| ஞானாசிரியன் பெருமை |
| வேட்டகத் தரியநூல்க ளுளவேனு மினிதாக் காட்டருட் குரவனின்றி யெவர்காண்பர் பயனே. |
|
| கண்ணில்லா விட்டால் ஒளியின் பயனின்று; திறவுகோல் இல்லாவிட்டால் வீட்டில் புகமுடியாது. அவைபோன்று, வீட்டில் விரும்பிய நூல் பல இருப்பினும் ஞானாசிரியன் காட்டினால் அல்லாமல் ஒருவராலும் நூலின் பயன் காணமுடியாது. |
| 3 |
| ஆசானா லன்றி யார்க்கும் பிறப்ப றாது |
57 | ஞானசூ ரியனெனுங் குரவனின்றி நரர்தம் ஈனவெம் பவவிரா வையகலா ரெவருமே கானம்வாழ் மிருகமாவர் கதிவாயில் பொதியு மானவர்க் குறையுளாய் நிரயம்வாய் விரியுமே. |
|
| மக்கள் ஞானாசிரியனாகிய விளக்கின்றிப் பிறவியாகிய இருளைக் கடவார். பிறவியைக் கடவாதவர் காட்டுவிலங் காவர். அவர்க்குக் கடவுள்நிலை கிட்டாது. அவர்கள் நரகத் தழுந்துவர். |
| குரவன்-ஆசான். பவம்-பிறப்பு. நிரயம்-நரகம். மானவர்-மக்கள். கதி-கடவுள்நிலை. |
| 4 |
| தெய்வநூல் ஓதுவோன் சிறந்தமெய் ஆசான் |
58 | மண்ணிறைக் கடியரா யுயிர்வளர்ப்பர் பலரும் விண்ணிறைக் கடியரா யெவரும்வீடு பெறவே புண்ணியத் திருமறைப் பொருளையோது புனிதர் எண்ணிடற் கரியபெற்றி யையியம்ப லெளிதே. |
|
| உலகத்தார் மண்ணரசர்க்கு அடிமையாய் வாழ்வர். மெய்யுணர்ந்தார் கடவுளுக்கு அடிமையாய்த் தூய மறைப்பொருளை எல்லாரும் வீடுபெறும் பொருட்டு ஓதுவர். அளவிட முடியாத அவர்கள் பெருந்தன்மையைச் சொல்லமுடியாது. |
| விண்ணிறை-கடவுள். வீடு-கடவுளின்பம். |
| 5 |
| ஆசான் அரும்புகழ் அளவிடற் கரிதே |
59 | ஐம்புலக் கதவடைத்து மனமாவை அறிவாங் கம்பம்வீக் கியஞருஞ் சுகமெனக் கருதியே |
|