| கடும்பற்று |
| கீழோர் தம்பழியைப் பிறர்மேல் சாற்றுவர் |
274 | கஞ்சனத்தில் தம்முகமே காணுவது போற்கயவர் தஞ்செயிரைப் பிறர்செயிர்போல் தாமெண்ணித் தூறுவாரோர் வஞ்சகனை நம்பியொரு மாசிலான் இன்னலொடும் எஞ்சலுறா வண்ணமவன் இழிவுரைத்தன் முறையாமே |
|
| கண்ணாடியில் தம் முகமே காண்பதுபோல் கீழோர் தங்களிடமுள்ள குறைகளையே பெரியோர்மேல் ஏற்றிப் பழிப்பர். வஞ்சகனை நம்பும் நல்லோன் அவனால் துன்பம் எய்துவதுடன் பழியும் பெறுவான். |
|
கஞ்சனம்-கண்ணாடி. கயவர்-கீழோர். செயிர்-குற்றம். இழிவு-பழி. | | 5 |
| அதி. 23-கடும்பற்று |
| பொன்னைப் புதைத்துப் புல்லன் மண்கொள்வான் |
275 | பொன்னினைப் புதைத்திடப் புவியைத் தோண்டுவோன் தன்னிடந் தொட்டமண் தனையி ழுத்தலான் உன்னுடை யதுநிதி உலகமே யிம்மண் என்னுடை யதுவென இயம்ப லொக்குமே. |
|
| வேண்டும் நற்செயலுக்குப் பொருள் கொடாது கடும்பற்றுச் செய்து, அப் பொன்னை மண்ணினுள் புதைக்கப்போகும் இவறன்மையுடையான் மண்ணைத் தோண்டுகின்றான். தோண்டும்பொழுது குழிவாயிலுள்ள மண்ணைத் தன்பக்கம் இழுக்கின்றான். அப்பொழுது உலகைப் பார்த்து ழுஉலகமே! பொன் உன்னுடையது; மண்ணே என்னுடையது,ழு என்று சொல்லுவதை யொக்கும். |
| இவறன்மை-உலோபம். |
| 1 |
| நீ.-9 |