தொடக்கம் |
தேடுதல் |
|
|
1
10 |
புயல் வண்ணன் பொன்
பதுமப் போதில் புவனச்
செயல் வண்ணம் காட்டிய சேயோன் - உயிர் அனைத்தும்
காட்டும் பதின்மரினும் காசிபன் ஏழ் புரவி
பூட்டும் தனி ஆழிப் பொன் தேரோன் - ஒட்டி
அற ஆழி மைந்தன் மேல் ஊர்ந்தோன் அவனி
புற ஆழி முட்டப் புரந்தோன் - மறையோற்குப்
பூவின் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும்
நாவின் பழுது அஞ்சி நல்கினோன்-வாவியில்
புக்க துறையில் பகைப் புலியும் புல்வாயும்
ஒக்க ஒருகாலத்து ஊட்டினோன் - புக்கால் |
|
|
உரை
|
|
|
|
|
20 |
மறான் இறை என்று
சரண் அடைந்த வஞ்சப்
புறா நிறை புக்க புகழோன் - அறா நீர்த்
தரங்கக் கடல் ஏழும் தன்பெயரே ஆகத்
துரங்கப் பசு நாடித் தொட்டோன் - வரம் கொள்
சுர நதி தன்பெயர் ஆகச் சுருதி
வர நதி சாபத்தை மாய்த்தோன் - தரணிபர்
மல்லல் மரபை ரகுவின் மரபு என்று
சொல்ல உலகு அளித்த தொல்லையோன் - செல்லலால்
வந்து இரந்த வானவர்க்குத் தானவர்தம் போர் மாய
இந்திரனை ஏறு ஆக்கி ஏறினோன் - முந்தும் |
|
|
உரை
|
|
|
|
|
30 |
ஒரு தேரால் ஐ இரண்டு
தேர் ஓட்டி உம்பர்
வரு தேரால் வான் பகையை மாய்த்தோன் - பொருது
சிலையால் வழிபடு தெண் திரையைப் பண்டு
மலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே
வாங்கும் திருக்கொற்ற வாள் ஒன்றின் வாய்வாய்ப்பத்
தூங்கு புரிசை துணித்தகோன் - வீங்கு
குடகடற்குச் சார்பு குணகடலே ஆக்கும்
வடகடற்கும் தென்கடற்கு மன்னன் - முடுகிக
கரை எறிந்த பொன்னி கடல் ஏழும் கோப்ப
வரை எறிந்த மன்னர்க்கு மன்னன் - தரையின் |
|
|
உரை
|
|
|
|
|
40 |
பெருமகளைத் தீ வேட்ட
பின்னரும் சேடன்
திருமகளைக் கல்யாணம் செய்தோன் - பரநிருபர்
கல் மலை மார்பும் கடவுள் வட மேருப்
பொன் மலை மார்பும் புலி பொறித்தோன் - சொல் மலைய
நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால் தளையை விட்ட கோன் - புல்லார்
தொழும்பு உடைய ஆகத்துத் தொண்ணூறும் ஆறும்
தழும்பு உடைய சண்ட ப்ரசண்டன் - எழும்பகல்
ஈழம் எழுநூற்றுக் காதமும் சென்று எறிந்து
வேழம் திறைகொண்டு மீண்டகோன் - சூழி |
|
|
உரை
|
|
|
|
|
50 |
மத கயத்தால் ஈரொன்பது
சுரமும் அட்டித்து
உதகையைத் தீத்த உரவோன் - முதுவானக்
கங்கையு நன்மதையும் கௌதமியும் காவிரியும்
மங்கையுடன் ஆடு மரபினோன் - பொங்கி
அலைவீசு வேலை அனைத்தினும் போய்த் தெம்மீன்
வலைவீசி வாரிய மன்னன் - கொலை யானை
பப் பத்து ஒரு பசிப்பேய் பற்ற ஒரு பரணி
கொப்பத்து ஒரு களிற்றால் கொண்ட கோன்-ஒப்பு ஒருவர்
பாட அரிய பரணி பகடு ஒன்றின்
கூடல சங்கமத்துக் கொண்டகோன் - நாடும் |
|
|
உரை
|
|
|
|
|
58 |
கலகமும் சுங்கமும்
காய் கலியு மாற்றி
உலகை முன் காத்த உரவோன் - பலவும்
தரணி ஒரு கவிகை தங்கக் கலிங்கப்
பரணி புனைந்த பருதி - முரணில்
புரந்தரன் நேமி பொருவு மகில
துரந்தரன் விக்கிரம சோழன் - பரந்தபன் என்று
ஆய பெயர் கொண்டு அகிலாண்டமும் புரந்து
சேய பெரிய திருக்குலத்து - நாயகன் |
|
|
உரை
|
|
|
|
|
59
67 |
சிற்றம்பலமும் திருப்பெரும்
பேரம்பலமும்
மற்றும் பலபல மண்டபமும் - சுற்றிய
மாளிகையும் பீடிகையும் மாடமும் கோபுரமும்
சூளிகையும் எத்தெருவும் தோரணமும் - ஆளுடையான்
கோயில் திருக்காமக் கோட்டமும் அக்கோயில்
வாயில் திருச்சுற்று மாளிகையும் - தூய செம்
பொன்னில் குயிற்றிப் புறம்பில் குறும்பு எறிந்து
முன்னில் கடல் அகழின் மூழ்குவித்த - சென்னித்
திருமகன் சீராச ராசன் கதிரோன் |
|
|
உரை
|
|
|
|
|
70
77 |
மருமகன் ஆகி மறித்தும்
- திருநெடுமால்
ஆதிப் பிறவி அனைத்தினும் உம்பர்க்குப்
பாதிப் பகை தடிந்து பாதிக்கு - மேதினியில்
செந்தாமரையாள் திருமார்பில் வீற்று இருக்க
வந்தான் மனு வம்ச மாமேரு - முந்தி
உடுத்த திகிரிப் பதினால் உலகும்
அடுத்த வர ராச ராசன் - அடல் திகிரிக்
கண்ணன் கன களபன் கண்டன் கதிரோனும்
தண் என் கவிகைச் சனநாதன் - எண்ணும்
தவன குல திலகன் தன்பெருந் தேவி |
|
|
உரை
|
|
|
|
|
80
86 |
புவன முழுதுடைய பூவை -
அவனியில்
எண்பெரு மாதிரத்தும் ஏறும் உடன் ஆணைப்
பெண்பெருமாள் அந்தப்புரப் பெருமாள் - மண் பரவ
ஓகை விளைக்கும் உபய குல ரத்னத்
தோகை உடனே துயில் எழுந்து - ஆகிய
மூர்த்தத்து அனந்த முரசு ஆர்ப்பக் காவிரித்
தீர்த்தத்து அபிடேகம் செய்து அருளிப் - போர்த்தி கிரி
மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும்
காலைக்க கடவ கடன் கழித்து - மூலப் |
|
|
உரை
|
|
|
|
|
90
94 |
பெரும்பேரணி தம்
பிதா மகன் காலை
வரும்பேரணி என்ன வாய்ப்ப - நிரம்பப்
பவளச் சடையோன் பணித்த படியே
தவள த்ரி புண்டரம் சாத்திக் - குவளைப் பூங்
கார்க் கோலம் ஆடியில் காண்பான் மகன் காமன்
போர்க்கோலம் காண்பானே போல் கண்டு - பார்த்திபர்தம்
தொல்லைத் திருமரபுக்கு எல்லாம் தொழு குலமாம்
தில்லைத் திருநடனம் சிந்தித்து - வல்லவர் |
|
|
உரை
|
|
|
|
|
95
100 |
சூழச் சுருதி அனைத்தும்
தொகுத்து எடுப்ப
