| நீதி நூல் |
| விதவை-கைம்பெண். வேசை-பரத்தை. மதன நூல்-காமநூல். விபச்சாரம்-பரத்தைமை. வினைகள்-செயல்கள். |
| 16 |
| பரத்தையர் அழகுண்டார் பதங்கம்போல் மாள்வர் |
174 | விட்டமின் னோடாங்கெய்தும் வெடியெனத் தீமைசெய்யுங் கட்டழ கினைய வாவிக் காமசா கரத்தி னாழ்வோர் கிட்டருஞ் சுடரை மேவிக் கேடுறும் பதங்கம் போலும் தொட்ட கொப் பத்து வீழ்மா வென்னவுந் துயர்சார் வாரால். |
|
| மின்னலும் இடியும்போன்று தீமைசெய்யும் பெண்களின் அழகினை ஆசைப்பட்டுக் காமக்கடலினுள் ஆழ்வார், விளக்கொளியை விரும்பி அதனில் வீழ்ந்து மாளும் விட்டிலைப்போலவும், தோண்டப்பட்ட யானை பிடிக்கும் பெருங்குழியின் வீழ்ந்த யானையைப் போலவுந் துன்புறுவர். |
| வெடி-இடி. சாகரம்-கடல். பதங்கம்-விட்டில், தொட்ட-தோண்டிய, கொப்பம்-யானை பிடிக்கும் மறை; பெருங்குழி. |
| 17 |
| அதி. 13. உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் |
| தொழிலாள ரின்றேல் தொல் உலகு அழிவுறும் |
175 | வாழக மும்புனை தூசணி யும்பல வாகன மஞ்சமொடுஞ் சூழ்பொரு ளுஞ்சுவை சேரமு துங்கமழ் சோலையு மாசுகமுங் கீழவ ராவலர் தாமில ரேன்மிகு கேவல மாயுலகம் பாழது வாமத னாலரு டானவர் பாலுறு வாய்மனனே. |
|
| நெஞ்சே! வீடும் ஆடையும் பலவகையான ஊர்திகளும் பொருளும் சோறும் சோலையும் வேறு இன்பங்களும் தாழ்வென்று தப்பாகக் கருதும் தொழிலாளிகளாலேயே உண்டாம். அவர்கள் இல்லாவிட்டால் உலகம் தூய்மையற்று மிகவும் இழிந்த நிலைமையை எய்தி அழிவடையும். அதனால், செல்வத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோரைப் பேணுதல் அருளும் கடைமையும் ஆகும். |
| அகம்-வீடு. தூசு-ஆடை. கேவலம்-இழிவு. |
| 1 |