பக்கம் எண் :

536சித்தர் பாடல்கள்

24. திரிகோணச் சித்தர் பாடல்

     திரிகோணச்  சித்தரின்  உண்மையான  பெயர்  தெரியவில்லை. இவர்
யாழ்ப்பாணத்  தமிழ்ச்  சித்தர்  என்பாரும்  உளர்.  வேறு  பல  சித்தர்கள்
இசையையும் எண்ணத்தையும் இணைக்கும்போது இவர் கலிவெண்பா யாப்பில்
உயர்ந்த    சிறந்த    எண்ணங்களைப்   பாவில்   இணைப்பதால்   இவர்
யாழ்ப்பாணத்தவர் என்பதற்கு ஒரு சான்றாகும்.

     காரணம்   ஈழத்   தமிழ்நாடு  போராட்டம்  தொடங்குவதற்கு  முன்
வரையிலும்  ஈழத்தமிழ்  நாட்டில்  பார்ப்பனர்  பெரிதும்  இல்லையாதலால்
யாப்பின்  மரபு  அறாமல்  நூல்கள்  இங்கு  எழுந்து வந்தன. வாழ்கின்றன.
எனவே  இம்  முடிவு,  இவர் 92  கண்ணிகளில்  யோகம்,  ஞானம்  பற்றி
அனைத்தையும்  சீர்திருத்தச்  சிந்தனையோடும்,  பகுத்தறிவுப் பாங்கோடும்
அணுகும்  முறை  மிகமிக  மேலானதாக  உள்ளது.  இவர்  காலம் 17ஆம்
நூற்றாண்டின் முற்காலப் பகுதியாக இருக்கலாம்.

கலிவெண்பா

சிவனே பரமகுரு தேசிகனே பாதம்
அவனே அனுதினமும் ஆகும்                      நவநீத

1
  
பொன்பூத்த நீலப் புயல்வண்ண னும் பொறிவாய்
மின்பூத்த நான்முகனும் வேதாவும்                தென்பூத்த
2
  
செக்கச் சடையானும் தேசுபெற வேயுருவாய்
ஒக்கத் தனிவந்து உதித்தபிரான்                 தர்க்கமிடும்
3