பக்கம் எண் :

560சித்தர் பாடல்கள்

28. வகுளிநாதரென்னும்
மௌனச்சித்தர் பாடல்

     இவரைப்பற்றி   எந்த   ஒரு  செய்தியும்  எங்கும்  கிடைக்கவில்லை.
இவர்  பாடல்களை  வைத்துப்  பார்க்கையில்  இவருக்கு  முன் இருந்த பல
சித்தர்களைப்  பின்பற்றி 12  பாடல்களைப் பாடியிருப்பது மட்டும் தெரிகிறது.
இவருடைய இயற்பெயர் ‘வகுளிநாதர்’ என்று ஒரு நூல் குறிப்பிடுகிறது.

குறவஞ்சிப்பா

ஆதிபெருஞ் சோதிதனை அனுதினமும் நாடி
     ஐயர்பதந் தேடிக்கொண்டு அருள்பெறவே பாடிச்
சோதியெனும் மனோன்மணியாள் அருளதனைப் பெற்றுச்
     சுகருடைய பாதமதை மனந்தனிலே உற்று.

1
  
ஆங்காரம் தனையடக்கி அருள்நிலையை நோக்கி
     அரியபுவ னங்களெல்லாம் அறிய மனதாக்கி
பாங்காகப் பெரியோர்கள் பாதமதுபணிவோம்
     பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம்.
2
  
பேய்க்குணத்தைச் சுட்டல்லவோ பிரமநிலை கண்டோம்
     பிரமபதி தான்கடந்து சுழிமுனையுள் கொண்டோம்
நாய்போலே அலையாமல் நாமிருந்தோம் தவசில்
     நல்லதொரு ஆங்காரம் அடக்கிமிகப் பவுசாய்.
3
  
வஞ்சகமாம் வாழ்வைநம்பிச் சஞ்சலங்கள் அடையோம்
     மகத்தான மகரிடிகள் பதங்காணச் சடையோம்
பஞ்சமா பாதகரை ஒருநாளும் பாரோம்
     பாவவினை பற்றறுத்தோர் சிநேகிதங்கள் மறவோம்.
4
  
ஆயிரம்பேர் சித்தருடன் அனுதினமும் பாடி
     ஆனந்தத் திருநடனம் ஆடுவோமே கூடி