வேழப் பெருமானை மேல்கொண்டு - வாழி
அரச வலம்புரி ஆர்ப்ப வதன்பின்
முரசு ஒரு மூன்று முழங்கத் - திரையின்
சுடர்பொன் கவரி எழப் பொங்கர்த் தொங்கல்
கடவுள் கவிகை கவிப்பப் - புடவியின்
மீட்டும் குறை அவுணர் போர் கருதி விண்ணவர்கோன்
தீட்டும் கொடிப் புலியாய்ச் சேவிப்ப - வாள் தானைத் |
|
|
உரை
|
|
|
|
|
110 |
தென்னரும் சேரலரும்
சிங்களரும் கொங்கணத்து
மன்னரு மாளவரு மாகதரும் - பின்னரும்
காந்தாரர் காலிங்கர் கௌசலர் உள்ளிட்ட
பூந்தார் நரபாலர் முன்போத - வேந்தர்
பொருவாத பூபால கோபாலன் என்னும்
திருநாம நின்று சிறக்க - வரு நாளில்
தென்மாடக் கூடல் சிறை மீட்ட கார்புகார்ப்
பொன்மாட வீதிப் பொடி அடக்கத் - தன்மீது |
|
|
உரை
|
|
|
|
|
118 |
கல் மாரி பெய்யும்
பிழையால் கடவுளர்கோன்
பொன் மாரி பெய்யும் புயல் ஏவப் - பின்னரும்
காமாரி சேய் என்றே காக்கும் எழுவரினும்
பூமாரி கௌமாரி முன் பொழிய - யாமம் தீர்
காலை வெயில் ஒதுங்கக் கார்களால் கார்களும் போய்
மாலை வெயிலால் மறித்து ஒதுங்கக் - கோலப்
பெருங்குற்று உடைவாளப் பேரொளி மேரு
மருங்கில் பெரும்புலி மான - நெருங்கிய |
|
|
உரை
|
|
|
|
|
120
130 |
கோளின் ஒழுங்கு மழுங்கக்
குல ரத்ன
ஒளி மகர ஒளி எறிப்பத் - தோளில்
இருபொறை தீரும் இருபாம்பு அரசும்
இருதொடி ஆயகொல் என்ன வர ரத்னம்
தாமே குயின்று தடம் கோளு நாளும் சூழ்
மாமேரு என்ன முடி வயங்கப் - பூமேல்
புடைநிலவும் தங்கள் புகழ் நிலவின் மேலே
குடைநிலவும் சக்ரகிரி கோல - உடையதன்
கைவைத்து அருளாமே தாமே கடன் கழிக்கும்
தெய்வப் படை ஐந்தும் சேவிப்பப் - பெய் கணைத்
தூணிப் புறத்து ஓடும் தோளில் சிலையோடும்
பூணித்து அனங்கவேள் முன்போத - மாணிக்கக் |
|
|
உரை
|
|
|
|
|
138 |
கோவையான் முக் குவட்டுக்
ஒரு திருப்
பாவையால் கொல்லிப் பனிவரையாய் - ஓவாது
செய்ய தமிழ் முழங்கத் தெய்வப் பொதியிலாய்
வெய்ய புலி முழங்க மேருவாய் - வையகம் சூழ்
கோரம் உடன் போத நேமிப் பொலன் குன்றாய்
வார்கவரியால் இமய மால்வரையாய் - வேரி
விடும் குழையார் சென்னி மிலைச்சிய சென்னி
கொடுங் குழையார் வீதி குறுக - நடுங்காமல் |
|
|
உரை
|
|
|
|
|
140
150
156 |
விண் நாடு காத்து முசுகுந்தன் மீண்ட
நாள்
மன் நாடு கண்ட மடந்தையரும் - நண்ணார்மேல்
சோழன் பரி சார்ந்தே சூழ வரும் சக்ர
வாள கிரி அர மங்கையரும் - தோள் இணையால்
கோழியின் சோழ குலத்து ஒருவன் முன்கடைந்த
ஆழியின் கொண்ட அரம்பையரும் - ஊழியின்
சீத்த வரையின் திருக் கொற்ற வில் ஒன்றால்
வாய்த்த வரை அர மாதரும் - போய்த் தனியே
கோதண்டம் கொண்டு இரு சேடியுடன் கொண்ட
வேதண்ட லோக விமலையரும் - காதலால்
தந்த பணி பதி தன் மகளைச் சேவித்து
வந்த கடவுள் மடந்தையரும் பந்தாடும்
மேரு வரையில் புலி பொறித்து மீண்டநாள்
வாரும் வரை அர மாதரும் - வீரவேள்
வாங்கயிலில் கூரிய கண்ணார் ஒரு வளவன்
தூங்கு எயிலில் கைக்கொண்ட தோகையரும் - பாங்கின்
நிதியோடும் கூட நிதியோன் அளகைப்
பதியோடும் கொண்டார் பலரும் - முதலாய
|
|
|
உரை
|
|
|
|
|
160
|
சாயல் அரகமளிர் தத்தம் திருமரபில்
கோயில் உரிமைக் குழா நெருங்கி - வாயிலும்
மாளிகையும் சாலையும் ஆலயமு மண்டபமும்
சூளிகையும் எம்மருங்கும் தோரணமும் - சாளரமும்
தெற்றியு மாடமும் ஆடரங்கும் செய்குன்றும்
சுற்றிய பாங்கரும் தோன்றாமே - பற்றி
மயங்கி மறுகில் பிணங்கி வணங்கி
உயங்கி ஒருவர்க்கு ஒருவர் - தயங்கு இழையீர்
|
|
|
உரை
|
|
|
|
|
குழாங்களின்
கூற்று
|
170
180
188 |
தன் கோடி ஓர் இரண்டு கொண்டு
சத கோடி
கல் கோடி செற்ற சிலை காணீர் - முன் கோலி
வட்ட மகோததி வேவ ஒரு வாளி
விட்ட திருக் கொற்ற வில் காணீர் - வெட்டிச்
சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழிவிட்ட வாள்காண வாரீர் - ஒழிய
மதி எறிந்து வல்லேற்று வான் எறிந்து தூங்கும்
பதி எறிந்த கொற்ற வாள் பாரீர் - உதியர்
இடப்புண்ட பேர் இஞ்சி வஞ்சியி லிட்ட
கடப்ப முதுமுரசம் காணீர் - கொடுப்பத்
தரை கொண்ட வேற்று அரசர் தம் சென்னிப் பொன்னிக்
கரை கண்ட போர் முரசம் காணீர் - சரதப்
பவித்ர விசயப் படைப் பரசு ராமன்
கவித்த அபிடேகம் காணீர் - தவித்து உலகில்
மூவெழுகால் எக்கோக்களையு முடித்து அவனி
மூவெழுகால் கொண்ட முடி பாரீர் - தாவி
வரப்பு மலைசூழ் வர ஆயிரம் கண்
பரப்பும் ஒரு வேங்கை பாரீர் - புரக்க நின்று
ஊடம் பரம் அடங்க ஓங்கி உயர் அண்ட
கூடம் பொருவும் குடை பாரீர் - கூடல்
பெரும் பெருமாள் எவ்வேந்து முன் போதப் பின்பு
வரும் பெருமாள் வந்தனன் வாரீர் - இருங்கடல்
தோன்று அருக்க மண்டலமும் தோற்க உலகங்கள்
மூன்றுக்கும் சூடு முடி பாரீர் - தோன்ற
|
|
|
உரை
|
|
|
|
|
190
200 |
அணைத்து அருகு ஆயிரம் ஆயிரமாகப்
பணைத்த பணி வலயம் பாரீர் - அணைக் கண்
சிரித்த சுரேசனை வென்று ஒரு தென்னன்
பரித்த மணியாரம் பாரீர் - தரித்து அருள
வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட
பாண்டியன் கட்டு வடம் பாரீர் - மீண்டும்
