20. கஞ்சமலைச் சித்தர் பாடல் கஞ்சமலை என்னும் மலையில் வாழ்ந்தமையால் இவர் கஞ்சமலைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார் போலும். இயற் பெயர் தெரிந்திலது. எளிமையான சொல்லமைப்பில் காணப்படும் இச்சித்தரது பாடல் கலைக்கியானம் 23 மற்றும் பாடல் 25 ஆக சித்தர் பாடல் தொகுதியில் காணப்படுகிறது. வந்தபொருளைத் தள்ளாதே - நீயும் வாராததற்கு வீணாசை கொள்ளாதே என்ற இவரது பாடல் வரிகள் பட்டினத்தடிகளின் இருக்குமிடம் தேடி உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் என் பசிக்கே என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்துகின்றன. இவ்வரிகள் மட்டுமல்ல. ஏனைய அடிகளும் சந்த இசையோடு எதுகை மோனையுடன் நினைவுபடுத்துகின்றன. கற்பனை யாகிய ஞாலம் - அந்த கரணங்களாலே விளைந்த விசாலம் மூடருறவு பிடியாதே - நாரி மோக விசாரத்தால் நீ மடியாதே ஆடம் பரம் படியாதே - ஞான அமுதமிருக்க விஷம் குடியாதே
பெண்களின் மோக ஆசை கூடாது. அப்படி தப்பித் தவறி அஃது ஏற்பட்டு விடுமானால் அவ்வளவு சீக்கிரத்தில் அதனை |