(பொ-ள்.) உலையாமுயற்சி- இளைத்தலில்லாத முயற்சியையே, களைகண்ஆ - பற்றுக்கோடாகக் கொண்டு, ஊழின்வலி - போகு ஊழினது வலிமையை, சிந்தும் - சிதைக்கின்ற, வன்மையும் உண்டே- வலிமையு முண்டு, உலகறிய - உலகமறிய, பால்முளை தின்று - ஊழ்வினையின்முளையைத்தின்று, மறலி உயிர்குடித்த - கூற்றுவனது உயிரையும்குடித்தகால்முளையே - மார்க்கண்டன் என்னும் சிறுவனே, கரி-சான்றாவன். (வி-ம்.) உடையான் வினையைஉடைமை மேலேற்றி உலையா முயற்சி எனவும், ஊழ்வினை எங்கிருப்பினும் விடாதுதொடரும் என்பது தோன்ற, ஊழின் வலியெனவும், ஊழைவெல்லல்அருஞ்செயலாகையால் வன்மை எனவும், தின்றபின்நீர்குடித்தலியல்பாகையால் `முளை தின்றுஉயிர்குடித்த' எனவும்,மறலி உயிர்குடித்ததுசிவபெருமானாயினும் அத்தொழிற்குக் காரணமாயிருந்தது மார்க்கண்டேயனாகையால், மறலி யுயிர் குடித்த கால்முளை' யெனவுங்கூறினார். கால்முளை - வழித்தோன்றுவோன். போலும்:அசை, உண்டே:ஏ, தேற்றம். `கால் முளையே சாலுங்கரி' என்றுபாடங்கொள்வாரு முளர் இச்செய்யுட்பொருள் "ஊழையு முப்பக்கங்காண்பருலைவின்றித்தாழா துஞற்று பவர்"" கூற்றங் கும்த்தலுங் கைகூடும்நோற்றலின், ஆற்றல் தலைப்பட் டவர்க்கு" என்னும் திருக்குறள்களில் வந்திருத்தல் கண்டுகொள்க.ஊழை முளையாக உருவகஞ் செய்து உயிரை நீராகஉருவகஞ செய்து உயிரை நீராக உருவகஞ் செய்யாமையின் இஃது ஏகதேசவுருவகவணி. (க-து.) இளைத்தலில்லா முயற்சியால் ஊழையும்வெல்லலாம். (51) |