திருந்து மதனன் திருத்தாதை செவ்வி
இருந்தபடி பாரீர் என்பார் - பெருந்தேவர்
முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன் உயர்த்த
எக்கொடியு முன்னர் எடுத்துளவால் - அக்கொடியால்
தொல் ஆரணம் அனைத்தும் சொல்லும் சுர அரசர்
எல்லாரும் காணும் இவன் என்பார் - புல்லிய
|
|
|
உரை
|
|
|
|
|
210
216 |
நீர்ப் பூ புதல் பூ முடி அன்றி நேராதார்
போர்ப் பூ முடி தடிந்து போக்கிய பின் - போர்ப் பூவின்
மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரான் உவந்த
தாதகி ஒன்றுமே சார்பு என்பார் - மீது
பரந்த அவுணர் சிறைப்படுமது எண்ணி
இரந்தன கொண்டன வென்று - புரந்து
தனிச் சேவகம் பூமி தன்னதே ஆக
இனிச் சேவடி விடாள் என்பார் - பனிச்சாரல்
மண்டு மலையால் வருந்தா வகை வருத்திப்
பண்டு கலக்கிய பால் கடலும் - கொண்டது ஓர்
செங்கோ கனகை திருமார்பில் அன்றியே
எங்கோ இருப்பாள் இனி என்பார் - நங்காய்
திருப் பதுமாபதி இத்திரு மார்பில்
இருப்பது காட்டுமின் என்பார் - சிரித்து எதிரே
அம் கண் கமலை அமலன் பெருந்தேவி
நம் கண் புலனாயின் நன்று என்பார் - நங்கைமீர்
|
|
|
உரை
|
|
|
|
|
220
225 |
கண்ணாகும் தாமரையும் கைதொழுதேம்
எம்மறையும்
பண்ணாகும் செந்தாமரை பணிந்தோம் - வண்ணத்
தொடித் தாமரையும் தொழுதன நாபிக்
கடித் தாமரை தொழுவேம் காட்டீர் - பிடித்து என்ன
அத்தாமரை தன் அடித் தாமரைக்கு அன்றி
மைத்தாமரைக்கு எளிதோ மற்று என்பார் - உய்த்தால்
ஒரு பெருந் தாதகி தோய் சுரும்பை ஓட்டற்கு
இருபெருஞ் சாமரையும் என்பார் - அருவி
அருகு எய்த ஒட்டா அயிராபதத்தின்
இருகன்ன சாமரையும் என்பார் - தெருவத்துத்
|
|
|
உரை
|
|
|
|
|
|
தங்களின் மாறு ஆடி உள்ளம் தடுமாறித்
திங்கள் நுதலார் தெருமரலும் - அங்கு அவரில்
|
|
|
உரை
|
|
|
|
|
பேதை
|
230
235
241 |
பேதைக் குழாத்து ஒரு பேதை சில
பழம்
காதல் குழாத்தோர் தம் கையடையாள் - மீது
பிறந்து அணிய கிள்ளை பெறாத் தாயர் கொங்கை
மறந்து அணிய செவ்வி மடமான் - புறம் தணியத்
தோகை தொடா மஞ்ஞை தோற்றத்தால் சுற்றத்தார்க்கு
ஓகை விளைக்கும் ஒரு கரும்பு - பாகைத்
தொடை போய முல்லைத் தொடையலே போல
இடை போய தூய எயிற்றாள் - உடையோன்
செறிந்து விடாத திருத் தோற்ற முற்றும்
அறிந்து பிறந்த அறிவோ - நெறிந்த குழல்
எம்பாவை எம் கொல்லிப் பாவை எனப் பாடும்
அம்பாவை பாடும் படி அறிவாள் - உம்பர்
வெருவக் கரையை மிகும் பொன்னி அன்றிப்
பருவத்து வேறு படியாள் - உருவக்
குறைவனை என்று எழுதும் கோலத்து ஞாலத்து
இறைவனை அல்லால் எழுதாள் - இறைவன்
முழங்கு ஏழ் கடல் கொடுத்த முத்து ஏழும் அல்லால்
கழங்கு ஏழும் ஆடக் கருதாள் - வழங்கிய
|
|
|
உரை
|
|
|
|
|
250
|
முற்றில் எடுத்துக் கொழித்து முழு
முத்தால்
சிற்றில் இழைக்கின்ற செவ்விக்கண் - சுற்றும்
பனி நீங்கத் தோன்றும் பகலவன்போல் வையம்
துனி நீங்கத் தோன்றிய தோன்றல் - முனியும்
பொறை விட்டு எயில் விட்டுப் பொய்கை கவிக்குச்
சிறை விட்ட சோளேந்த்ர சிங்கம் - நறை விட்ட
அந்தாமச் செங்கழுநீர் மார்பன் அழகிய
செந்தாமரைக் கண் திருநெடுமால் - வந்தானை
|
|
|
உரை
|
|
|
|
|
260
|
ஓகையர் ஆகி உலப்பில் பலகோடித்
தோகையர் ஓடத் தொடர்ந்து ஓடித் - தாகம்
தணியத் தணியத் தமரும் பிறரும்
பணியப் பணியப் பணிந்தாள் - மணி மார்பில்
ஆரம் தான் கண்டாள் அயிராபதம் தொழுதாள்
கோரம் தெரியவும் கும்பிட்டாள் - வீரன்
படாகைப் பெரும் புலியும் பார்த்து ஒழிந்தாள் அண்ட
கடாகத்து அதிர் முரசும் கண்டாள் - அடாதனவும்
சொல்லி அறியாது ஒழிந்தாள் சுருப்பு நாண்
வில்லி அறியாது விட்டதே - நல்லார் சூழ்
|
|
|
உரை
|
|
|
|
|
பெதும்பை
|
270 |
மற்றும் ஒருத்தி வலம்புரி ஆயிரம்
சுற்றும் சலஞ்சலம் போல் தோன்றுவாள் - கற்றுடன்
அன்ன நடக்க நடந்தாள் அருங்கிள்ளை
பின்னர் உடன்பேசப் பேசினாள் - இன்னிசை யாழ்
பாட அதன் உடனே பாடினாள் பைந்தோகை
ஆட அதன் உடனே ஆடினாள் - கூடிய
நல் இள மான் நோக்க நோக்கினாள் நாண் நிரம்பி
முல்லை முகிழ்க்க நகை முகிழ்த்தாள் - கொல்லும்
|
|
|
உரை
|
|
|
|
|
280
285 |
மழ களிற்றின் கோடு எழுச்சி என்றும்
அரவின்
குழவி எயிறு எழுச்சி என்றும் - பழகி
எறியு முகில் எழுச்சி என்றும் உலகம்
அறிய முலை எழுச்சி அன்னம் - செறியும்
வரை ஏழில் உள்ள வயிரமும் வாங்கும்
திரை ஏழின் முத்தின் திரளும் - தரை ஏழின்
பொன்னும் பிலன் ஏழில் போகா இருள் போக
மின்னும் சுடிகை வெயின் மணியும் - பின்னும்
பொழில் ஏழில் போதும் புனையப் புனைவாட்கு
எழில் ஏறும் நாளையே என்னாக் - கழிய
உழப்போம் இனி என்று உடல் உள்ளு போழ்தே
எழப் போக எண்ணும் இடையாள் - மழைத்துப்
புடைபோய் அளகம் பொதுக்குவதன் முன்னே
கடைபோய் உலகு அளக்கும் கண்ணாள் - உடையதன்
|
|
|
உரை
|
|
|
|
|
290
|
சேரிச் சிறுசோறும் சிற்றிலும்
போய்ச் சில்லணி போய்ப்
பேரில் பெருஞ்சோற்றுப் பேரணியாள் - ஓரையில்
தன் ஆய நிற்பத் தனிநாயகன் கொடுத்த
மின் ஆயம் சேவிப்ப வீற்றிருப்பாள் - மென்மலர்
