| நீதி நூல் |
| மற; பொருத்தமுற. தரித்தல்-அமைத்தல். சாதித்தாள்-உறுதியாகச் சொன்னாள். |
| 8 |
| செல்வப் பொருளீந்தார்க்குச் சேர்ப்பள் பல அல்லல் |
485 | பொருளொன்று நாந்தந்த திவட்கதற்கில் லாமைபிணி பொய்பு ரட்டு மருளொன்றுங் கட்காமங் கொலைகளவு சூதுவசை மரணத் தோடும் இருளொன்று நரகமின்னு மிவள்பானாங் கொண்டதற்கோ ரிலக்க முண்டோ தெருளொன்றும் பாரினம்போற் சமர்த்தாக்கொண் டெவர்வணிகஞ் செய்ய வல்லார். |
|
| (மனமே!) பொதுமகளுக்கு நாம் கொடுத்தது அழியும் செல்வப் பொருள் ஒன்றே. அவ்வொன்றினைப் பெற்று நமக்கு அவள் தந்த அழியாப்பொருள்களுக்கு அளவே யில்லை. அவை; வறுமை, நோய், பொய், வஞ்சனை, மயக்கந்தரும் கள், நீங்காப் பெண் ஆசை, கொலை, களவு, கவறாடல், பழி, இழிவான சாவு, கழியாத் துன்ப அளறு என்க. இவ் வகையாகத் தெளிந்த இவ்வுலகில் நம்மைப்போல் ஒன்றுக்குப் பன்னிரண்டாக வணிகஞ் செய்யும் திறமையர் யாவருளர். |
| இல்லாமை-வறுமை. பிணி-நோய். புரட்டு-வஞ்சனை. மருள்-மயக்கம். நரகம்-அளறு. சமர்த்தர்-திறவோர். |
| 9 |
| கணவன் நிறைகெடின் மனைவியும் கற்பழிவள் |
486 | இரதியனை யார்பாற்போய் நாம்வருமுன் னெங்குச்சென்றா யெனவில் லாளைப் பொருதிவின விடவிரதி புருடனனை யார்பாற்போய்ப் புணர்ந்தே னென்றாள் விரதமுள்ளா யெங்கிதைநீ கற்றதென்றோம் உம்மிடத்தும் விருப்பா யும்மைச் சுரதஞ்செய் பவரிடத்துங் கற்றதென்றாள் வேறினிநாஞ் சொல்வ தென்னே. |
|