(பொ-ள்.) மனைத்தக்காள்-மனைவி, மாண்பு இலளாயின் - மனைக்குத்தக்க மாட்சிமை இல்லாதவளானால் மணமகன்பூண்ட நல் அறம்- கணவன் மேற்கொண்ட இல்லறம், புலப்படா போல் - விளங்காதது போல,இலம்பாட்டார் கல்வி-வறுமைத் துன்பமுடையவர் கல்வி, எனைத் துணையவேனும் தினைத்துணையும்சீர்பாடு இலவாம் - எவ்வளவு திட்ப நுட்பங்கள் உடையவானாலும் தினையளவும் சிறப்புண்டாதல்இல்லையாம், (வி-ம்.) எனைத்துணைய என்பதைத் திட்பநுட்பங்களுக்குக் கொள்க. இலம்பாடு வறுமை என்னும் பொருள் தருதலை,“இலம்பாடு அகற்றென்று”, என்னுந் திருவிளையாடற் புராணத்தாலறிக. சீர்ப்பாடு - சிறத்தல்;“மனைத்தக்க மாண்புடையள்”? என்பது இங்கு ‘மனைத்தக்காள் மாண்பு’ எனப்பட்டது. “நற்குணநிறைந்த கற்புடை மனைவியோ டன்பும்அருளுந் தாங்கி இன்சொலின் விருந்துபுறந்தந் தருந்தவர்ப் பேணி ஐவகைவேள்வியும் ஆற்றி” என்று இவ் வாசிரியர் இயற்றிய சிதம்பர மும்மணிக் கோவையடிகள் மனைத்தக்காள்...........நல்லறம்”என்பதன் கருத்தை விளக்கும். “இல்லற மல்லது நல்லற மன்று”+ என்ற ஒளவைச் செல்விகூறினமையால், இங்கு நல்லறம் எனப்பட்டது இல்லறமாயிற்று. (க-து.) கல்வி சிறப்பதற்குச் செல்வப் பொருளும் வேண்டும் (10) _________________________________ * உலவாக்கிழி யருளிய படலம், 13 + திருக்குறள், வாழ்க்கைத்துணை நலம், 1. + கொன்றை வேந்தன், 3. |