மேய சிறுமுல்லைப் பந்தர் விட எடுக்கும்
பாய பரு முத்தின் பந்தராள் - நாயக
உச்சியின் கொண்டை முடிப்பின் உலகு உடையோன்
முச்சியின் சூட்டு முடிக்கு உரியாள் - நிச்சமும்
நல்லுயிர்ப் பாவை துணை பெற நாயகன்
கொல்லியின் பாவை கொள இருப்பாள் - மெல் இயல்
பாங்கிக்கு நம் கோமான் விந்தைப் பசுங் கிளியை
வாங்கித் தரப்போய் வணங்கு என்பாள் - ஆங்கு ஒருத்தி
|
|
|
உரை
|
|
|
|
|
300 |
மாயமான் வேண்ட மறாதானை வான்மதியின்
மேயமான் வேண்டி விடப்பெறுவாள் - சேயவெள்ளி
தென்பால் இலங்கை வாழ் தெய்வ மணி பணிப்பீர்
என்பாவை பூண இனிது என்பாள் - அன்பால்
|
|
|
உரை
|
|
|
|
|
310
|
உயிர்த்துணைப் பாங்கி ஒரு நோன்பு
உணர்த்த
எயில் புறத்து எல்லாரும் சூழ - அயில் படை
வீரனை எய்த வியன்காவில் சென்று எய்தி
மாரனை நோக்கி வழிபட - மாரன்
படியில் கடவுள் பணை முழங்க வென்றிக்
கொடியின் மகரம் குமுற - நெடிய
அலகில் அசோக நிழற்ற அடைய
உலகின் மதுகரம் ஊதக் - கலகித்து
அலங்கல் அடவிக் குயில் குலம் ஆர்ப்ப
விலங்கன் மலயக் கால் வீசக் - கலந்து எழும்
ஆவி அகிலொடு நீரோடு அர மகளிர்
தூவிய தண் நறும் சுண்ணமும் - காவில்
விடவிட வந்து உயிர் மீது அடுத்துப் போன
வடிவும் பழம்படியே வாய்ப்பக் - கொடி இடை
எண்ணிய எண்ண முடிப்ப அவள் எய்தும்
புண்ணியம் போலப் பொழில் புகுந்தாள் - அண்ணல்
|
|
|
உரை
|
|
|
|
|
320 |
சரம் போலும் கண்ணி தனக்கு அனங்கன்
தந்த
வரம்போல் வள மறுகில் வந்தான் - வரும் போதில்
|
|
|
உரை
|
|
|
|
|
330
|
ஏன்று மதனன் இயம் இயம்பவே அனகன்
மூன்று முரசு முழங்கின - தோன்றாத
வாரிக் களிறு முழங்கவே மானதன்
மூரிக் களிறு முழங்கியது - வேரித் தார்
கற்கும் அசோக நிழற்றவே பார் கவித்து
நிற்கும் கவிகை நிழற்றியது - முன் கொண்டு
மற்றை அலகின் மதுகரம் ஊதவே
ஒற்றை வலம்புரி ஊதியது - முற்றாத
சொல் குதலைக் கோகுலங்கள் ஆர்க்கவே சோளேசன்
அற்க மணிக் காகளங்கள் ஆர்த்தன - தெற்கு எழுந்த
மல்லன் மலயக் கால் வீசவே மானதன்
மெல் என் கவரிக்கால் வீசியது - மெல்லியலும்
காமன் பெருநோன்பு கைவந்தது என்று எதிரே
கோ மைந்தன் வேழம் குறுகினாள் - கோமகனும்
|
|
|
உரை
|
|
|
|
|
340
|
மல்கும் உவகைக் கலுழி வர வரப்
பில்கும் அதர்வைப் பெரும்பரப்பு - அல்குலும்
கொங்கைப் புதுவரவுத் தோளும் குறை நிரம்ப
மங்கைப் பருவத்தை வாங்கினாள் - மங்கை
திருக்கொள்ளு மார்பற்குக் காமவேள் செவ்வே
வெருக் கொள்ளும் செவ்வி விளைத்தாள் - பெருக்க
ஒருவர் ஒருவர்க்கு உருகி உருகி
இருவரும் ஈடு அழிய நோக்கி - வருகாமன்
செஞ்சாயல் வல்லியையும் செந்தாமரைத் தடங்கண்
மஞ்சாய கோல மணாளனையும் - அஞ்சாதே
கொய்யும் பகழி கரும்பில் சுரும்பில் கோத்து
எய்யும் தரமே எனப் போனான் - தையல்
|
|
|
உரை
|
|
|
|
|
மங்கை
|
350
|
ஒருத்தி தரளம் இருநிரை கொண்டு
ஒப்பித்
திருத்தி அனைய எயிற்றாள் - கருத்தின்
நிலையில் சிறந்த நிகரிலா மேரு
மலையில் பிறந்த வயிரம் - அலையில்
பழக்கச் சலஞ்சலம் பால் கடலே போல
முழக்கக் கரு உயிர்த்த முத்தம் - தொழத் தகும்
முன்னை உலக முழுதும் தரும் உரக
மன்னன் அபிடேக மாணிக்கம் - முன்னவன்
பால் கடல் நீங்கு நாள் நீங்கிப் பழம்படியே
நாற்கடல் நாயகனை நண்ணுவாள் - மேல் கவின
பண்டு கடல் கடைந்தும் பார் எடுத்தும் வில் இறுத்தும்
கொண்ட துணைவியரும் கூசுவாள் - புண்டரிகத்து
|
|
|
உரை
|
|
|
|
|
360
370
|
ஆடும் பொழுதினும் அன்னப் பெடை
அயிர்ப்பப்
பாடு மழலைப் பரி புரத்தாள் - நீடிய
தூசுகள் வெள்ளென்று தூயன சேயன
கோசிகம் ஆக்கும் குறங்கினாள் - கூசிப்
பணியும் அரசுப் பணிச் சுடிகையே கோத்து
அணியும் அரைப் பட்டிகையாள் - துணியுங்கால்
அற்றுண்டு இலது என்னும் அம்மருங்குல் இன்று எமக்குப்
பற்றுண்டு எனும் உதர பந்தனத்தாள் - கொற்றவன்
சங்க நிதி முத்தத் தாமத்தாள் பத்ம நிதி
துங்க நவரத்னத் தோள்வளையாள் - புங்கம்
தொடுக்கு மலரோன் சுறவுக்கு உறவு
கொடுக்கு மகரக் குழையாள் - அடுத்துப்
பணி தந்து அலகில் பராவு எடுத்துச் சிந்தா
மணி தந்த சூளாமணியாள் - அணியே
|
|
|
உரை
|
|
|
|
|
380
|
பரவி விறலியரும் பாணரும் தற்சூழ்ந்து
இரவி புகார் பாடும் எல்லை - வர வரக்
கொங்கைக்கும் தோள்இணைக்கும்ஆற்றாக் கொடிமருங்குல்
நங்கைக்கு வந்து ஒருத்தி நாயகியே - கங்கைத்
துறைவன் பொறையன் தமிழ் நாடன் சோணாட்டு
இறைவன் திருப்பவனி என்றாள் - பிறை நுதலும்
வேனிற்கு அணிய குயில் போன்றும் வீழ்தாரை
வானிற்கு அணிய மயில் போன்றும் - தானே
வரவே நினையு மனக் களியால் இற்றை
இரவே நமக்கு இடையூறு என்றாள் - இரவில்
|
|
|
உரை
|
|
|
|
|
390
400
|
செயிர்க் கரங்கள் வேண்டா டிருக்குலத்து
வெய்யோன்
வெயில் கரங்கள் ஊடாட வேண்டும் - உயிர்க் கொலைசூழ்
தென்மலயத் தென்றலை ஓட்டிப் புலி இருந்த
பொன்மலைய வாடாய் புகுது என்னும் - முன்மலையும்
கார்க் கடல் வாய் அடங்க நாயகன் கண் வளர்ந்த
பால் கடல் வாராய் பரந்து என்னும் - மேல் பரந்து
