பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்149


40.சுட்டிறந்த பாழ் அதனில் சுகித்திருக்கச் சொன்னவன் காண்!
ஏட்டில் எழுத்தோ? எழுதினவன் கைப்பிழையோ?
  
41.சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்;
அம்மா! பொருள் இதுஎன அடைய விழுங்கினண்டி!
  
42.பார்த்த இடம் எல்லாம் பரமாகக் கண்டேண்டி!
கோத்த நிலைகுலைத்த கொள்கை அறியேண்டி!
  
43.மஞ்சனம் ஆட்டி மலர்பறித்துச் சாத்தாமல்
நெஞ்சு வெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி!
  
44.பாடிப் படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்;
ஓடித் திரியாமல் உருக்கெட்டு விட்டேண்டி!
  
45.மாணிக்கத் துள்ஒளிபோல் மருவி இருந்தாண்டி!
பேணித் தொழும் அடியார் பேசாப் பெருமையன் காண்!
  
46.அன்றுமுதல் இன்றளவும் அறியாப் பருவமதில்
என்றும் பொதுவாய் இருந்த நிராமயன் காண்!
  
47.சித்த விகாரத்தால் சின்மயனைக் காணாமல்
புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே.
  
48.பத்தி அறியாமல் பாழில் கவிழ்ந்தேண்டி!
ஒத்தஇடம் நித்திரை என்று ஒத்தும் இருந்தேண்டி!
  
49.செத்தாரை ஒத்தேண்டி! சிந்தை தெளிந்தேண்டி!
மற்றாரும் இல்லையடி! மறுமாற்றம் காணேண்டி!
  
50.கல்வியல்ல; கேள்வியல்ல; கைநாட்டும் காரணம்காண்
எல்லையள வற்றதடி! எங்கும் நிறைந்ததடி!
  
51.வாசா மகோசரத்தை மருவிஇடம் கொண்டாண்டி;
ஆசூசம் இல்லாண்டி! அறிவுக்கு அறிவாண்டி!
  
52.பத்துத் திசைக்கும் அடங்காப் பருவமடி!
எத்திசைக்கும் எங்கும் இடைவிடாத ஏகமடி!
  
53.தித்திக்க ஊறுமடி! சித்தம் உடையார்க்குப்
பத்திக் கடலுள் பதித்தபரஞ் சோதியடி!