51-60
|
|
51. முயற்சியால் விதியையும் வெல்லல் |
உலையா முயற்சி களைகணா ஊழின் வலிசிந்தும் வன்மையும் உண்டே - உலகறியப் பால்முளை தின்று மறலி உயிர்குடித்த காளைமுளையே போலுங் கரி |
|
(பொ-ள்.) உலையாமுயற்சி- இளைத்தலில்லாத முயற்சியையே, களைகண்ஆ - பற்றுக்கோடாகக் கொண்டு, ஊழின்வலி - போகு ஊழினது வலிமையை, சிந்தும் - சிதைக்கின்ற, வன்மையும் உண்டே- வலிமையு முண்டு, உலகறிய - உலகமறிய, பால்முளை தின்று - ஊழ்வினையின்முளையைத்தின்று, மறலி உயிர்குடித்த - கூற்றுவனது உயிரையும்குடித்தகால்முளையே - மார்க்கண்டன் என்னும் சிறுவனே, கரி-சான்றாவன். (வி-ம்.) உடையான் வினையைஉடைமை மேலேற்றி உலையா முயற்சி எனவும், ஊழ்வினை எங்கிருப்பினும் விடாதுதொடரும் என்பது தோன்ற, ஊழின் வலியெனவும், ஊழைவெல்லல்அருஞ்செயலாகையால் வன்மை எனவும், தின்றபின்நீர்குடித்தலியல்பாகையால் `முளை தின்றுஉயிர்குடித்த' எனவும்,மறலி உயிர்குடித்ததுசிவபெருமானாயினும் அத்தொழிற்குக் காரணமாயிருந்தது மார்க்கண்டேயனாகையால், மறலி யுயிர் குடித்த கால்முளை' யெனவுங்கூறினார். கால்முளை - வழித்தோன்றுவோன். போலும்:அசை, உண்டே:ஏ, தேற்றம். `கால் முளையே சாலுங்கரி' என்றுபாடங்கொள்வாரு முளர் இச்செய்யுட்பொருள் "ஊழையு முப்பக்கங்காண்பருலைவின்றித்தாழா துஞற்று பவர்"" கூற்றங் கும்த்தலுங் கைகூடும்நோற்றலின், ஆற்றல் தலைப்பட் டவர்க்கு" என்னும் திருக்குறள்களில் வந்திருத்தல் கண்டுகொள்க.ஊழை முளையாக உருவகஞ் செய்து உயிரை நீராகஉருவகஞ செய்து உயிரை நீராக உருவகஞ் செய்யாமையின் இஃது ஏகதேசவுருவகவணி. (க-து.) இளைத்தலில்லா முயற்சியால் ஊழையும்வெல்லலாம். (51) |
|
|
|
|
|
காலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப் படும் |
|
(பொ-ள்.) காலம்அறிந்து - (ஒரு காரியத்தைச் செய்தற்குரிய) காலத்தினை அறிந்து, இடம் அறிந்து- அக்காரியத்தைச் செய்து முடித்தற்கேற்ற இடத்தினையும்அறிந்து, செய்வினையின் மூலம் அறிந்து - செய்யும் அக்காரியத்தின் காரணத்தையும் அறிந்து, விளைவு அறிந்து - அதைச் செய்து முடித்தபின் அதனாலேற்படும் பயனையும்அறிந்து, மேலும்-பின்னும், சூழ்வன.