பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்545


     தாம்  சித்தர்கள்  வழிவந்தவர்   என்பதையும்,  இவர்  மிக  மிகப்
பிற்காலத்தவர் என்பதையும் தம் பாடலில் தெரிவிக்கின்றார்.

கவன குளிகை கொண்டு - அதனாலே
     ககன மார்க்கம் தனிலே அகனமாய் சென்று
தவமொருமா சித்தர்கள் வாழ்கின்ற
     சதுர கிரிக்குப் போய் குதூகளித்தேன்.

என்றும், மேலும்

தன்னையும்தான் உணர்ந்தேன் - எட்டுத்
     தலங்கலும் ஒன்பது வாசல் உணர்ந்தேன்
பின்னுக் அக் கதவடைத்தேன் - மேலாம்
     பெருவழி ஊடுசென்று திருவடைந்தேன்

என்கிறார். இனி, அவர் பாடிய பாடல்களைப் பார்ப்போம்.

நொண்டிச் சிந்து

ஆதி பராபரையாள்                             சிவசத்தி
     அம்பிகையின் பாதமதைக் கும்பிட்டு நித்தம்
கோதிலாச் சுடரொளியில்                      திரிகோணக்
     குஞ்சரத்தின் பாதமலர் தஞ்சமாய்க் கொண்டு

1
  
திருமூலர் காலாங்கி                              போகர்
     தென்பொதிகைக் குருமுனி தன்வந்திரியர்
கருவூரார் இடைக்காடர்                          அத்திரி
     கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே.
2
  
சுந்தரா னந்தர் கபிலர்                        கொங்கணர்
     சூதமுனி கோசிகர் வேதமுனிவர்
நந்தீசர் சட்டைமுனிவர்                          தன்னை
     நான்தொழு தேனடி தாள்பணிந்தேன்.
3
  
அஞ்சுபுலக் கதவறிந்து                             பிரம
     மந்திரத்தின் உண்மைவழி விந்தை தெரிந்து