கார் பாடும் புள்வாய்க் கடுப் பெய்து அமுது இறைவன்
பேர் பாடும் புள்வாயில் பெய்க என்னும் - ஈர்குரல்
அன்றிற்கு ஒழிய மகன்றிற்கே யாக்கும் இம்
முன்றில் பனையும் என மொழியும் - இன்று இரவை
ஊழிக் குயில் காய்ந்து ஒரு புலரி கூவிய
கோழிக்கே சோலை கொடீர் என்னும் - வாழிய
பள்ளி எழுச்சி பவனி எழுச்சி தரும்
வெள்ளி எழுச்சி என விளம்பும் - நள்ளிருள்
கங்குல் கடற்கு எல்லை இவ்வாறு கண்டு வந்த
மங்கைப் பருவத்து வாள் நுதலும் - பொங்கு ஒலிநீர்
வையகம் காவலற்குப் பெய்யு மலர் மழைக்குக்
கொய்பொழில் சென்று குறுகினாள் - செய்ய
|
|
|
உரை
|
|
|
|
|
410
|
கொடுங்குழை மின்னக் குயில் கொழுதக்
கோத
விடுங்குழை தேமாவின் மின்ன - நெடுங்குழை
வல்லிக் கொடியு முறுவலிப்ப வந்து எதிர்
முல்லைக் கொடியு முறுவலிப்ப - மெல்லியல்
பாந்தளும் தோற்கும் பகட்டு அல்குல் கைம்மலரக்
காந்தளு நின்று எதிர் கைம்மலரப் - போந்தார்
பரவு மரப்பாவை கொள்ளப் பயந்த
குரவு மரப்பாவை கொள்ளப் - புரிகுழல்
சோலையின் மான்மதம் சூழ்வர ஏழ் இலைப்
பாலையின் மான்மதம் பாரிப்பச் - சேலையின்
வாங்கும் புதுமது வாள் நுதல் கொப்புளிப்பக்
கோங்கு மது எதிர் கொப்புளிப்ப - ஆங்குத்
திருஅஞ்சு கோலத்தாள் செவ்வியால் எல்லாம்
பருவம் செய் சோலை பயப்பப் - பெருவஞ்சி
கொய்தன கொய்தன யாவும் பலகூறும்
செய்தனர் செய்தனர் பின்செல்லக் - கொய்யாத
கொன்மலர் ஆயம் பொழியப் பொழில் கொண்ட
மென்மலர் கொண்டு வெளிப்பட்டாள் - மன்னனும்
|
|
|
உரை
|
|
|
|
|
420
430
|
எப்போதில் போதும் ஒருபோதில்
ஏந்திழை
கைப்போதில் பெய்தன கண்டு அருளா - அப்போதே
செங்கை தடவந்தும் சீறடி தீண்டியும்
கொங்கை சுணங்கு எறிந்து கொப்புளித்தும் - மங்கை
பரிசில் உருவம் பயந்தன என்று
குரிசில் எதிர்கவர்ந்து கொண்டான் - தெரிவு அரிய
தூசும் துகிலும் தொடியும் கடிதடம்சூழ்
காசும் பலகால் கவர்ந்ததற்குக் - கூசி
இலகும் சுடர்முடியும் யானையும் ஈரேழ்
உலகும் கொடுப்பானே ஒப்பப் - பலகால்
கொடாத திருநோக்க முற்றும் கொடுத்து
விடாது களிறு அகல விட்டான் - அடாதான்பால்
|
|
|
உரை
|
|
|
|
|
மடந்ை த
|
440
|
ஈர் அடியால் மூ உலகும் கொண்டானை
எப்பிறப்பும்
ஓர் அடியு நீங்காதாள் ஓர் அணங்கு - சீர் உடைய
மானும் கலையும் வளர உடன் வளர்ந்து
தானு மதியம் எனத் தகுவாள் - பால் நின்று
அனலும் குழை மகர மஞ்சப் புடைபோய்க்
கனலும் கயல் அனைய கண்ணாள் - மினலால்
இருள் உடைய மேல் நின்று எறி சுடிகைப் பாப்புச்
சுருள் உடைய வீங்கிய தோளாள் - அருளோடும்
தம்புறம் சூழ்போகத் தாயரே வீக்கிய
வம்பு அற வீங்கும் வன முலையாள் - பைம்பொனின்
பண் நிறக் காஞ்சியும் கட்டிய பட்டிகையும்
கண் இறப் போய கடிதடத்தாள் - தண் நறும் தார்
|
|
|
உரை
|
|
|
|
|
450
460
|
மின்மணி மோலியான் வீதி வரவேற்றுத்
தன்மணி மாளிகைத் தாழ்வரையில் - பொன் உருவில்
தைத்துத் துகிரு மரகதமும் தாறாக
வைத்துக் கமுக வனம் செய்து - முத்தின்
பொலன் தோரண நிரைத்துப் பொன் அடுத்த மேக
தலம் தோய் விசால தலத்து - மலர்ந்த பூங்
கற்ப தரு நிரைக் கற்பலதை படர்ந்து
பொற்ப மிசை அயடுத்த பூம்பந்தர் - நிற்பப்
புகர் அற்ற ரத்ன விதானமேல் போக்கி
நகை வச்ர மாலையே நாற்றிப் - பகல்விளங்கா
மைவிளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே
எவ்விளக்கும் ஆக எதிர் எடுத்து - நொவ்விய
பூநறுஞ் சுண்ணப் பொடி அடங்க வீசிய
நான நறுநீர் நளி நளிர்ப்ப - மேல் நிலையில்
கங்கையின் நீர் முகந்தோ காவிரியின் நீர் கொணர்ந்தோ
கொங்கையின் இணை நீர்க் குட நிரைத்து - எங்கும்
அசும்பு பொலன்கொடியால் அவ்வெல்லை உள்ள
விசும்பு தவிர விலக்கிப் - பசும்பொன் யாழ்
முட்ட முயன்ற விறலியர் முன் இருப்ப
இட்ட தவிசின் மிசை இருந்து - பட்டினம் சூழ்
பொன்னிக்கும் கோதாவிரிக்கும் பொருநைக்கும்
கன்னிக்கும் கங்கைக்கும் காவலனைச் சென்னியைத்
தானைப் பெருமானை நல்ல சகோடம் கொண்டு
யானைப் பெருமானை ஏத்து எடுப்பாள் - மேனாள்
|
|
|
உரை
|
|
|
|
|
யானையின்
பெருமை
|
470
480
490
500
|
உகந்த பிடியுடனே ஓர் எண் பிடியும்
திகந்த களிறு எட்டும் சென்று - முகந்து
துறக்கும் கடல் முதல் ஏழும் சொரியச்
சிறக்கும் அபிடேகம் செய்து - விறக்கும்
உயிர் காவல் மேற்கொண்டு உலகை வலம் செய்யும்
அயிராபத மத யானை - உயரும்
கடநாகம் எட்டும் கடநாகம் எட்டும்
படநாகம் எட்டும் பரம் தீர்த்து - உடனாகத்
தென்னர் வலம்புரியும் சேரலர் சாமரையும்
கன்னாவதங்கிசமாக் கைக்கொண்டு - பின்னவர்
வாள் அகை மௌலி இரண்டும் இருகோட்டுக்
கோளகையாக் கொண்ட கோக்களிறு மாளிகை
தாக்குண்ட வாயில்கள் தோறும் தனி தூங்கித்
தூக்குண்ட கண்டை தொடர் உடனே வீக்குண்டு அங்கு
ஆராத நாளைக்கும் போதக் கிடந்து ஆர்ப்பத்
தாராகக் கொண்ட மதாசல நீர் - வாரா
நதிக்கு மலைக்கும் அடவிக்கு நாளும்
குதிக்கு மதச்சுவடு கோத்து - மதிக்கும்
பிடி விடாக் காதல் பெருங்களிறும் கன்றும்
அடிவிடாது அவ்வாறு அடையப் - படிவிடாது
ஈட்டும் பெருவாரி ஏழ் என்பார் எட்டு என்னக்
