(பொ-ள்.) பின்னர்- இனிமேல், சிறுவரை ஆயினும் - சிறிது காலமாயினும், மன்ற - திண்ணமாக,தமக்கு இறுவரை இல்லை எனின் - தமக்குச் சாங்காலம் இல்லையானால், தம்முடைய ஆற்றலும்மானமும்தோற்று - தம்முடைய வலிமையையும் மானத்தையும் இழந்து, தம் இன்னுயிர் - தமது இனிய உயிரை, ஓம்பினும் ஓம்புக - காக்கினுங்காக்க. (வி-ம்.) பிறந்த போதே இறப்புஉண்மையாகலின், வலியும் மானமும் இழக்காது வாழவேண்டும் என்க. போர்முகத்தும் பகைவர்க்குப் புறங்காட்டல் வலியிழத்தல்: இழிதொழில்செய்து பிறரால் அவமதிக்கப்படலும் தண்டிக்கப்படலும் மானம் இழத்தல்: "மருந்தோமற்றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை, பீடழிய வந்த விடத்து " என்பது திருக்குறள்.ஓம்பினும் என்னும் உம்மை இழிவு சிறப்பு.ஆங்கு: அசைநிலை, பிறந்த உயிரெல்லாம் என்றேனும் ஒருநாள் இறந்தே தீரும். இறவாத உயிரெதுவும் மண்ணிலில்லை. ஆசிரியர்குமரகுருபர அடிகள் தம் முதற்செய்யுளிலேயே இவ்வுண்மையை விளக்கி மண்ணிற் பிறந்தார்க்கெல்லாம் இறப்பு உண்டாகையால் "எம்பிரான்மன்று வழுத்தாததென்னே நமரங்காள்" என்றுகூறி வருந்தினார். (க-து.) தமக்கு இனி இறத்தல் இல்லைஎன்று உறுதியாக உணர்ந்தார் தம் வலிமையையும் மானத்தையும் இழந்தேனும் தம் உயிரையும்பாதுகாக்க. (41) |