60. நல்லாறு

பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக்காத்து - மெய்யிற்
புலமைந்துங் காத்து மனமாசு அகற்றும்
நலமன்றே நல்லாறு எனல்

(பொ-ள்.) பொய்-பொய்யும், குறளை - புறங்கூறலும், வன்சொல் - கடுஞ்சொலும், பயனில -பயனில்சொல்கூறலும், என்ற - என்றுள்ள,இந்நான்கும் - இந்த நான்கு பாவங்களும், எய்தாமை - வராமல், சொல்லின் வழுகாத்து - சொல்லின் குற்றங்களை நீக்கி, மெய்யில் புலமைந்துங்காத்து - ஐம்புலன்களையும் உடம்பின்கண்அடக்கியாண்டு, மனம்மாசு அகற்றும்- மனக்குற்றங்களை நீக்கும், நலம் அன்றே - நற்செயலன்றோ,நல் ஆறு -நன்னெறி, எனல் - என்று சொல்லத்தகும்.

(வி-ம்.) மனமாசகற்றல்-மனக்குற்றமொழித்தல்,மனக குற்றங்கள்:காமம்வெகுளி மயக்கம்."சொல்லில்பொய்,குறளை, வன்சொல், பயனில என்றிந்நான்கும்எய்தாமை " - வாக்குக் குற்ற மொழித்தல்; குறளையாவது, ஒருவர்இல்லாத நீதிநெறி விளக்கம்இடத்தில்அவரைப்பற்றி இகழ்ச்சியாய்க்கூறுதலும், உறவினால்அறிந்த மறைகளைநண்ன்மேல்வெறுப்பு வந்ததனால்வெளியிடுவதுமாகும். புலனைந்துங் காத்தல்-காயக்குற்றமொழித்தல், எனல்; வியங்கோள் வினைமுற்று.

(க-து.) மனம்,வாக்குக்காயங்களில்குற்றமில்லா தொழுகுதலேஉயிர்க்குறுதி பயக்கும  நன்னெறியாகும். (60)