| | தெய்வத்தன்மையும் வாழ்த்தும் |
| | நடப்பனவும் ஆகிய பல்வேறு உயிர்த்துணைகளையும், உலகியற் பலவளங்களையும் ஆக்கியருளினன.் எல்லா நலமும் ஓருருவாய்த் திகழ்ந்து ஆண்டவன் திருவடிப்பற்றே உயிராய்க்கொண்டு வாழும் அடியவர்கட்கு அவனருளும் ழுசெருக்கறுப்பான் எய்தும் வானோர்க்கு உயர்ந்த வுலகமாகியழு பேரின்பப் பெருவீடாம் புக்கில் எத்துணை வள நிறைந்ததென்று எவராலும் வரையறுத்துச் சொல்லமுடியாது. கருதவும் கரையவும் முடியாத பெருந்தீமைகளைச் செய்வோர் சென்று புகுந்து துன்புறும் இருளுலகாகிய நிரயமும் எத்துணைக் கொடியதோ? ஓர்ந்து உய்யுநெறி கடைப்பிடிப்பாயாக. |
| | நரர்-மக்கள். தேவன்-ஆண்டவன், சரம்-நடப்பன. அசரம்-உற்பன. தலம்-உலகம். சலதி-கடல். சிந்தி-ஓர். புந்தி-மனம். புக்கில்-பேரின்பவீடு. எற்று-எத்தன்மைத்து. |
| | 33 |
| | நல்லாரை நீக்கின் நண்ணும் பழியே |
| 576 | ஆலயந் தன்பால் வாழு மரசொரீஇ யவற்கொன் னாரைச் சாலவே யேற்றல் போலத் தனக்குனைப் பீட மாச்செய் மூலகா ரணனை நீத்திங் ககங்கார முதற்பா வங்கள் ஏலநீ யுன்கண் ஏற்றாய் இதயமே சிதைவை நீயே. |
|
| | மனமே! சிறந்த இருக்கையாகிய திருக்கோவில், தன்னிடம் வாழும் முதல்வனாகிய வேந்தை நீக்கி அவற்குப் பகைவராகிய தீயோர்களைச் சேர்த்துத் துன்புற்றுக் கெட்டொழியும். அதுபோல், நீயும் எவற்றுக்கும் காரணமாய் என்றுமுள்ள இறவாப் பிறவா இறைவனை நீக்கி, செருக்கு சினம் சிறுமை முதலிய தீமைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய். விரைவில் கெட்டொழிந்து துன்புறுவாய். ஏன்? உன்னைத் தனக்கிருப்பிடமாகவே ஆண்டவன் அமைத்தனன். |
| | ஆலயம்-திருக்கோவில். ஒரீஇ-நீக்கி. ஒன்னார்-பகைவர். பீடம்-இருக்கை. நீத்து-விலக்கி. சிதைவை-கெடுவை. |
| | 34 |
| | வளர்த்தோர்க்குதவும் மாமரம்போல் வகுத்தானை வணங்கு |
| 577 | விருகமுந் தனைவ ளர்த்தோர் வியப்புற வேலை செய்யுந் தருவொடு பயிர்வைத் தோர்க்குத் தனிப்பய னல்கு நம்மை யொருபொரு ளெனச்சி ருட்டித் துலகமு மற்ற யாவுந் தருமொரு முதலைப் போற்றாத் தன்மையோர் புன்மை யோரே. |
|