தாம் சூழ்ந்து - ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்து, துணைமை வலி தெரிந்து - (அக்காரியம் செய்து முடித்தற்குத்) துணை செய்ய இருப்போர் வலிமையுந்தெரிந்துகொண்டு, ஆள்வினை - முயற்சி, ஆளப்படும்- (பின்னர்ச்) செய்யப்படும். (வி-ம்.) மக்கள்யாவர்க்கும்இந்நீதி பொருந்துமேனும்போர்த் தொழில்புரியும் புரவலர்க்கு முதன்மையானதாகும். காலமறிதல்-தமக்கும் பகைவர்க்கும்ஆகும்காலம்,ஆகாத காலம்இரண்டையும் அறிதல். தமக்குஆகுங்காலம்- படைச்செலவுக்குப்போதியபொருள்இருக்குங் காலம்முதலியன. இடமறிதல்- தமக்கும்பகைவருக்கும்வெல்லுதற்குத்தக்க இடமும், தகாதஇடமும்அறிதல். வினையின்மூலம்அறிதலாவது, போர் செய்யப்புறப்படுங்காரணம்நன்றோ தீதோ என்றுஅறிதல்; விளைவு, அதன்பயனையெல்லாம்அறிதல், மேலும் சூழ்வன சூழ்தலாவது - போர் செய்யுங்கால் நிகழுமென நினைக்கும் இடுக்கண்களையும், அவ்விடுக்கண்களைக்களையும் வழிகளையும் ஆராய்தல், துணையறிதல் - துணையரசர்கள் தன்மையையும் தொழிலுக்கு வேண்டிய காரணங்களாகிய தேர், யானை, குதிரை,காலாட்படை இவற்றின் வலிமையையும் படைத்தலைவர்முதலியோா திறமையையும், படைக்கு வேண்டிய உணவுப்பொருள் நிலைமையையும் அறிதல். "இடத்தொடு பொழுது நாடிச்செய்வினைக்கண்ணு மஞ்சார்"என்னும் சிந்தாமணியும்,"பகல்வெல்லுங்கூகையைக்காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்குவேண்டும்பொழுது" என்னுந்திருக்குறளும் நினைவுகூரற்பாலன, ஆங்கு, தாம்என்பன அசை. (க-து.) கருதிய தொழிலை முடிக்கக்காலம்இடம்துணை முதலியன இன்றியமையாதன. (52) |
|
|
|
|
|
53. கருமங் கண்ணாயினார் செயல் |
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார் |
|
(பொ-ள்.) கருமமே கண்ணாயினார்- (தாம் தொடங்கிய) காரியத்தை முடிப்பதிலேயே கருத்துக்கொண்டவர், மெய் வருத்தம் பாரார் - (தம்) உடம்பின் வருத்தத்தைக் கவனியார், பசி நோக்கார் - பசியையும் கவனியார், கண் துஞ்சார் - உறங்கார்,எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - யார் தீங்கு செய்தாலும் அதைப்பொருட்படுத்தார், செவ்வி-காலத்தின்; அருமையும் பாரார் - அருமையையும் நோக்கார்,அவமதிப்புங் கொள்ளார் - (பிறர் செய்யும்)அவமதிப்பையும் கருதார். (வி-ம்.) கண் துஞ்சார்; உயர்திணையொடு சார்ந்த அ ஃறிணைப் பெயர் உயர்திணை முடிபேற்று ஒரு சொன்னீர்மைத்தாய் நின்றது. எவ்வெவர் - எவர்; பன்மைப் பொருள்களில் வந்த அடுக்குத் தொடர்,ஏ: பிரிநிலை. துருவன், இருண்ட காட்டில் வெயில், பனி, மழை முதலியவற்றால்உடலுக்கு ஏற்பட்ட மெய்வருத்தம் பாராமலும், பசி நோக்காமலும், கண் துஞ்சாமலும், கொடிய காட்டு விலங்குகளின்தீமையை மேற்கொள்ளாமலும்தன்கருமமே கண்ணாகித்திருமாலினிடம் பதவி பெற்ற வரலாறு இதற்குச் சான்றாகும். (க-து.) ஒரு தொழிலைச் செய்து முடிக்க முன்னிற்போர்தமக்கு வரும் எவ்வகை இடையூறுகளையும் பொருட்படுத்தார். (53) |