கூட்டும் பெருங்கடவுள் தொல்யானை - நாட்டில்
பணிகொண்ட பூதம் படைநான்கும் பற்றப்
பணிகொண்ட பௌவம் பரக்கப் - பணிகொண்ட
கார் முற்றும் பேரி இடி வீழ்ப்பக் கவுரியர்
ஊர் முற்றும் செற்றது ஒரு கூற்றம் - சேரர்
கனக்குமன் ஈகக் களம்தொறும் கைக்கொண்டு
இனக்கும் அரசுவா எல்லாம் - தனக்குத்
துணிக்கும் கழைக் கரும்பு நெல்லும் சுமக்கப்
பணிக்கும் கடவுள் பகடு - தணிப்பு அரிய
பூகங்கை தாள் தோயச் செங்கை புயல்வானின்
மாகங்கை தோயப் போய் மாமேரு - நாகங்கைக்
கொண்டு தனித் தங்கள் கோள்வேங்கை வீற்று இருப்பக்
கண்டு களிக்கும் களியானை - வண்டு அலம்ப
|
|
|
உரை
|
|
|
|
|
510
520
530
|
நின்று குதிக்கு மதத்தில் நில
நெகிழ்ந்து எக்
குன்றும் ஒழித்துக் குளிப்ப முன் - சென்று அழுத்திப்
பண்டு வெளியின் மகதத்தைப் பாவு அடியால்
செண்டு வெளிகண்ட செங்கமா - கண்ட
மதிலே அகழாக வாங்கி அகழே
மதிலா எழாநிற்க வைத்துப் - புதுமலர்செய்
வாவியைச் செய்குன்றம் ஆக்கியச் செய்குன்றை
வாவியதாக எனவகுத்துத் - தாவுமான்
வெள்ளிடை கோநகர் ஆக்கி அக்கோ நகர்
வெள்ளிடையாக உடன் விதித்துத் - தெள்ளிப்
புரப்பார் இரப்பாராய்ப் போக இரப்பார்ப்
புரப்பாரே ஆக்கும் புகர்மா - திருக்குலத்துக்
கண்டன் அயிராபத மதம் கால் காலத்துக்
கொண்டதொரு சுவடு மேல்கொண்டு - வண்டு
கடியும் களிறும் களிறாமே காதல்
பிடியும் பிடியாமே பின்னர்க் - கடிமதில்
மாற்று மருமணம் வங்காள பாகத்து
வேற்று மதமாம் ம்ருகமதத்தைப் - போற்றார்
வயிராகரம் எறிந்த மானதன் கண்டன்
அயிராபத மதமே ஆக்கிச் - செயிர் தீர்ந்த
காதல் பிடி தேற்றத் தேறாக் கடாக் களிறு என்று
ஓதப் பெயரும் ஒரு பொருப்புப் - பாதையில்
கச்சியில் கல் தளியில் கல்லில் கலிங்கத்தில்
கொச்சியில் கோதாவிரிக் குளத்தில் - விச்சியில்
வல்லூரில் கொல்லா புரத்தின் மணலூரில்
நெல்லூரில் புத்தூரின் எட்டூரில் - செல்லூரில்
கோட்டாற்றில் கொங்கில் குடக்கூரில் கொப்பத்தில்
வாட்டாற்றில் காம்பிலியின் மண்ணையில் - வேட்டுத்
தரணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும்
பரணி புனைந்த பகடு - சரண் என்று
|
|
|
உரை
|
|
|
|
|
535
|
வாடா மதுர யாழ் வாங்கி மடவரல்
பாடா இருந்த பருவத்து - நீடாப்
பரிசில் உடனே பணிப்பது போல் யானை
குரிசில் உடன்வந்து கூடத் - தெருவில்
வரவந்தான் மன்னர் பிரான் என்று மாரன்
பொரவந்தான் கைவாங்கிப் போனான் - விரல்கவரும்
|
|
|
உரை
|
|
|
|
|
540
|
வீணைக்கு அகப்பட வேழ மிடற்றுக்கும்
ஆணைப் பெருமாள் அகப்பட - வாள் நுதல்
ஐந்து சுரர்தருவும் ஐந்து திருமாலை
தந்து தொழ எழுந்து சாத்தினாள் - மைந்தனும்
பண்ணுக்கே தோற்பான் பணைமுலைக்கும் அல்குலுக்கும்
கண்ணுக்கும் தோலானே கைக்கொண்டான் - வண்ணமும்
வெண்துகிலும் காஞ்சியு மேகலையும் தோள்வளையும்
கொண்டவற்றின் மாறு கொடுப்பான்போல் - பண்டை
முடியும் சிங்காதனமு முத்தக் குடையும்
படியும் அரசும் பணித்தான் - பிடியும்
சிவிகையு நிற்ப அச் சேயிழை வீதி
கவிகையும் தானும் கடந்தான் - குவிமுலை
|
|
|
உரை
|
|
|
|
|
அரிவை
|
550
|
னை அரிவை ஒருத்தி இகல் மாரன்
சேனை திரண்டு அனைய செவ்வியாள் - வானில்
விடுசுடர்ச் செக்கர் வியாழமும் தோற்கும்
படுசுடர்ப் பைம்பொன் படியாள் - வடிவு
நொடிது ஓர்க்கில் ஒக்கு நிறை மதிய நேரே
படிதோற்கும் முத்தின் படியாள் - முடிவில்
குல பதுமராக பதி குதி கொள்ளும்
பல பதுமராகப் படியாள் - அலைகடலில்
முன் தாமரையாள் முகத்தாமரையாள் அப்
பொற்றாமரையாள் அப் போதுவாள் - அற்றைநாள்
|
|
|
உரை
|
|
|
|
|
நீர்
விளையாட்டு
|
560
570 |
தண் என் கழுநீர்த்
தடம்பொய்கை நாம் எலாம்
அண்ணல் வரும் அளவும் ஆடுதும் என்று - எண்ணிப்
புணைக்கும் மொருதன் புறங்காவல் ஆயத்
துணைக்கும் தடம் சுருங்கத் தோயப் - பணைத்துப்
புடைக்கும் விசும்பு இடம் போதா முலைக்கும்
நடைக்கு முதல் பகை நாம் என்று - உடைப்புண்டு
பின்னர்ப் பெருஞ் சக்ரவாகப் பெருங்குலமும்
அன்னக் குலமும் அலம்வரப் - பின்னரும்
காற்கும் கருங்கட்கும் உட்காதே கைவகுத்து
ஏற்கும் தரமே நாம் என்று போய்த் - தோற்கின்ற
வாவியில் உள்ள வரால்களும் சேல்களும்
தாவி விழுந்து தடுமாறத் - தீவிய |
|
|
உரை
|
|
|
|
|
580
|
பொம் என் சிலம்பு
புலம்பு புறவடிக்கும்
அம் மென் கழுத்துக்கும் ஆற்றாது - மம்மர்ப்பட்டு
எங்கும் தரியாது இரியல் போ யாமையும்
சங்கும் தடத்தை விடத் தவழ - நங்கைதன்
செவ்வாயும் காதும் செயிர்த்தன என்று ஒதுங்கி
எவ்வாயும் காணாது எதிரே நின்று - அவ்வாய
கொள்ளைக் குமுத மலரும் குழை இள
வள்ளைக் கொடியும் உடன் மயங்க - வெள்ளம்போல்
பெய்யு மதயானைக் கோடும் பெருநெடுங்
கையும் புடைப்பக் கலுழ்ந்தன போல் - தொய்யில்சூழ்
தாம முலையாலும் தோளாலும் தாக்குண்டு
காமர் தடமும் கரை கடப்பக் - கோமகன்
உள்ளம் பருகப் பெருக உலாக் கொண்டு
கள்ளம் பெருகும் கருநெடுங்கண் - வெள்ளம்
படிய வரும் சிவப்பு வள்ளப் பசுந்தேன்
