17. தாழாதாரிடத்துந் தாழ்தல்

ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட
மீச்செலவு காணின் நனிதாழ்ப - தூக்கின்
மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல
வலிதன்றே தாழுந் துலைக்கு

(பொ-ள்.) தூக்கின்- உயர்த்திப்பிடித்தால்துலைக்கு - தராசில், மெலியது மேன்மேல் எழச்செல்ல செல்ல -இலேசான பொருளுள்ள தட்டு மேல்மேலே எழுவதற்கு உயரும்பொழுதெல்லாம், வலிது அன்றே தாழும்-பளுவானபொருளுள்ள தட்டன்றோ தாழ்ந்து போகும்; (அதுபோல), ஆக்கம்பெரியார்- கல்வியிலும்செல்வத்திலும்அல்லதுஇவ்விரண்டிலும்மிகுந்து பெரியாராயிருப்பவர்கள், சிறியாரிடைப்பட்டமீச்செலவுகாணின்நனிதாழ்ப- அவ்விரண்டிலுங்குறைந்து சிறியராயிருப்பவர்களிடத்தில்உண்டானவரம்பு கடந்த நடக்கையைக்கண்டால்அவர்களுக்கு மிகவும்தாழ்ந்து நடப்பார்கள்.

(வி-ம்.) ஆக்கம்- ஆக்குதல்; அது தன்னைச்சேர்த்துக்கொண்ட ஒருவனைமேன்மேலும்உயர்வாக்கும்என்னும்பொருளில்ஆகுபெயராய்க்கருவியையும்செல்வத்தையும்உணர்த்திற்று.ஆக்கத்திற். பெரியார்சிறியார்என்று கொள்க, இடை, இடம்என்பன ஒரு பொருட்பன்மொழி. பட்ட- உண்டான. மீச்செலவு-அளவுக்குமீறி நடக்கும்நடக்கை: செலவு - நடக்கை: இது தொழிற்பெயர்,இஃதிப்பொருட்டாதல்*”சேவடி படரும்செம்மல்உள்ளமொடு, நலம்புரி கொள்கைப்புலம்பிரிந்துஉறையும்செலவு” என்ற விடத்துக்காண்க. மீச்செலவு: ஒரு சொன்னீர்மைத்து. எழ, செல்லஎன்னும்இரண்டிற்கும்வினைமுதல்இலேசான பொருளுள்ள தட்டு, மெலியது வலிது என்பன இடத்துக்கேற்றபடிதுலைத்தட்டுகளை உணர்த்தின. துலைக்கு: உருபு மயக்கம்.முன்செய்யுள்தாழ்ந்தாரிடந்தாழ்தலைக்குறித்தது. இச்செய்யுள்தாழாதாரிடத்துந்தாழ்தலைக்குறித்தது,

(க-து.) தமக்குத் தாழ்ந்து நடவாதாரிடத்தும் தாம் தாழ்ந்து நடத்தலே தக்கது. (17)
_________________________________

*    திருமுருகாற்றுப்படை, 64