73. பயன் கூறுவோர்

பகையின்று பல்லார் பழியெடுத் தோதி
நகையொன்றே நன்பயனாக் கொள்வான் - பயமின்று
மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்
கைவிதிர்த் தஞ்சப்படும்

(பொ-ள்.) பகையின்று- ஒரு பகையுமில்லாமல், பல்லாா பழியெடுத்தோதி - பலரிடத்திலுமுள்ள வசைகளை எடுத்துச் சொல்லி, நகை யொன்றே-இகழ்தலாகியதீவினை ஒன்றையே, நன்பயனாக் கொள்வான்-நற்பயன் என்று கொண்டு திரியும்மூடன், பயமின்று - வேறொரு பயனுமின்றி, மெய்விதிர்ப்புக்காண்பான் - உடலிலேற்படும் நடுக்கமாகிய பயனொன்றையே காணக்கருதி, கொடிறு உடைத்துக் கொல்வான்போல் - பிறருடைய கன்னத்தை உடைத்து வருத்து மியல்புடையானைப்போல்,கைவிதிர்த்து அஞ்சப்படும் - (பிறராற்) கை நடுக்கத்துடன் அஞ்சப்படுவான்.

(வி-ம்.) இன்று - ஈண்டுஇன்றி என்னும்எதிர்மறைக் குறிப்பு வினையெச்சத்திரிபு, கொள்வான், கொல்வான்இரண்டும் வினையாலணையும் பெயர்கள். கொடிறுடைத்துக்கொலை செய்வான் எய்துந்தீவினைப்பயனை இவனும்எய்துவன்என்பது.

(க.து.) பிறர்வசைகூறுதலையே தம்தொழிலாகக் கொண்டவரை யாவரும்அஞ்சி விலகுவர்     (73)