வடிய வரும் சிவப்பின் வாய்ப்ப - நெடிது |
|
|
உரை
|
|
|
|
|
590
600 |
திளைக்கும் திருமகளை
வாவியில் சேவித்து
இளைக்குங் கொடி இடையார் ஏத்தித் - திளைத்துழித்
தம்மைக் கமல மலர்க்கு அளித்துத் தாம் அவற்றின்
செம்மை கவர்ந்த திருக்கண்ணும் - மெய்ம்மையே
மெய் போய ஐய மருங்குலு மேகலை போய்க்
கைபோய் அகன்ற கடிதடமும் - பைபோய்
நெறிக்கும் பணி வலைய நீங்கிய வேய்த் தோள்
எறிக்கும் பெரும்பேர் எழிலும் - நெறிப்படக்
கொண்டு போந்து ஏறிய கோமகள் பேரழகு
பண்டு போல் நோக்கப் பயப்படுவார் - கண்டு
கலன் கலன் கண் எச்சிற்கு என்று கடிதில்
பொலன் கலன் கொண்டு பொதிந்தார் - இலங்கு இழை
யானைப் பெருமாள் அயிராபதத்து இருந்த
தானைப் பெருமாளைச் சந்தித்தாள் - மேனி |
|
|
உரை
|
|
|
|
|
610
|
பொருவிற்கே எல்லா அரம்பையரும்
போதாத்
திருவிற்கே குற்றேவல் செய்வான் - பொரு வில் கை
வானின் கோன் அஞ்ச வருவாளை அஞ்சாதே
வேனில் கோனே பரவ மேற்செல்வான்- வானத்து
எடுக்கும் கொடி மகர ராசித் தொடையில்
தொடுக்கு மகரம் போல் தோற்ற - அடுத்து எய்யும்
மன்றன் மலர் அம்பு வில் கரும்பு வண்டு நாண்
தென்றல் தேரால் அனங்கன் செற்றது என - மென் தோளி
பாங்கி எடுத்த படாகைப் பசும்பொன்பூ
வாங்கி எதிர்தூய் வணங்கினாள் - தாங்கி
எடுப்ப எழுவாள் இரு திருத்தோள் மாலை
கொடுப்ப இறையவனும் கொண்டான் - கொடுத்தவற்றுள்
பொன்மாலை போதகத்தைச் சூட்டிப் பொலன் குவளை
நன்மாலை சாத்தினான் நாயகனும் - தன்மார்பில்
ஆர்மாலை கோமான் அருளினான் அம்மாலை
கார்மாலை உட்கொண்டு கைக்கொண்டாள் - பார்மாலே
|
|
|
உரை
|
|
|
|
|
அரிவையின்
முறையீடு
|
620
630
|
மூது அண்டம் காக்கு
முது தண்ட மாரவேள்
கோதண்டத் தீஞ்சாறு கொள்ளாதோ - மாதண்ட
முற்றக் கடல் கிடந்து வேவ முனிந்து இன்னம்
கொற்றத் தனி வில் குனியாதோ - நல் தடத்துள்
ஏறு முதலை எறி திகிரி வேள் மகர
ஏறு முறிய எறியாதோ - மாறாது
காந்து முழுமதியை ஓரோர் கலையாக
ஏந்து சுடர் வடிவாள் ஈராதோ - பாந்தள் மேல்
வையம் உடையான் வலம்புரி இவ்வைகறை வாய்
உய்ய ஒரு குரல்வந்து ஊதாதோ - வையம்
தணியும் தகைத்தோ தமியன் மால் என்று
பணியு மடக்கொடியைப் பாரா - அணிய
உருத் தந்த தோற்றங்கள் ஒன்றினும் தப்பா
வருத்தம் திருமனத்து வைத்தே - திருத் தடம்
தோளும் திருமார்பு நீங்காத் துணைவியரில்
நாளும் பிரியாமை நல்கினான் - மீள |
|
|
உரை
|
|
|
|
|
640 |
ஒருமகள் கண்டன்
ஒரு பெரும்பேர் ஆகம்
திருமகள் போலத் திளைப்பாள் - இருநிலம்
தாளால் அளந்து தரும் பெரியோன் தாதகித்
தோளால் அளந்த துணை முலையாள் - நாளும்
திரை அர மாதரும் சேவிப்பான் மேரு
வரை அர மாதரின் வாய்ப்பாள் - கரையில்
விருப்பு அவனி கூர வருகின்ற மீளி
திருப் பவனி முன்விரைந்து செல்வாள் - உருப்ப |
|
|
உரை
|
|
|
|
|
650 |
அணந்த பணி வலைய
வண்ணன் முதல் நாள்
மணந்த மணச்செவ்வி வாய்ப்பக் கொணர்ந்து அணிந்த
சூடா மணியும் பணிவளையும் சூடகமும்
கோடா மணி மகர குண்டலமும் - ஆடிய
சச்சையு மாலையும் ஆரமும் தாமமும்
கச்சையு மேகலையும் காஞ்சியும் - பச்சென்ற
பட்டும் குறங்குஅணியும் பட்டிகையு நூபுரமும்
கட்டும் கனவயிரக் காரையும் - இட்ட
திலகமும் மான்மதமும் செஞ்சாந்தும் எல்லா
உலகமும் தோற்கும் உருவும் - கலகமும்
மாரனும் தானும் வருவாளை மன்னரின்
வீரனும் காணா வெருவராப் - பார் அனைத்தும் |
|
|
உரை
|
|
|
|
|
655
|
தேறும் திருவைத் திரு
அவதாரங்கள்
தோறும் பிரியாத் தொடர்பாலும் - ஏறும் கண்
வாளாலும் வார்புருவ வில்லாலும் வாங்கமைத்
தோளாலு மீளத் துவக்குண்டு - நீளிய
மைவிடா நோக்கி திருக்கைம் மலர் அணைக்
கைவிடா ஆர்வம் கடைப்பிடித்துத் - தெய்வப் |
|
|
உரை
|
|
|
|
|
660
670 |
புவனி விலையாய பொன்
துகிற்கு எல்லாம்
அவனி முழுதும் அளித்தான்போல் - கவினிய
அற்புத மாலை அணியப் பணி செய்யும்
கற்பகம் ஒன்று கடைக்கணித்தான் - பொன் படிக்குப்
பாதங்கள் ஆதி முடி அளவும் பாரிப்ப
மாதங்க ராசி திருவாய் மலர்ந்தான் - ஓதி
முடிக்குத் தலைக்கோலம் போல்வன முத்தின்
படிக்குச் சலாபம் பணித்தான் வடிப் பலகை
அச்சிராபரணம் அனைத்திற்கும் தன்வட
வச்சிராகரமே வழங்கினான் - பச்சை
மணிக்குத் தலையாய மாணிக்க ரத்னப்
பணிக்கு த்ரிகூடம் பணித்தான் - தணிப்பில்
பெரும்பேர் உவகையள் ஆகிப் பெருமாள்
விரும்பேர் மலர்க்கண்ணி மீண்டாள் - பெரும்போர் |
|
|
உரை
|
|
|
|
|
680
|
வெருவரும் பார்வேந்தர்
வேந்தனைப் போற்றும்
பொருநரும் பாணரும் புக்கார் - தெரிவைக்கும்
பாடிக் குழல் ஊதிப் பாம்பின் படக்கூத்தும்
ஆடிக் குடக்கூத்தும் ஆடினார் - பாடியில்
ஆன் நிரையும் ஆமான் நிரையும் போல் ஆன் ஊலகில்
கோ நிரையு மீளக் குழாம் கொண்டு - மீன் நிரையின்
மீதும் புடையு மிடைய விழ எழ வேய்
ஊதும் திருப்பவளம் உட்கொண்டு - சீதக்
கடம் தூர வந்து ககன தலமும்
இடம் தூர வந்தும் இணை அக் குடங்கள்
எழ எழ மேன் மேல் எழுந்தும் குடங்கள்
விழ விழ மேன் மேல் விழுந்தும் - பழகிய
தோள் இரண்டும் தாள் இரண்டும்சோளேசன்தாள்இரண்டும்
