| ஒரு மரத்திலே ஆண் பெண் பூக்கள் அமைந்திருப்பதால், அம்மரம் வேறு ஒரு மரத்தின் உதவியில்லாமல் காய்க்கும். (விலங்கு முதலிய சிற்றுயிர்கள் இனம் பெருக்கக் கூடினாலும் பெரும்பாலும் தனித்தனியாகப் பிரிந்தே வாழ்கின்றன.) ஆனால், பிறப்பிலுயர்ந்த உயர்திணை ஆண் பெண் என்னும் இருவரின் குடும்பவாழ்க்கையின்றி மகப்பேறு உண்டாகுமா? இருவரும் வேறுபாடின்றி ஒருமை எண்ணத்துடன் நம்வீடு, நம்பணம், நம்சுற்றம், நம்பிள்ளைகள் எனப் பொதுவாகவே சொல்லுகின்றார்கள். அவ்வுரிமையாலும், ஆண்டவன் முன்னாளில் ஆண்பெண்ணை ஓருடம்பினின்றும் படைத்தான் என்று ஆன்றோர் கூறுவது உண்மையாம். தலைவன் தலைவியென்னும் இருவர்களும் இன்பதுன்பங்களை ஒருமையாகக் கருதி விருப்பமுடன் பொருந்தி வாழ்ந்தால், துன்பம் அவர்க்கு ஏதும் உண்டோ? (இல்லை யென்க.) |