பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்297


“பையூரிலேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ”

     இங்கு  இவர்  ஜனன முறைமை  உணர்த்துகின்றார்.  பையூர் என்பது
கருவறை  (கருப்பை)  பாழூர்  என்பது  யோனி;  மெய்யூர்  என்பது உடல்
என்றும், உண்மை ஞானம் என்றும் இரு பொருள்படும்.

     பாழ்  என்பது  மோட்சம்,  வீடு பேறு; உடலையே இறைவன் வாழும்
ஆலயமாகக் கருதி யோக நியமங்கள் செய்தீர்களானால் அதுவே கோயிலாகி
இறை  தரிசனத்தைக்  காட்டும். அந்த நிலையில் யோக நெறியாளர் வெறுத்
தொதுக்கும் பெண்களின் கருப்பையும் உடம்பும் புனிதம் அடைந்து பாழூராக
அதாவது ஆகாய வெளியாக இறைவன் வாழும் கோயிலாக மாறாதா? என்று
நம்மைக் கேள்வி கேட்கின்றார்.

     ஆராய்ச்சி  உரையைப்   படித்த   நெஞ்சங்களுக்கு   அழுகண்ணார்
பாடலையும் படிக்க ஆவல் வருகின்ற தல்லவா! பாடலைத் தொடருங்கள்.

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலாப் பதியடியோ குதர்க்கந் தெருநடுவே
சாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
     மேலப் பதிதனிலே                 என் கண்ணம்மா
     விளையாட்டைப் பாரேனோ.
1
  
எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரரைவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
     நெஞ்சார நில்லாமல்               என் கண்ணம்மா
     நிலைகடந்து வாடுறண்டி.
2