| பரத்தைமை |
| குடும்ப வாழ்வில் ஆடவர் வலது கையும் மகளிர் இடது கையும் ஆவர். காதலன் செய்யும் தொழில் எலாம் காதலி செய்ய எண்ணுவது வலக்கையின் தொழிலாகிய உண்டல் முதலியவற்றை இடக்கை செய்ய எண்ணின் இகழப்படுவது போல் இகழ்ச்சிக் குரியதாம். |
| தலைவன்-காதலன். தாரம்-காதலி. ஆற்றுதல்-செய்தல். |
| 5 |
| பரத்தையர் பெருநஞ்சு பாம்பினுங் கொடிதே |
163 | உண்டவர் தமைக்கொலும் ஓத வெவ்விடம் அண்டினோர் தமைக்கொலு மாளி கையினால் தண்டினோர் தமைக்கொலுஞ் சற்பந் தையலார் கண்டவர் நினைப்பவர் தமைக்கொல் காலமே. |
|
| கடலில் எழுந்த நஞ்சு உட்கொண்டவரைக் கொல்லும். அரிமா நெருங்கினவரைக் கொல்லும். பாம்பு கையால் தொட்டவரைக் கொல்லும். தீய பெண்கள் தங்களைப் பார்ப்பவர்களையும் நினைப்பவர்களையும் பெருநஞ்சுபோல் கொல்லுவர். |
| ஓதம்-கடல். அண்டல்-நெருங்கல். ஆளி-அரிமா; சிங்கம். தண்டல்-தொடுதல். சற்பம்-பாம்பு. காலம்-சாவு. விடம்-நஞ்சு. |
| 4 |
| சிற்றின்பால் செய்பாவம் வீட்டில் தீயிடலாம் |
164 | நிலையில்சிற் றின்பத்தி னேயத் தால்தினம் அலைவுசெய் பவந்தனை ஆற்றல் கொள்ளியால் தலையினைச் சொறிதலுந் தகிக்குந் தீயினை எலியினுக் கஞ்சியில் லிடலும் ஏய்க்குமே. |
|
| நிலையாத சிற்றின்பத்துக்காக நாள்தோறும் நிலைத்த துன்பம் தரக்கூடிய பாவத்தைச் செய்தல், தலையின் தினவு நீங்குவதற்காகத் தலையினைக் கொள்ளிக் கட்டையால் சொறிதலும், எலிக்கு நடுங்கிச் சாம்பராக்குந் தீயினை வீட்டில் கொளுத்துதலும் போன்றதாம். |
| அலைவு-துன்பம். தகித்தல்-சுடுதல்; சாம்பராக்குதல். இல்-வீடு. ஏய்க்கும்-ஒக்கும். |
| 7 |
| நீ.-6 |