பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்389


15. வால்மீகர் சூத்திர ஞானம்

     இராமாயணம்  பாடிய  வால்மீகர்  வேறு.  தென்னாட்டில்  சித்தராக
விளங்கியவர் வேறு.

தேற்றமுடன் வால்மீகர் என்ற சித்து
     தெளிவாக மார்க்கமது சொல்வேன் பாரீர்
மாற்றமயம் நீக்கியல்லோ வையத்தில்
     வளமையுடன் வெகுகாலம் இருந்த சித்து
ஆற்றலுடன் வால்மீகி ராமாயணத்தை
     அவனிதனில் மாந்தருக்குச் செய்திட்டாரே.

                                    போகர் ஏழாயிரம் - 5834

     இவர்  புரட்டாசி  மாதம்  அனுஷ  நட்சத்திரத்தில் பிறந்தவர். வேடர்
குலத்தவர். இவரது சமாதி எட்டிக்குடியில் உள்ளது.

இருள் வெளியாய் நின்றசிவ பாதம் போற்றி
     எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்;
அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்
     ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்;
திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம்
     சிவசத்தி திருமாலின் ரூப மாகும்;
வருமுருவே சிவசத்தி வடிவ மாகும்;
     வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே.
1
  
வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்;
     வானில்வரும் ரவிமதியும் வாசி யாகும்;