(பொ-ள்.) கற்றுத் துறைபோயகாதலற்கு - கற்க வேண்டிய நூல்களெல்லாம் கற்றுக் கற்றதற்குத் தக நிற்குங் கணவனுக்கு,கற்பினாள் - கற்புள்ள மனைவி, பெற்றுக் கொடுத்த தலைமகன் போல் - பெற்றுக் கொடுத்தமுதல் மகனைப் போல், முற்றத் துறந்தார்க்கு-இருவகைப், பற்றினையும் அறவே யொழித்த துறவிகட்கு,மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம் - அவர்களின்மெய்யுணர்வில் தோன்றுகின்ற இன்பமே மிகுந்த இன்பமாகும். இறந்த எலாம்துன்பம் அலாது இல் - அஃதொழித்த பிறவெல்லாம் (அவர்கட்குத்) துன்பமன்றிவேறில்லை. (வி-ம்.) பிற்காலத்தில் தந்தைக்குரியபொறுப்புக்களை ஏற்றுப் பணிபுரிதல் முதலியன முதல்மகனுக்குரித்தாதலின் 'கற்பினாள்பெற்றுக்கொடுத்த தலைமகன்' மிகவும் மதிக்கப்படுகின்றான். துறை - இங்கு வகை. இருவகைப்பற்று - உடல் என்னும் அகப்பற்றும், உடைமை என்னும் புறப்பற்றும். 'இறந்த வெலாந்துன்பமே யாம் என்பதும் பாடம். (க-து.) முற்றுந் துறந்த முனிவர்கட்குஅவர்கள் மெய்யுணர்வில் தோன்றும் இன்பமேஇன்பம்.(100) |