(பொ-ள்.) உலகு அனைத்தும்- உலகம் முழுமையும், சொல் ஒன்றின் - (தமது) ஒரு வார்த்தையினாலே, யாப்பார் - வயப்படுத்தக்கூடிய முனிவர், பல்காலும் -பன் முறையும், காமப்பகை - காமமாகிய உட்பகையை, பரிந்து ஓம்பி - மிகுதியும் வருந்தி, காப்ப - காவல் செய்வார் (அதுபோல்அறிவுடையார்), புறப்பகை - வெளிப்பகை, கோடியின் மிக்குறினும் - கோடிக்கு மேல் அதிகமாய்இருந்தாலும், அஞ்சார் - (அதற்காக)அஞ்சாமல், அகப்பகை - உட்பகை ஒன்று - ஒன்றேயானாலும்,அஞ்சிக்காப்ப - (அதன்துன்பம்பெரிதாகையால்) அதனை அஞ்சிக்காவல்செய்வர். (வி-ம்.) பகை: பகையுடையார்மேல்நிற்றலின்தொழிலாகுபெயர். அஞ்சார்: முற்றெச்சம். "வாள்போற்பகைவரை அஞ்சற்க அஞ்சுக,கேள்போற்பகைவர்தொடர்பு, "எட்பக வன்ன சிறுமைத்தேயாயினும், உட்பகை யுள்ளதாங்கேடு" என்பனதிருவள்ளுவர்திருமொழிகள். (க-து. ) புறப்பகைவரை விட அகப்பகைவர்க்குஅஞ்சுதல வேண்டும். (55) |