(பொ-ள்.) வேந்தன்-அரசன்,நமக்கு கைவரும் என்று - நமக்கு இசைந்து வருவன் என்று கருதி-காதலித்த - விரும்பினவற்றை,செவ்வி தெரியாது - (அவனிடம் சொல்லக்கூடிய)காலந்தெரியாமல், உரையற்க, சொல்லுதலொழிக, ஒவ்வொரு கால் எண்யைனேனும் - சிற்சில நேரங்களில்(அவன் காணுதற்கு) எளியனானாலும், பெரிது-பெரும்பாலும், அரியன்- காண்டற்கும் பேசுதற்கும்)அரியனாவன், (மேலும்) கண்இலன் - (அவன்) கண்ணோட்டமில்லாதவன், உள் வெயர்ப்பினான் -உள்ளத்தே சினமுமுடையவன். (வி-ம்.) கோல்நிலை கோடா வேந்தன் கோல்நிலை கோடா நிற்க, உறவினர் அயலார் என நோக்காதுஅறநெறி நின்று அந்நெறி பிறழ்ந்தாரைத் தண்டித்தலும், காலம் வருமளவும் பகைவரறியாமல் உள்ளேசினங் கொள்ளலும் இயல்பாதலால் கண் இலன், உள் வெயர்ப்பினான் என்றார். கண்,இடத்தினிகழ் பொருண்மேல் நிற்றலானும், உள்,அங்கிருக்கும் மனத்தின்மேல் நிற்றலானும் இடவாகு பெயர்கள். அரசனைக் கண்டு தத்தம்குறைபாடுகளைக் கூறப், பற்பல அதிகாரிகளும் புலவர்களும், குடிகளும் அயல்நாட்டு மன்னரின் தூதுவர்முதலியோரும் நேரம் பார்த்து நிற்பர். அரசன் எல்லோரையும் உசாவி அவரவர்க்கு மறுமொழிசொல்வதில் எப்போதும் ஆவலுடையவனாயிருப்பன். மேலும், அவரவர்க்கு ஏற்ற வகையில் அவரவர்குறைகள் நீக்க நெடுநேரம் ஆழ்ந்து கருதவேண்டியவனாயுமிருப்பன். அவ்வமயங்களில் அவன் மனநிலை தெரியாமல் எவ்வளவு உயிர்த்தோழராயிருந்தாலுங் காலமறியாமல் அவனிடம் ஏதாதது மொழிந்தால் அவன் சிந்தனை சிதறுண்டு அதனாலவன் சீற்றங் கொள்வன். ஆதலின், செவியறிந்துரைக்க வென்பது. (க-து.) அரசன்நம்மிடம் அன்புடையவனாயிருப்பினும் அவனிடம் காலமறிந்தே நாம் விரும்பியவற்றைச் சொல்லவேண்டும். (46) |