(பொ-ள்.) அனல்கொளுந்தும்-தீப்போலச் சுடும், வெங்காரம் - வெங்காரமானது, வெய்தெனினும் - வெம்மை கொடுப்பதாய்க் காணப்படினும், நோய்தீர்க்கும் - நோயினை நீக்கி உடல் நலம்என்னுங்குளிர்ச்சியைத்தரும், சிங்கி- நஞ்சானது,மெய் பொடிப்ப -உடல்புளகம்கொள்ளும்படியாக, குளிர்ந்தும்கொலும்- குளிர்ச்சியைக் கொடுத்தாலும் பின்னர்க் கொன்றுவிடும், (அதுபோலே) இனியவர் - நல்லோர், என் சொலினும் - என்ன சொன்னபோதிலும் (அஃதாவது, கேட்பவர்க்கு விருப்பமில்லாத சொற்களைச்சொன்னபோதிலும்,) இன்சொல்லே- அவை யாவும் (பின்நன்மையே விளைக்குமாதலால்) இனிய சொற்களேயாகும், இன்னார்- தீயவருடைய, கனியும் மொழியும்- கனிந்து தோன்றுஞ்சொல்லும், கடுவே- (பின்தீமையேவிளைக் குமாதலால்) நஞ்சேயாகும். (வி-ம்.) சொல்லியல்பைக்கருதாது அவற்றின்பயன்ஆராய்தல்இன்றியமையாதது என்பது. வாக்கினாலாய பயன்இங்குக்கூறப்பட்டது. வெங்காரம்- உப்புவகை. இச்செய்யுள்எடுத்துக்காட்டுவமையணி. (க-து.) நல்லோர்வன்சொல்லும்இன்சொல்லே; அல்லார்இன்சொல்லும் வன்சொல்லே. (59) |