|
|
|
|
|
சிறிய பகைஎனினும் ஓம்புதல் தேற்றார் பெரிதும் பிழைபா டுடையர் - நிறைகயத்து ஆழ்நீர் மடுவில் தவளை குதிப்பினும் யானை நிழல்காண் பரிது |
|
(பொ-ள்.) பகைசிறிய எனினும் - தம் பகைகள் சிறியனவாயிருப்பினும்,ஓம்புதல் - (அவற்றினின்றுந் தம்மைக்)காத்துக்கொள்ளுதலை, தேற்றார் - உணராதவர், பெரிதும் பிழைபாடு உடையவர் - மிகவும பிழையுடையராவார்; ஆழ்கயத்து - ஆழமான கயமாகிய நீர்நிறை மடுவில் - நீர்நிறைந்த மடுவின்கண், தவளை குதிப்பினும் - தவளை குதித்தாலும், யானை நிழல் - (அம்மடுவில்அவ்வமயம்காணா நின்ற) யானையின் நிழலையும், காண்பு அரிது - காணுதல்அரிதாகிவிடும். (வி-ம்.) நீர் நிலையோரத்தில் ஒரு யானை நிற்க, அதன் நிழல்நீரில்காணப்படுகின்றது. அவ்வமயம் ஒரு சிறுதவளை தண்ணீரில் குதிக்கின்றது. குதித்தவுடன் நீர்கலங்கி யானையின்நிழல்சிதைவுறுகின்றது. தவளையோ யானையினும்எவ்வளவோ சிறியது. அது குதித்தலால் நீர்நிலைமுற்றுங்கவர்ந்து, காணப்பட்ட யானையின்நிழல் சிதைவுறுவதுபோற், சிறிய பகைவராயிருந்தாலும் அவராலும்கேடுண்டுஎன்பது கொள்ளப்படும். எடுத்துக்காட்டுவமையணி. "பஞ்சியின்மெல்லிதேனும் பகைசிறி தென்ன வேண்டா, அஞ்சித்தற்காக்க வேண்டும் அரும்பொருளாக," "இளைதாக முள்மரங்கொல்க களையுநர்கைகொல்லும்காழ்த்த இடத்து"என்பன காண்க. "சிறு பாம்பெனினும் பெருந்தடி கொண்டடி" என்பது பழமொழி. பூ நாகம்சிறிது; அதன் விடமோ உயிரையே வாங்கிவிடும். ஒரு சிறுவன்ஒருவரைப்பற்றி ஓர்அவதூறு சொல்வானாயின் உலகம் கேள்விப்பேச்சில் நம்புவதாயிருப்பதனால்அவ்வவதூறுஅப்படியே பலபேரிடைப் பரவி அவர்க்குப்பகைவர்பலரை உண்டாக்கும். ஆகையால், பகை சிறிதெனிலுமவிட் டிடல்வேண்டாவென்பது. (க-து.) தம்பகைவர்சிறியவராயினும்அவரைப்பொருள்செய்யா தொழுகுதலாகாது. (54) |
|
|
|
|
|
புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார் அகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப - அனைத்துலகும் சொல்லொன்றின் யாப்பர் பரிந்தோம்பிக் காப்பவே பல்காலுங் காமப் பகை |
|