தோள் இரண்டும் என்றுஎன்று சொல்லியும்-கோள் ஒளிய |
|
|
உரை
|
|
|
|
|
690
|
நின்வேய் தவிர்க
என்று நேரியன் மேருவில்
பொன்வேய்ங் குழல் ஒன்று போக்கினாள் - முன்னே
தசும்பிற்கு மாறாகத் தம் கோமான் ஆவல்
பசும்பொன் தசும்பு பணித்தாள் - ஒசிந்துபோய்
நாடகப் பாம்பிற்கு நல் கற்பகம் கொடுத்த
ஆடகப் பாம்ப் ஒன்று அருளினாள் - பாடுநர்மேல்
வற்றாத மானத வாவியில் வாடாத
பொற்றாமரையே புனைக என்றாள் - கொற்றவன்
கொந்தார மாலை கொள விளைத்த மாலைக்கு
மந்தார மாலை வருக என்றாள் - நந்தாத
பேறும் திருவருளும் எய்தி அவர் பெயர
ஏறும் தவிசு தர ஏறினாள் - வேறு ஒருத்தி |
|
|
உரை
|
|
|
|
|
பேரிளம்
பெண்
|
700
710 |
கச்சை முனியும் கன
தனமும் குங்குமச்
சச்சை கமழும் தடந்தோளு - நிச்சம் உரு
ஏந்த உளது என்று இருந்த மலர்நின்றும்
போந்த திருமகள் போல் இருப்பாள் - வேந்தர்
பணியும் தடமகுடம் பன்னூறு கோடி
அணியும் திருத் தாள் அபயன் - பணி வலய
வீக்கிலே வீங்கிய தோள் மேரு கிரிச் சிகரத்
தாக்கிலே சாய்ந்த தடமுலையாள் - பூக்கமழும்
ஆர் ஏற்ற பொன் தோள் அபயனை ஆயிரம்
பேர் ஏற்ற தெய்வப் பெருமாளைக் - கார் ஏற்று
அடல் போர் அடு திகிரி அண்ணலைத் தன்பால்
கடல்போல் அகப்படுத்தும் கண்ணாள் - மடல்விரி
தெங்கினும் ஏற்கும் தசும்பினும் தேர்ந்து அளி
பொங்கு நுரையினும் போய்ப் புகாது - அங்கு
நறவு குவளை நறுமலர்த் தோய்த்து உண்ணும்
இறவு கடைக்கணித்து எய்தச் - சுறவுக்
கொடியோனை நோக்குவாள் கண்டாள் போல் கொற்கை
நெடியோனை நேமிப் பிரானைப் - படியோனைக்
கண்டனை மேதினியாள் காந்தனை வந்து உய்யக்
கொண்டனை என்று குறுவாள் - கண்டு |
|
|
உரை
|
|
|
|
|
720
|
மலர்கண் வெளுப்புச்
சிவப்பூ ஊர மற் அத்
திலகம் குறுவியரால் தேம்பப் - பல குதலை
மாற்றம் தடுமாற்றம் எய்த மனத்து உள்ள
தேற்றம் பித்தேற்றம் சிதைவிப்ப - ஏற்று
துகில் அசைந்து நாணும் தொலைய அளக
முகில் அசைந்து நோவு இடைக்கு முற்ற - அகிலமும்
சேனையு மன்னரும் தெய்வப் பெருமாளும்
யானையு நிற்க எதிர்நின்று - கோனே |
|
|
உரை
|
|
|
|
|
730
740 |
சத யுகமேனும் தரணிபர்
மக்கள்
பத யுகம் அல்லது பாரார் - உதயாதி
காந்த நின் கைத்தலத்தைப் பார் மடந்தை கற்ப அந்தத்து
ஏந்தும் அர அரசு என்று இகவாள் - பூந்தொடி
நல் போர் மடந்தை திருத் தோளை நாமுடைய
வெல் போர் இரண்டு என்று வீற்று இருக்கும் - பொற்பில்
கலந்தாளும் சொற்கிழத்தி கன்ன துவய மென்
பொலம் தாமரை என்று போகான் - நிலந்தாரா
அம் தாமரையாள் அருள் கண்ணைத் தன் இரண்டு
செந்தாமரை என்று செம்மாக்கும் - முந்து உற்ற
மல்லாபுரேச சிலகாலம் அற்று இவை
எல்லாத் தனித்து உடையோம் யாம் அன்றே - அல்லாது
மேகோதகம் இரந்த சாதகம் வெற்பை நிறை
ஏகோதகம் பொழிந்தால் என்செய்யும் - மாகத்துக்
காலை வெயில் வேண்டும் தாமரைக்குக் கற்ப அந்த
வேலை வெயில் எறிக்க வேண்டுமோ - மாலைச்
சிலாவட்டம் சிற்சில நின்று உருகும் என்றால்
நிலா வட்ட நின்று எரிக்க நேரோ - குலா வலைஞர்
சேல் தாக்கால் மீளும் திருநாடா நீ தரு மால்
ஆற்றாக்கால் மேன் மேல் அளிப்பரே - கோல் தொடியார்
நீங்கு அரிய மேகமே எம்போல்வார் நீ அளித்தால்
தாங்கு அரிய வேட்கை தவிர்ப்பரே - யாங்களே |
|
|
உரை
|
|
|
|
|
750
760
770
|
தண்மை அறியா நிலவினேம்
சந்ததமும்
உண்மை அறியா உணர்வினேம் - வெண்மையினில்
செல்லாத கங்குலேம் தீராத ஆதரவேம்
பொல்லாத வெம்பசலைப் போர்வையேம் - நில்லாத
வா மேகலையே முலை வீக்கா வம்பினேம்
யாமேயோ இப்போது எளிவந்தேம் - யாமுடைய
நன்மை ஒருகாலத்து உள்ளது ஒருகாலத்து
இன்மை உணராயோ வெம் கோவே - மன்னவ நீ
முன்பு கருடன் முழுக் கழுத்தில் ஏறுவது
பின்பு களிற்றின் பிணர்க் கழுத்தே - மின்போல்
இமைக்கும் கடவுள் உடையினை பண்டு இப்போது
அமைக்கும் துகிலினை அன்றே - அமைத்ததோர்
பால் கடல் சீ பாஞ்ச சன்னியம் பண்டு இப்போது
கார்க் கடல் சென்று கவர்சங்கே - சீர்க்கின்ற
தண்ணம் துழாய் பண்டு சாத்தும் திருத்தாமம்
கண்ணியின் தாரின் கவட்டிலேயே - திண் என்ற
பள்ளி அறை பால் கடலே பண்டு திருத்துயில்கூர்
பள்ளி அறை இன்று பாசறையே - வெள்ளிய
முத்தம் குடை கவித்து முன் கவித்து மாணிக்கக்
கொத்துக் குடை ஒக்கக் கூடுமே - இத்திறத்தால்
எண்ணற்கு அரிய பெரியோன் நீ எங்களையும்
அண்ணற்கு இகழ இடுக்குமே - விண்ணப்பம்
கொண்டு அருளுக என்ன முகிழ்த்த குறுமுறுவல் |
|
|
உரை
|
|
|
|
|
780 |
தண் தரளக் கொற்றத்
தனிக் குடையோன் - பண்டு அறியா
ஆரமு மாலையும் நாணும் அருங்கலா
பாரமு மேகலையும் பல் வளையும் - ஊரும்
பிடியும் சிவிகையும் தேரும் பிறவும்
படியும் கடாரம் பலவும் - நெடியோன்
கொடுத்தன கொள்ளாள் கொடாதன கொண்டாள்
அடுத்தனர் தோள் மேல் அயர்ந்தாள் - எடுத்து உரைத்த
பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக
மாதர் மனம் கொள்ளா மால்கொள்ளச் - சோதி
இலகு உடையான் கொற்றக் குடை நிழற்ற ஈர் ஏழ்
உலகு உடையான் போந்தான் உலா. |
|
|
உரை
|
|
|
|