22. சங்கிலிச் சித்தர் பாடல் சங்கிலிச் சித்தரின் உண்மைப் பெயர் ‘மதங்க நாதர்’ என்பது தவிர, வேறு எந்தத் தகவல்களும் உண்மையை உரைப்பவை ஆகா. இவர் காலம் 15ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலம் என்று பாடல்களில் வழங்கும் சொல் வழக்காறுகள் காட்டுகின்றன. சங்கிலிச் சித்தர் பாடல்கள் ‘கும்மி’ மெட்டில் அமைந்தவை. 36 பாடல்களும் முக்காலத்தின் உண்மைகளை முன்வைக்கின்றன. மனிதர்கள் வாழப் பிறந்தவர்கள். பொய் மாயையை நம்ப வேண்டாம். வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வில் பொருந்து என்று கூறுகிறார். மனம் அடக்கும் கலையே வாழ்வு. மற்றவை வீழ்வு என்பது இவர் கொள்கை. வைதீகச் சமயத்தின் வைரியாக விளங்கும் இவர், வாழ்வின் பேரின்பத்திற்கு வழி வகுக்கிறார். கும்மி மூலக்க ணேசன் அடிபோற்றி எங்கும் முச்சுட ராகிய சிற்பரத்தில் வாலை திரிபுரை அம்பிகை பாதத்தை மனத்திற் கொள்வாய் ஆனந்தப் பெண்ணே. | 1 | | | எங்கள் குருவாம் திருமூலர் பாதம் எப்போதும் போற்றித் துதித்தோன் சங்கைகள் அற்றமா சித்தர்கு ழாங்களின் தாளைப் பணிவாய் ஆனந்தப் பெண்ணே. | 2 |
|