பக்கம் எண் :

249

  கணிகையரியல்பு
 
  சேர்ந்த ஆடவர்க்குக் கைம்மாறாகக் கொடுக்கப்படும் தீரா நோயை அளவிடமுடியாது. அறியாமையால் பொதுமகளிரைச் சேர்தல் பெருந்தீயில் விழுவதையே ஒக்கும்.
  கனைகடல்-ஒலிக்கும் கடல்.
 

33

 

தாள்வெட்டல் பயனின்று தலைவெட்டென்பாள் பொதுமகள்

510
விலைமகட்கென் றயலகத்திற் கன்னமிட்டுத்
    துளைவழியுள் விட்ட தாளைக்
கொலைவாளாற் றறித்தனர்கூ கூவென்றேன்
    வேசையென்பாற் குறுகி யுக்கக்
கலைசோதித் தொன்றுமிலாச் சினத்தாலவ்
    வகத்தாரைக் கதறிக் கள்வன்
தலைதுமியுந் தாள்துமித்தென் பலனென்றாள்
    வெருவியுடல் சாணா னேனே.
  பொதுமகட்குப் பொருள் கொடுக்க வேண்டுமென்று அயல் வீட்டில் நுழைவழி செய்து காலை உள்ளே விட்டேன். அகத்தவர் வாளால் காலை வெட்டினர். கூகூவென்று கூவினேன். பொதுமகள் என்னிடம் வந்து இடுப்பைத் தடவி மடியில் ஏதும் இருக்கின்றதா என்று பார்த்தாள். ஒன்றும் இல்லாமை கண்டு கடுஞ் சினம் கொண்டு, `கள்வன்ழு என்று கதறி வீட்டாரை விளித்துக், கள்வன் தலையை வெட்டாது தாளை வெட்டியதால் பயன் என்னென்றாள்? யான் அஞ்சிச் சாண் உடல் ஆயினேன்.
  விலைமகள்-பொதுமகள். அயலகம்-அடுத்த வீடு. கன்னம்-களவு செய்வதற்காகச் சுவரில் துளையிடுந்துளை. தாள்-கால். உக்கம்-இடுப்பு. துமித்தல்-வெட்டல். வெருவி-அஞ்சி.
 

34

  உமிழ்ந்து திட்டி உதைத்தகற்றுவள் பொதுமகள்
511
திருவெலாங் கொள்ளைகொண்டா டனைநோக்கிச்
    செவ்வதரத் தேனீ யென்றேன்
பெருவாயெச் சிலையுமிழ்ந்தாள் பேசென்றேன்
    கொடுஞ்சொற்கள் பேச லுற்றாள்
மருவென்றே னுதைக்குபுகை யாலிடித்துக்
    கடித்தினிய மதன நூலாம்
இருபாத தாடனமா லிங்கனமெல்
    லிதழ்சுவைத்த லென்றா ளம்மா.