(பொ-ள்.) உலகு அனைத்தும்- உலகம் முழுமையும், சொல் ஒன்றின் - (தமது) ஒரு வார்த்தையினாலே, யாப்பார் - வயப்படுத்தக்கூடிய முனிவர், பல்காலும் -பன் முறையும், காமப்பகை - காமமாகிய உட்பகையை, பரிந்து ஓம்பி - மிகுதியும் வருந்தி, காப்ப - காவல் செய்வார் (அதுபோல்அறிவுடையார்), புறப்பகை - வெளிப்பகை, கோடியின் மிக்குறினும் - கோடிக்கு மேல் அதிகமாய்இருந்தாலும், அஞ்சார் - (அதற்காக)அஞ்சாமல், அகப்பகை - உட்பகை ஒன்று - ஒன்றேயானாலும்,அஞ்சிக்காப்ப - (அதன்துன்பம்பெரிதாகையால்) அதனை அஞ்சிக்காவல்செய்வர். (வி-ம்.) பகை: பகையுடையார்மேல்நிற்றலின்தொழிலாகுபெயர். அஞ்சார்: முற்றெச்சம். "வாள்போற்பகைவரை அஞ்சற்க அஞ்சுக,கேள்போற்பகைவர்தொடர்பு, "எட்பக வன்ன சிறுமைத்தேயாயினும், உட்பகை யுள்ளதாங்கேடு" என்பனதிருவள்ளுவர்திருமொழிகள். (க-து. ) புறப்பகைவரை விட அகப்பகைவர்க்குஅஞ்சுதல வேண்டும். (55) |
|
|
|
|
|
புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை வெளியிட்டு வேறாதல் வேண்டும் - கழிபெருங் கண்ணோட்டம் செய்யார் கருவியிட் டாற்றுவார் புண்வைத்து மூடார் பொதிந்து |
|
(பொ-ள்.) புண்-புண்ணை, கருவியிட்டுஆற்றுவார்-கருவியினால் அறுத்து அதனைக் குணப்படுத்துவார்கள்; (அவ்வாறின்றி) பொதிந்து மூடார் - அதனை மறைத்துமூடிவையார்; (அதுபோல்)புறம்நட்டு - வெளிக்கு உறவுகாட்டி. அகம்வேர்ப்பார் - உள்ளே கோபிப்பவரது, நச்சுப்பகைமை-நஞ்சுபோலுங் கொடியபகைமையை, வெளியிட்டு - வெளியாக்கி, வேறு ஆதல்வேண்டும் - நீங்கல்வேண்டும்; கழிபெருங்கண்ணோட்டம்- (அத்தகைய வஞ்சகமான பகைவர்பால்) மிகுந்த அன்பு, செய்யார் - செய்யமாட்டார். (வி-ம்.) கருவியினால் அறுத்துக் குணப்படுத்த வேண்டிய புண்ணை மூடிவைத்தால், அஃது உள்ளே புடைத்துக் கெடுதி விளைத்தல் போல; உட்பகையும் வெளியுறவும் உடையவரால் தப்பாமற் கேடுவருமாதலின், அன்னாரின் நச்சுப் பகைமையை `வெளியிட்டு வேறாதல் வேண்டும்' என்றார். "முகத்தி னினிய நகாஅவகத்தின்னா, வஞ்சகரை யஞ்சப்படும்"என்பது திருக்குறள்.கழிபெரும்: ஒருபொருட்பன்மொழி:அகம்வேர்ப்பார்: ஒரு சொன்னீர்மைத்தாய் உயர் திணையின் முடிபேற்றது. செய்யேல்: முன்னிலைஒருமை ஏவல்எதிர்மறை வினைமுற்று.நஞ்சு-நச்சு; வலித்தது. கண்ணோட்டமாவது தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியனமறுக்க மாட்டாமை. அஃதாவது, அவர்கள் சென்ற வழியே செல்வது. (க-து.) வெளிக்கு உறவுகாட்டி உட்பகைமை கொண்டாரிடம் பழைமை காட்டல்தகாது. (56) |
|
|
|
|
|
நட்பிடைக் குய்யம்வைத்து எய்யா வினைசூழ்ந்து வட்கார் திறத்தராய் நின்றாக்குத் - திட்பமாம் நாளுலந்த தன்றே நடுவன் நடுவின்மை வாளா கிடப்பன் மறந்து |
|
