| நீதி நூல் |
| காட்டிலுள்ள மரம் செடிகளை ஆராய்ந்து அவை இத்தனை நாளைக்கு நிற்கும் என்று அளவிடலாம். சிறந்த நீர் நிலைகளை இவ்வளவு காலத்துக்குப் பாயும் நீர் கொள்ளும் எனக் கூறலாம். வீடு இவ்வளவு காலம் நிலைக்குமெனக் கூறலாம். மெய்யென்று பெயர் பெற்ற பொய்யுடலை உலகத்தில் இவ்வளவு காலம் நிலைத்திருக்குமென்று சொல்லவல்லவர் யார்? (ஒருவருமிலர்) |
| கணித்தல்-அளவிட்டுக் கூறல். புனல்-நீர் |
| 5 |
| நம்முயிர் கொள்ளக் காலம் நாடிடான் நமனே |
427 | நெல்லறுக்க வோர்கால மலர்கொய்ய வோர்காலம் நெடிய பாரக் கல்லறுக்க வோர்கால மரமறுக்க வோர்காலக் கணித முண்டு வல்லரக்க னனையநம னினைத்தபோ தெல்லாநம் வாழ்நா ளென்னும் புல்லறுக்க வருவனெனில் நெஞ்சமே மற்றினியாம் புகல்வ தென்னே. |
|
| மனமே! உலகில் நெல் அறுப்பதற்கும், பூப்பறித்தற்கும், கல் வெட்டுதற்கும், மரம் ஈர்வதற்கும் ஒவ்வோர் காலக் கணக்குண்டு. மிகக் கொடியரை யொத்த கூற்றுவன் நம்முடைய அகவை என்னும் புல்லை அறுக்க அவன் நினைத்தபொழுதெல்லாம் வருவான். அதனால், நாம் நம்முடைய அகவையின் நிலைமையைச் சொல்லுவதற்கு என்ன இருக்கின்றது? |
| கணிதம்-கணக்கு. நமன்-கூற்றுவன். வாழ்நாள்-அகவை; (ஆயுள்.) புகல்வது-சொல்வது. |
| 6 |
| யாக்கை இறப்பதற்கு எல்லையில்லை |
428 | முற்றியபின் கனியுதிரும் பழுப்புற்றுத் தழையுதிரும் முழுது மேநெய் வற்றியபின் விளக்கவியு மென்னவோர் திடமுண்டு மக்கள் காயம் பற்றியவக் கருப்பத்தோ பிறக்கும்போ தோபாலப் பருவத் தோமூப் புற்றபின்போ வீழ்வதென நிலையின்றே லிதன்பெருமை யுரைப்ப தென்னே. |
|