71. நாகரிகம் இல்லாதவர்

செயக்கடவ அல்லனவுஞ் செய்துமன் னென்பார்
நயத்தகு நாகரிகம் என்னாம் - செயிர்த்துரைப்பின்
நெஞ்சுநோம் என்று தலைதுமிப்பான் தண்ணளிபோல்
எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று

(பொ-ள்.) செயக்கடவஅல்லனவும்செய்தும்மன்-செய்தற்கரிய செயல்களையும் மிகுதியுஞ்செய்து முடிப்போம்என்பார் - (என்று செயலிற்காட்டாது) சொல்லளவிற்சொல்லிநிற்பாரின், நயத்தகு நாகரிகம்என்ஆம்-முகமனான கண்ணோட்டம்என்ன பயனைத் தரும்? (இச்செய்கை) செயிர்த்துரைப்பின் - ஒருவரைக்கோபித்துச்சொன்னால், நெஞ்சுநேரம்என்று - அவர்க்கு மன வருத்தம்உண்டாகுமென்று, தலை துமிப்பான் தண்ணளிபோல்- அவர்தலையை வெட்டும் கருணைத் திறனை ஒக்குமென்று, எஞ்சாது எடுத்துரைக்கற்பாற்று - அது கூசாமற்கூறுந்தன்மையதாகும்.

(வி-ம்.) நாகரிக மென்றது, ஈண்டுக்கண்ணோட்டம், தன்னாலாகாவிடத்துத் தன்னை வந்தடுத்தோன்பிறனிடம்சென்றேனும்பயன் பெறட்டும்என்று விடாது. தானே அருஞ்செயல்களைச்செய்து விடுவதாய்ச் சொல்லி, அவன் பிறனொருவனிடம்அடையும் பயனையும் அடையவிடாது கெடுத்தலால், 'நெஞ்சு நோமென்று தலைதுமிப்பான்தண்ணளிபோல்' என்றார். மன்:மிகுதிமேற்று, தண்ணளி: அதன் எதிர்மறையையுணர்த்த வந்த குறிப்புமொழி.

(க-து.) தன்னை வந்தடுத்துத்தன்உதவி விரும்புவானிடம், தான் செய்தற்கரிய காரியங்களையும்செய்து முடிக்க முடியுமென்று சொல்லளவிற்சொல்லிச்செயலில்அவ்வாறுசெய்யாதொழிவது நாகரிகமாகாது.        (71)