(பொ-ள்.) நட்பு இடை - நண்பரிடத்து, குய்யம் வைத்து - வஞ்சகம் செய்தலைக் கொண்டு, எய்யா - அவர் அறியாமல்,வினை சூழ்ந்து - (அவர்க்குத்) தீங்கு செய்யக் காலம் பார்த்து,வட்கார் திறத்தராய் - (அவர்கட்கு உள்ள) பகைவரோடு சேர்ந்து கொண்டு, நின்றார்க்கு - நிற்பவர்க்கு. திட்பம் ஆம்-வலிய, நாள் - ஆயுட்காலம், உலந்தது அன்று - முடிந்ததில்லை, நடுவன் - இயமன், நடுவின்மை - (அத்தகைய வஞ்சகரின்) நடுவு நிலைமையில்லாத தீச் செயல்களை, மறந்து - தான் நடுவு நிலைமையுடையவனாகையால் நினையாமல், வாளாகிடப்பன் - சும்மாஇருப்பன். (வி-ம்.) இயமன் நடுநிலையுடையோனாதலால் நடுவன்எனக்கூறினார்; தன்னிலைபோற் கருதிப் பிறரையும் எண்ணுவனாகையால் `நடுவின்மை வாளா கிடப்பன் மறந்து' என்று கூறினார். (க-து.) நண்பர்போல்நடித்து வஞ்சகம் செய்வார் இயமன் நினைவிற்குஅகப்படுமட்டும் உயிரோடிருப்பர். (57) |
|
|
|
|
|
மனத்த கறுப்பெனின் நல்ல செயினு அனைத்தெவையுந் தீயவே யாகும் - எனைத்துணையுந் தீயவே செய்யினும் நல்லவாக் காண்பவே மாசில் மனத்தி னவர் |
|
(பொ-ள்.) கறுப்பு மனத்தஎனின் நல்ல செயினும்-ஒருவர் சினங்கொண்டாரெனின் ஒருவன் அவருக்கு நல்லவற்றையேசெய்தாலும், அனைத்து எவையும் -(அவருக்கு) அவையாவும், தீயவே ஆகும்- தீச்செயல்களாகவே ஒழியும்,மாசு இல் மனத்தினவர் களங்கமில்லாத மனமுடையவர்க்கு எனைத்துணையும் - எவ்வளவுதாம், தீயவே செய்யினும் - தீச்செயல்களையே செய்தாலும், நல்லவாக்காண்பவே - அவையெல்லாவற்றையும்அவர்கள் நற்செயலாகவே கொள்வார்கள். (வி-ம்.) கறுப்பு மனத்த எனின்என்பதற்கு, சினக் குறிப்புக்கள்உள்ளத்திலுள்ளன எனின் என்றுரைத்துக்கொள்க. கறுப்பு - கோபமாகியகுறிப்புணர்த்துஞ் சொல்; "கறுப்புஞ்சிவப்பும் வெகுளிப் பொருள" என்பது தொல்காப்பியம். கறுப்பு -கறை. மாசு - வெகுளிப் பொறாமை, அவா முதலிய. "வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம் தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவாம் ஓரும் வையத்தியற்கை யன்றோ" என்னுஞ் சிந்தாமணிச்செய்யுள்இங்கு நினைவுகூர்தற்குரியது.ஒருவர் மனம் எப்படியோ அதன்படி அவர் எண்ணமுமிருக்கு மாகையால், இச் செய்யுளில் மனத்தாலானபயன் கூறப்பட்டது. நன்மனமுடையோர் யார்என்ன செய்தாலும் அவர்கள் குற்றம் காணாது குணமே காண்பர்; தீயமறத்தினர் நல்ல செயினும்நன்றென உணரார். (க-து.) கோபங்கொண்ட மனமுடையவர்கள்பால் எத்தனை நல்லகாரியஞ்செய்தாலும் அவர்களை மகிழ்வித்தல்அரிது.(58) |
|
|
|
|
|
59. இனியவர் வன்சொல்லும் இனிதே |
