வாடைதனைக் காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல் ஆடை குலைத்து எமையும் - என் ஆத்தாளே அலங்கோலஞ் செய்தான்டி. | 152 |
| | |
கற்புக் கரசிஎன்ற காரப்பேர் விட்டுஅகலப் பொற்புக் குலைத்து எமையும் - என் ஆத்தாளே போதம் இழந்தனடி. | 153 |
| | |
என்ன வினைவருமோ இன்னதெனக்கு என்றறியேன் சொன்ன சொல்லெல்லாம் - என் ஆத்தாளே சொல்லறவே வெந்ததடி. | 154 |
| | |
கங்குல்பகல் அற்றிடத்தே காட்டிக் கொடுத்தான்டி பங்கம் அழித்தான்டி - என் ஆத்தாளே பாதகனைப் பார்த்திருந்தேன். | 155 |
| | |
ஓதியுணர்ந்து எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி சாதியில் கூட்டுவரோ - என் ஆத்தாளே சமையத்தாற் குள்ளாமோ. | 156 |
| | |
என்னகுற்றஞ் செய்தேனோ எல்லவருங் காணாமல் அன்னை சுற்றமெல்லாம் - என் ஆத்தாளே அறியாரோ அம்புவியில். | 157 |
| | |
பொய்யான வாழ்வெனக்குப் போதமெனக் கண்டேன்டி மெய்யான வாழ்வெனக்கு - என் ஆத்தாளே வெறும்பாழாய் விட்டுதடி. | 158 |
| | |
சொல்லானைச் சொல்லுதற்குச் சொல்லவாய் இல்லையென்று எல்லாருங் கண்டிருந்தும் - என் ஆத்தாளே இப்போது அறியார்கள். | 159 |
| | |
கன்மாயம் விட்டதடி கருத்தும் அழிந்தேன்டி உன்மாயம் இட்டவனை - என் ஆத்தாளே உருவழியக் கண்டேன்டி. | 160 |
| | |
என்னசெய்யப் போறேன்நான் இருந்த அதிசயத்தைக் கன்னி இளங்கமுகு - என் ஆத்தாளே காரணமாய்க் காய்த்ததடி. | 161 |