(பொ-ள்.) பகைசிறிய எனினும் - தம் பகைகள் சிறியனவாயிருப்பினும்,ஓம்புதல் - (அவற்றினின்றுந் தம்மைக்)காத்துக்கொள்ளுதலை, தேற்றார் - உணராதவர், பெரிதும் பிழைபாடு உடையவர் - மிகவும பிழையுடையராவார்; ஆழ்கயத்து - ஆழமான கயமாகிய நீர்நிறை மடுவில் - நீர்நிறைந்த மடுவின்கண், தவளை குதிப்பினும் - தவளை குதித்தாலும், யானை நிழல் - (அம்மடுவில்அவ்வமயம்காணா நின்ற) யானையின் நிழலையும், காண்பு அரிது - காணுதல்அரிதாகிவிடும். (வி-ம்.) நீர் நிலையோரத்தில் ஒரு யானை நிற்க, அதன் நிழல்நீரில்காணப்படுகின்றது. அவ்வமயம் ஒரு சிறுதவளை தண்ணீரில் குதிக்கின்றது. குதித்தவுடன் நீர்கலங்கி யானையின்நிழல்சிதைவுறுகின்றது. தவளையோ யானையினும்எவ்வளவோ சிறியது. அது குதித்தலால் நீர்நிலைமுற்றுங்கவர்ந்து, காணப்பட்ட யானையின்நிழல் சிதைவுறுவதுபோற், சிறிய பகைவராயிருந்தாலும் அவராலும்கேடுண்டுஎன்பது கொள்ளப்படும். எடுத்துக்காட்டுவமையணி. "பஞ்சியின்மெல்லிதேனும் பகைசிறி தென்ன வேண்டா, அஞ்சித்தற்காக்க வேண்டும் அரும்பொருளாக," "இளைதாக முள்மரங்கொல்க களையுநர்கைகொல்லும்காழ்த்த இடத்து"என்பன காண்க. "சிறு பாம்பெனினும் பெருந்தடி கொண்டடி" என்பது பழமொழி. பூ நாகம்சிறிது; அதன் விடமோ உயிரையே வாங்கிவிடும். ஒரு சிறுவன்ஒருவரைப்பற்றி ஓர்அவதூறு சொல்வானாயின் உலகம் கேள்விப்பேச்சில் நம்புவதாயிருப்பதனால்அவ்வவதூறுஅப்படியே பலபேரிடைப் பரவி அவர்க்குப்பகைவர்பலரை உண்டாக்கும். ஆகையால், பகை சிறிதெனிலுமவிட் டிடல்வேண்டாவென்பது. (க-து.) தம்பகைவர்சிறியவராயினும்அவரைப்பொருள்செய்யா தொழுகுதலாகாது. (54) |