இனியவர் எனசொலினும் இன்சொல்லே இன்னார் கனியும் மொழியும் கடுவே - அனல்கொளுந்தும் வெங்காரம் வெய்தெனினும் நோய்தீர்க்கும் மெய்பொடிப்பச் சிங்கி குளிர்ந்துங் கொலும் |
|
(பொ-ள்.) அனல்கொளுந்தும்-தீப்போலச் சுடும், வெங்காரம் - வெங்காரமானது, வெய்தெனினும் - வெம்மை கொடுப்பதாய்க் காணப்படினும், நோய்தீர்க்கும் - நோயினை நீக்கி உடல் நலம்என்னுங்குளிர்ச்சியைத்தரும், சிங்கி- நஞ்சானது,மெய் பொடிப்ப -உடல்புளகம்கொள்ளும்படியாக, குளிர்ந்தும்கொலும்- குளிர்ச்சியைக் கொடுத்தாலும் பின்னர்க் கொன்றுவிடும், (அதுபோலே) இனியவர் - நல்லோர், என் சொலினும் - என்ன சொன்னபோதிலும் (அஃதாவது, கேட்பவர்க்கு விருப்பமில்லாத சொற்களைச்சொன்னபோதிலும்,) இன்சொல்லே- அவை யாவும் (பின்நன்மையே விளைக்குமாதலால்) இனிய சொற்களேயாகும், இன்னார்- தீயவருடைய, கனியும் மொழியும்- கனிந்து தோன்றுஞ்சொல்லும், கடுவே- (பின்தீமையேவிளைக் குமாதலால்) நஞ்சேயாகும். (வி-ம்.) சொல்லியல்பைக்கருதாது அவற்றின்பயன்ஆராய்தல்இன்றியமையாதது என்பது. வாக்கினாலாய பயன்இங்குக்கூறப்பட்டது. வெங்காரம்- உப்புவகை. இச்செய்யுள்எடுத்துக்காட்டுவமையணி. (க-து.) நல்லோர்வன்சொல்லும்இன்சொல்லே; அல்லார்இன்சொல்லும் வன்சொல்லே. (59) |
|
|
|
|
|
பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காத்து - மெய்யிற் புலமைந்துங் காத்து மனமாசு அகற்றும் நலமன்றே நல்லாறு எனல் |
|
(பொ-ள்.) பொய்-பொய்யும், குறளை - புறங்கூறலும், வன்சொல் - கடுஞ்சொலும், பயனில -பயனில்சொல்கூறலும், என்ற - என்றுள்ள,இந்நான்கும் - இந்த நான்கு பாவங்களும், எய்தாமை - வராமல், சொல்லின் வழுகாத்து - சொல்லின் குற்றங்களை நீக்கி, மெய்யில் புலமைந்துங்காத்து - ஐம்புலன்களையும் உடம்பின்கண்அடக்கியாண்டு, மனம்மாசு அகற்றும்- மனக்குற்றங்களை நீக்கும், நலம் அன்றே - நற்செயலன்றோ,நல் ஆறு -நன்னெறி, எனல் - என்று சொல்லத்தகும். (வி-ம்.) மனமாசகற்றல்-மனக்குற்றமொழித்தல்,மனக குற்றங்கள்:காமம்வெகுளி மயக்கம்."சொல்லில்பொய்,குறளை, வன்சொல், பயனில என்றிந்நான்கும்எய்தாமை " - வாக்குக் குற்ற மொழித்தல்; குறளையாவது, ஒருவர்இல்லாத நீதிநெறி விளக்கம்இடத்தில்அவரைப்பற்றி இகழ்ச்சியாய்க்கூறுதலும், உறவினால்அறிந்த மறைகளைநண்ன்மேல்வெறுப்பு வந்ததனால்வெளியிடுவதுமாகும். புலனைந்துங் காத்தல்-காயக்குற்றமொழித்தல், எனல்; வியங்கோள் வினைமுற்று. (க-து.) மனம்,வாக்குக்காயங்களில்குற்றமில்லா தொழுகுதலேஉயிர்க்குறுதி பயக்கும நன்னெறியாகும். (60) |
|
|
|
|
|