58. மனநலத்துக்கான செயல்

மனத்த கறுப்பெனின் நல்ல செயினு
அனைத்தெவையுந் தீயவே யாகும் - எனைத்துணையுந்
தீயவே செய்யினும் நல்லவாக் காண்பவே
மாசில் மனத்தி னவர்

(பொ-ள்.) கறுப்பு மனத்தஎனின் நல்ல செயினும்-ஒருவர் சினங்கொண்டாரெனின் ஒருவன் அவருக்கு நல்லவற்றையேசெய்தாலும், அனைத்து எவையும் -(அவருக்கு) அவையாவும், தீயவே ஆகும்- தீச்செயல்களாகவே ஒழியும்,மாசு இல் மனத்தினவர் களங்கமில்லாத மனமுடையவர்க்கு எனைத்துணையும் - எவ்வளவுதாம், தீயவே செய்யினும் - தீச்செயல்களையே செய்தாலும், நல்லவாக்காண்பவே - அவையெல்லாவற்றையும்அவர்கள் நற்செயலாகவே கொள்வார்கள்.

(வி-ம்.) கறுப்பு மனத்த எனின்என்பதற்கு, சினக் குறிப்புக்கள்உள்ளத்திலுள்ளன எனின் என்றுரைத்துக்கொள்க. கறுப்பு - கோபமாகியகுறிப்புணர்த்துஞ் சொல்; "கறுப்புஞ்சிவப்பும் வெகுளிப் பொருள" என்பது தொல்காப்பியம். கறுப்பு -கறை. மாசு - வெகுளிப் பொறாமை, அவா முதலிய.

"வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம்

தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவாம்

ஓரும் வையத்தியற்கை யன்றோ"

என்னுஞ் சிந்தாமணிச்செய்யுள்இங்கு நினைவுகூர்தற்குரியது.

ஒருவர் மனம் எப்படியோ அதன்படி அவர் எண்ணமுமிருக்கு மாகையால், இச் செய்யுளில் மனத்தாலானபயன் கூறப்பட்டது. நன்மனமுடையோர் யார்என்ன செய்தாலும் அவர்கள் குற்றம் காணாது குணமே காண்பர்; தீயமறத்தினர் நல்ல செயினும்நன்றென உணரார்.

(க-து.) கோபங்கொண்ட மனமுடையவர்கள்பால் எத்தனை நல்லகாரியஞ்செய்தாலும் அவர்களை மகிழ்வித்தல்அரிது.(58)