பக்கம் எண் :

162

  நீதிநூல் 
 
 
இல்லாதான் தீயவர்க்கா இரங்கிமனு
    வேடமுற்றா னெனிலன் னார்பாற்
செல்லாதுன் சினமனமே பொறுமையே
    பெருமையன்றோ செப்புங் காலே.
 

நெஞ்சே! நிலம், நல்லவர் தீயவர் என்று கருதாமல் எல்லாரையும் சுமக்கும். தண்ணீர் மிகுதியும் வழங்கும். ஞாயிறு பெருக ஒளி தரும். காற்று வீசும். வானம் இடம் தரும். தனக்குவமை யில்லாத கடவுளும் தீயோர்பால் அருளிரக்கங்கொண்டு மக்கள் கோலங்கொண்டு எழுந்தருளினன். அதனால், அவர்களிடம் உன் சினம் செல்லாது. சொல்லுமிடத்துப் பொறுமையே பெருமையாகும்.

  கால்-காற்று. அந்தரம்-வானம். மனு-மக்கள். வேடம்-கோலம்.
 

6

 

பிழைபொறார் பிழையைப் பெருமானும் பொறான்

345
இன்னலெமக் கிழைத்ததனால் வீடிழந்து
    நரகாழ்வா ரெனநி னைந்து
பன்னரிய பெரியர்பிழை பொறுப்பர்பொறார்
    தம்பிழையைப் பரம னாற்றான்
முன்னொருவன் செய்தனனென் றவற்கிறப்பச்
    செயுமிடரம் முறையி லான்சேய்
பன்னிதம ரையுஞ்சேரு மவர்நமக்கெப்
    பிழைசெய்தார் பகராய் நெஞ்சே.
 

அறியாமல் தீங்கிழைத்தவர் அத்தீவினைப் பயத்தால் பேரின்பப் பெருவாழ்வை இழந்து மீளாநரகத்தில் ஆழ்ந்துவிடுவாரே என்று வருந்தி அப்பிழையைப் பெரியவர் பொறுப்பர். பிழையைப் பொறாதவர்கள் செய்யும் குற்றத்தை ஆண்டவனும் பொறுத்தருளான். தனக்கு முன்பொருவர் குற்றம் செய்தனர் என்று அவர்க்குத் தாமும் ஒரு குற்றம்-சாவினைத் தரும் பேரிடரைச் செய்யின் அவ்விடரால் அவருடைய மக்கள், மனைவியர், உறவினர் முதலானவர்கள் துன்புறுவர். அவர்க ளிடரெய்தும்படி என்ன பிழை செய்தார்கள் மனமே! சொல்லுவாயாக.

  இன்னல்-துன்பம். இழைத்தல்-செய்தல். வீடு-பேரின்பம். இறப்ப-சாவ. இடர்-துன்பம். பகர்தல்-சொல்லுதல்.
 

7