(பொ-ள்.) வெகுளின்மன் - (அரசர்) மிகுதியாகக் கோபித்தால்,பழமை (இவர் நமக்கு அரசியலின்) தொன்று தொட்டுப் பணியாற்றி வருபவர் என்பதையும்,கடைப்பிடியார் - நிலைநிறுதார், கேண்மையும் -(இவர் நமக்கு) நண்பர் என்பதையும், பாரார்- கவனியார் பிறிது - (அவை) ஒழிய, கிழமை -(இவர் நமக்கு) உரியவர் என்பதையும், ஒன்றும்-சிறிதும். கொள்ளார் - நினையார், (ஆதலால்)இறை - அரசியலில், மாண்டார்க்கு - அகப்பட்டார்க்கு, காதன்மை உண்டே - அன்புடைமையுண்டோ?,அவர்க்கு- அவ்வரசர்க்கு, ஏதிலரும் - (இவர்) அயலாரெனவும், ஆர்வலரும் - (இவர்)அன்புநடயரெனவும், இல்லை -கிடையா. (வி-ம்.) அரசர்சினங்கொள்வாராயின், அயலாரெனவும் அன்புடையாரெனவும் பாரார்என்பதற்குச் சோழ மன்னன் ஒரு பசுவினதுகன்றின்பொருட்டுத் தன் புதல்வன் செய்த குற்றத்திற்காக அவனையே கீழே கிடத்தி அவன் மேல் தேரூர்ந்த வரலாறு சான்றாகும். பழமை,கிழமை இரண்டும் பண்பாகு பெயர்கள். மன்: மிகுதியுணர்த்திற்று. ஆர்வம்-அன்பு; இதனையுடையார்ஆர்வலர். அரசர்க்குக் கோபம் பிறந்தால் அவர் கட்டளைக்கு எதிர்த்துநிற்றலியலாது. அரசர் கோபத்திற்கு உற்றார், உறவினர் என்பது கிடையாது. "வேந்தன்சீறின் ஆந்துணை பில்லை" "மன்னரை யடைந்து வாழ்தல் வஞ்சநஞ் கடைய நாகந்தன்னொடு கூடி வாழுந்தன்மை" என்பன காண்க. (க-து.) எவரும் அரசரிடம் உரிமை கொள்ளல் இயலாது. (47) |