(பொ-ள்.) இடைதெரிந்து-காலத்தின் வாய்ப்பறிந்து, அச்சுறுத்து-பயமுறுத்தி, வஞ்சித்து-ஏமாற்றி, எளியார்உடமை கொண்டு -எளியவர்களுடைய பொருளைக் கவர்ந்து, ஏமாப்பார்-இறுமாப்புக் கொள்பவர்களுடைய,செல்வம்-செல்வமானது, மடம் நல்லார் பொம்மன்முலைபோற்பருத்திடினும் - பேதைமையுடையபெண்களின் பூரித்த கொங்கைபோல்ஒருக்கால்மிகுந்திட்டாலும், (அவைஅதிவிரை வில்), அவர்நுண்ணிடைபோல்தேய்ந்துவிடும்-அப்பெண்களுடைய சிற்றிடைபோல்குறைந்து போகும். (வி-ம்.) பருத்திடினும் என்னும்உம்மைஎதிர்மறையாகலின் பெரும்பாலும் வளர்ச்சியின்மைகொள்ளப்படும். பருக்கப்பருக்க அதனைத்தாங்கும் இடை சிறுத்து வருதல்போல, வஞ்சித்துத் தேடுஞ்செல்வமும் ஒரோவொருகால் மேலேபெருக்க மடைவது போல்தோன்றினாலும்அதற்கு அடிப்படையாயிருக்கும்புண்ணியமாகியதிருவுடைமை தேய்ந்துவருமென்பது உவமையாற்பெறப்பட்டது.சூழ்ச்சியும் அச்சுறுத்தலுங்காரிய நிறைவேற்றத்திற்குரியவையென அவற்றை நலமுடையனவாகக் கொள்ளும்ஒரு சாராரை இச்செய்யுள் உரமாய்மறுத்தமை கண்டுகொள்க. விடும்:துணிவுப்பொருள்தந்தது். (க-து.) ஒருவரை வஞ்சித்துத் தேடியபொருள், வளர்வது போல் தோன்றினாலும் அதிவிரைவில் அழிந்துவிடும். (63) |