(பொ-ள்.) மெய்உணர்ந்தார் - உண்மைப்பொருள்களை உணர்ந்தவர்கள், பொய்மேல் புலம்போக்கார் - பொய்ப் பொருள்களின் மேல் தம் புலன்களைச் செலவிடாது, மெய் உணர்ச்சி - மெய்யறிவு கைவருதல் கண்ஆ - தமக்குக் கைகூட வேண்டுமென்பதே கருத்தாக, புலம் காப்பாார்-ஐம்புலன்களையும் காப்பர், மெய்யுணர்ந்தார்- அம்மெய்யறிவாளர், காப்பே நிலைஆ - ஐம்புலன்களையும் காத்தலே நிலையாகவும், பழிநாணல் ஏநீள் கதவுஆ - பழிசொற்களுக்கு நாணுதலே நீண்ட கதவுகளாகவுங் கொண்டு, நிறை - நிறையாகிய,தாழ்- தாழ்ப்பாளை, செறித்துச் சேர்ப்பர் - இறுக்கிப் பொருத்துவர் (வி-ம்.) நிறை-மனத்தை அதன் வழியில்விடாது நிறுத்தல். மெய்யுணர்ச்சியாவது பின்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் ஐயந்திரிபின்றி அறிதல் : போக்கார் : முற்றெச்சம், கண்ணா நிலையா கதவா என்பவற்றின் ஈறுகுறைந்து நின்றன. இச் செய்யுள் இயைபுருவகம். "சுவையொளி யூறோசை நாற்றமென்றைந்தின், வகைதெரிவான் கட்டேயுலகு" என்னுந் திருக்குறள் இங்கு ஊன்றிக் கருத்தித்து தற்குரியது. (கா-து.) உண்மைப்பொருள்களை உணர்ந்த பெரியோர் ஐம்புலன்களையும் அடக்கி மெய்யறிவு உண்டாகும் வழியில் நிற்பர். (99) |