(பொ-ள்) தம்உடையான் எப்பாலும் நிற்பது என- தம்மையாளுடைய இறைவன் சேர்ந்தும் சேராமலும் எங்கெங்கும் நிறைந்து நிற்பதுபோல், எம்முடையார்-எம்மைஆளுந்தன்மையுடைய பெரியோர்,எவர்க்கும் உப்பாலாய்-யாவர்க்கும்புறத்தாராய்; எவர் எவர்எ திறத்தார்-யார் யார் எத்தன்மையராய் இருப்பரோ, அவர் அவர்க்கு அ திறத்தராய் நின்று - அவரவர் தன்மைக் கேற்பத் தாமும் நின்று. ஆவனகூறி-அவர்கள் செய்ய வேண்டிய நற்காரியங்களை அவர்க்கெடுத்துச் சொல்லி, நிற்ப - தாம் யாதிலும் பற்றின்றி நிற்பார்கள். (வி-ம்.) திறம்வகை ; அவை மந்தம், தீவிரம், தீவிரதரம் போல்வன. உப்பால்: சுட்டிடைச்சொல். (க-து.) பற்றற்ற துறவிகள் உலக நடையோடொழுகிஉலகத்தாருக்கு நல்வழிகளை அறிவுறுத்தி வந்தாலும் தாம் உலகப்பற்றின்றி நீங்கியே நிற்பர். (98) |