பக்கம் எண் :

280

  நீதி நூல்
 
  மனமே! நாமுணராமலே நம் உயிர்ப்பு இமைப்பொழுதும் ஓவாது நடந்துகொண்டிருக்கவும், உடலகத்துள்ள குற்றமற்ற பொறிகள் தத்தம் தொழில்களைச் செய்யவும், உண்ணும் உணவு நன்றாய்ச் செரித்துக் குருதியாக மாறி உடம்பு எங்கணும் உலவிச் செழுமையுறவும் தந்தருளி நம்மைக் காக்கும் கடவுளை உள்ளத்துற எண்ணி வழிபடுவாயாக.
  இயந்திரம்-பொறி. சீரணித்தல்-செரித்தல்.
 

24

  ஈந்தானை மறந்து பொருள் எண்ணல் இழிவாம்
567
தனந்தந்தான் றனையி கழ்ந்து
    தனத்தினைத் தொழில்போ லீசன்
அனந்தந்தான் வாழ்வு தந்தா
    னாவியு முடலுந் தந்தான்
இனந்தந்தான் இன்பந் தந்தான்
    யாவுந்தந் தானை நீங்கி
முனந்தந்த பொருள வாவு
    மூடருன் சீடர் நெஞ்சே.
  மனமே! இம்மை மறுமை வாழ்வுகட்குரிய பொருளை ஈந்த வள்ளலைப் பொருட்படுத்தாது அப்பொருளைப் போற்றிப் புகழ்வது எவ்வளவு அறிவில் செயலோ அதற்கு மேம்பட்டதாகும். சோறும், வாழ்வும், உயிர்ப்பும், உடலும், உறவும், உள்நிகழும் இன்பும் முதலியதும் தந்தருளிய ஆண்டவனைப் புகழாது அப்பொருள்களைப் புகழ்ந்து, இடைவிடாது அவற்றினையே நினைவு கூர்ந்து வேட்கையுறல். அத்தகைய அறிவிலிகள் உன்னுடைய மாணவராவர்.
  தனம்-பொருள். அனம்-சோறு. ஆவி-உயிர்ப்பு.
 

25

  கருவியின்றியே கடவுள் காண்பன்
568
கண்ணிணை செவிக ளீந்தோன்
    காணான்கொல் கேளான் கொன்னெஞ்
செண்ணிய வீந்தோ னந்தீ
    தெண்ணான்கொல் செங்கோ லோச்சுந்
திண்ணியன் றண்டி யான்கொல்
    தீதிலான் தீதைச் சீறாது