பக்கம் எண் :

222

  நீதி நூல்
 
  கொலை முதலிய பாவம் செய்தலே வருத்தம். செய்த அப்பாவத்துக்கு வேந்தர் ஒறுத்தலும் உண்டு. ஊரவரும் பகையாவர். உள்ளத்தையும் வருத்தும். இம்மை மறுமை இன்பங்களையும் கெடுக்கும். இவை எலாம் உறுதியாக நிகழ்வனவே. ஆராயின் நஞ்சை ஒத்த பாவஞ் செய்தலே வருத்தம். அமிழ்தை ஒத்த சிறந்த புண்ணியஞ் செய்தல் எளிது.
  காவலன்-வேந்தன். தண்டம்-ஒறுப்பு. களம்-நஞ்சு.
 

13

         அறமுடை யாரை அனைவரும் புகழ்வர்
465
ஒருவனைப் புதிதாக் காணினு மவனோ
     டுறவுசெய் யினும்பணி கொளினும்
பெருமையோன் தீய னெனவறி யாமுன்
     பேசிடார் தீயனேற் பெயர்வார்
தருமநற் குணத்தைக் தீயரும் புகழ்வார்
     சழக்கினைச் சழக்கரு மிகழ்வார்
இருமைதீ ரறத்தின் பெருமையும் மறத்தின்
     இழிவுமீ துன்னுவாய் மனனே.
  நெஞ்சே! ஒருவனைப் புதிதாகக் கண்டாலும், அல்லது அவனுடன் நட்புச்செய்தாலும், அவை வேலைக்கு வைத்துக்கொண்டாலும் அவன் நிலையை அறிவதற்குமுன் அவனை நல்லவன் கெட்டவன் என்று யாரும் சொல்லார். கெட்டவனானால், அவனை விட்டு நீங்குவர். கடமை வழுவா நற்பண்பைக் கெட்டவரும் புகழ்வர். குற்றத்தைக் குற்றமுடைய தீயவரும் பழித்து மொழிவர். இவைபோல் குற்றம் நீங்கிய நன்மையின் மேன்மையும் பாவத்தின் கீழ்மையும் உரைக்கப்படும். நினைப்பாயாக.
  பணி-வேலை. பெயர்வார்-நீங்குவார். சழக்கு-குற்றம். சழக்கர்-தீயவர். இருமை-குற்றம்.
 

14

  பாவத்தால் நரகுறல் பகரொணாத் துன்பே
466
பலர்கழல் வருட மாதர்க ளாடிப்
     பாடுவோர் பகலெலா மனிச்ச
மலரணை கிடத்தல் வருத்தமா மன்றோ
     வார்த்தவெந் நீர்பொறா வுடலம்