரு
காந்தி மதி வதனி கைக்கொடுப்ப - மாந்தி
குதலை குழறிக் குயிற்கும் கிளிக்கும்
விதலை உலகில் விளைத்து - நுதலை
வியரால் அலங்கரியா வேந்தன் கொடுமை
அயரா வெளிவிடா அஞ்சாப் - பெயரா
அருகு இருந்த பாணனை நோக்க அவனும்
குருசில் வரு தமரம் கூறப் - பரி புரக்
|
|
|
உரை
|
|
|
|
|
700
710
|
காலு நிதம்பமும் கையும் திருக்கழுத்தும்
கோலு மதாணிக் குலம் எல்லாம் - மேலோன்
குரகதம் ஏழு முழுகிக் குளிப்ப
மரகத சோதி வயங்கப் - புருவ
இடைபோய்க் குமிழின் மலர் வந்து இறங்கப்
புடைபோய்க் கருவிளை பூப்ப - விடையாக
ஏக முருக்கு மலர இளம்பாளைப்
பூக மிடறு வரப் பொதியப் - போகப்
பெரும் பெரும் தெங்கு இளநீர் தாழ்ந்து பிறங்கப்
பரும்பெருங் காம்பு பணைப்ப - விரும்பும்
நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நளியக்
குறுந்தொடிக் காந்தள் குலைப்பச் - செறிந்து
சலித்துத் தனி இள வஞ்சி தளரக்
கலித்துக் கதலி கவின - ஒலித்தே
அளிக்கும் சகோரமும் அன்னமு மானும்
களிக்கு மயூர கணமும் - விளிக்கும்
புறவும் தொடர்ந்து உடனே போத அவையே
பிறவும் இனம் என்று பெட்பச் - சுற உயர்த்தோன்
காலை புகுந்து கரப்பது ஒரு பசும்பொன்
சோலை என வந்து தோன்றினாள் - ஞாலத்தோர்
|
|
|
உரை
|
|
|
|
|
720
|
தெய்வப் பெருமாளும் சேவடி முன்குவித்துக்
கைவைத்து நின்றவளைக் கண்ணுற்றான் - தையல்
வெரு வருமுன் சூர் தடிந்த வேளே நயக்கும்
பருவமு மார்பிற் பணைப்பும் - புருவமும்
செந்தாமரைக் கண்ணும் மாமேருவைச் சிறிய
பந்தாகக் கொள்ளும் பணைத்தோளும் - உந்தியும்
உய்ய அருள் காது மூக்கும் உடுபதியை
நைய வெறிக்கு நகைநிலவும் - செய்ய
பவளத் துவர்வாயும் பாதாம் புயமும்
கவளக் களிற்று எளிதில் கண்டு - குவளைக்
கருநெடுங் கண்களிப்ப உள்ளம் களிப்பப்
பருநெடுந் தோளும் பணைப்ப - ஒருநின்
|
|
|
உரை
|
|
|
|
|
730
740 |
சிலம்புகள் ஓர் ஏழும் சென்று அடைந்து நோலேன்
அலம்பு கடல் ஏழும் ஆடேன் - வலம்புவனம்
ஏழும் செல அயரேன் எம் கோவே நின்குடைக்கீழ்
வாழும் திரு எனக்கு வாய்க்குமே - தாழி
முடை தழுவு தோளும் முலையும் தழுவ
விடைதழுவு தாமரைக்கை வீரா - கட கரியைக்
கைதழுவிக் கோரத்தைக் கால் தழுவி நின்புலியை
மெய்தழுவிக் கொள்ள விடுவாயோ - மொய்திரைசூழ்
ஞால மறிக்கவும் நாயக நின் புகல்வில்
கால உததி கலக்கவும் - சால
வருந்தா வகை வருந்த ஆழி பெயரும்
பெருந்தேவியார்க்குப் பெறலாம் - திருந்திய
குந்தம் ஒசித்ததுவும் கொற்றத் திருத்தோளால்
வந்த விடை ஏழு மாய்த்ததுவும் - முந்துறக்
கோ இய மாதர்க்கே உள்ளம் குறை கிடந்த
ஆவியே மாது ஆக அஞ்சுமே - ஓவிய
|
|
|
உரை
|
|
|
|
|
750
|
சேரன் சிலையினும்
சீரிதே சென்று ஒசிய
மாரன் சிலையை வணக்காயால் - சேரன் தன்
முன்றில் பனை தடிந்தாய் முட்டாது இரவு ஒறுக்கும்
அன்றில் பனை தடிதல் ஆகாதோ - கன்றி
மலைக்கும் செழியர் படைக் கடலை மாய்த்தாய்
அலைக்கும் கடல் மாய்த்து அருளாய் - மலைத்தவர்
தங்கள் புகழ் நிலவை மாய்த்தாய் அரிமரபில்
திங்களின் நண் நிலவு தீராயால் - பொங்கு ஒலி நீர்த்
தெம்முனை யாழ் தடிந்தாய் எங்கள் செவி கவரும்
எம்முனை யாழ் தடிந்தால் என்செய்யும் - செம்மணியின்
செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்
வெஞ்சோதி கண்டால் விலக்காயால் - வெஞ்சமத்துக்
காதி விடை பண்டு காடவன் முன் தடிந்தாய்
வீதி விடை தடிய வேண்டவோ - யாதுகொல்
வன் பல்லவம் துகைத்த வாள் தானை இன்று இந்த
மென் பல்லவம் துகையா மேம்பாடு - தன்பூங் |
|
|
உரை
|
|
|
|
|
760
770 |
கருப்புச் சிலை கொண்டு
மோதும் கழுத்தில்
கருப்பு நாண் புக்கு அழுந்தத் தூக்கும் - நெருப்பு உமிழ்
அப்புக் கழு ஏற்று மாறாப் பெருங்கோப
வெப்புப் படுத்து எங்கள் மெய் உருக்கும் - தப்பா
உடல் பிளவோட ஒரு தேரிட்டு ஊரும்
கடல் மகர போசனம் ஆக்கும் - விடு தூதால்
அக் கால தண்டம் அகற்றி யுலகு அளித்தாய்
இக்காம தண்டம் எளிது அன்றே - மைக்கோல
வண்ணா வளர்ந்த மகராலய மறந்த
கண்ணா அநங்கன் போர் காவாயேல் - மண் உலகில்
எப்படி ஆவார் இளம் பிடியார் என்று என்று
மைப்படியும் கண்ணாள் வருந்தினாள் - இப்படியே
தையலார் பொன் தோகைச் சாயலார் கை அகலா
மையலார் பேர் அலராய் மன்று ஏற - வையம்
பெரு குடையா நீர் ஏழும் பார் ஏழும் பேணும்
ஒரு குடையான் போந்தான் உலா. |
|
|
உரை
|
|
|
|