(பொ-ள்.) எண்மையவாயினும்அறன் அல்ல கைவிட்டு - செய்தற்குஎளியனவாயிருப்பினும் அறநெறிக்கொவ்வாத தீச்செயல்களைச் செய்யாதொழிந்து, அரிதெனினும் - செய்தற்குஅரியதாயிருந்த போதிலும், ஒண்மையின்தீர்ந்து ஒழுகலார் - அறிநெறியினின்றும் விலகியொழுகாது செய்து அதன்பயன்அடையும்அறிஞர்,சிறுமுயற்சி செய்து - சிறிய முயற்சிசெய்து,உறுபயன் - அம்முயற்சியால்மிகுந்தபயனை, கொள்ளப்பெறும்எனில் - அடையக் கூடுமானால் தாழ்வரோ - அம்முயற்சியைச்செய்யப்பின்வாங்குவரோ?,தாழார் - பின்வாங்கார். (வி-ம்.) சிறுமுயற்சி - சொல்வன்மையால்உண்டாகும் பயன் போன்றவை, அம்முயற்சி எளிதாதலால் சிறு முயற்சி என்றும், மனம்நல்வழிச்சென்று செய்யும் அறச்செய்கை யார்க்கும்அரிதாகையால் அதனை அரிதென்றுங்கூறினார். ஒண்மை - நன்மை."அழகும்நன்றும் அறிவும்ஒண்மை" என்பது பிங்கலம். எண்மையவாயினும் என்-பதற்கு: எளிதாகச் செய்துபெரும்பயன்பெறத்தக்கனவாய் வாய்க்குமாயினும்என்றுரைத்தலுமுண்டு. இச்செய்யுட் பொருளோடு "பெருமை யுடையவராற்றுவாராற்றி,னருமையுடைய செயல்" " செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர், செயற்கரிய செயகலா தார்" என்னுந் திருக்குறள்ஒப்பு நோக்குதற்குரியன. (க-து.) செய்தற்கரியஅருஞ்செயல் செய்து பெரும்பயன்பெறும்அறிஞர்சிறுமுயற்சியாற்பெரும்பயனடைய வழியிருப்புழி அம்முயற்சியைவிரைந்து செய்து நலமுறப்பின்வாங்கார். (70) |