பக்கம் எண் :

562சித்தர் பாடல்கள்

29. கடேந்திர நாதர் என்ற
விளையாட்டுச் சித்தர் பாடல்

     வாழ்க்கையில்  எல்லாவற்றையுமே  விளையாட்டாய்  எடுத்துக்கொள்ள
வேண்டுமேயல்லாது எதனையும் தீவிரமாய் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று
கூறும்  இந்த   விளையாட்டுச்  சித்தரின்   இயற்பெயர்  கடேந்திர  நாதர்
என்பதாகும்.

“நானென்று சொல்வதும் விளையாட்டே - இந்த
நானிலத் திருப்பதுவும் விளையாட்டே”

“தாய் தந்தை கூடுவதும் விளையாட்டே”

“பெற்ற பிள்ளை யென்றதுவும் விளையாட்டே - தந்தை
பேரிட்ட ழைத்ததுவும் விளையாட்டே”

“மாடிமனை வீடுவாசல் விளையாட்டே - என்றன்
மனைவிமக்க ளென்பதுவும் விளையாட்டே”

“கூடுவிட்டுப் போகும் உயிர் விளையாட்டே!”

“பிணமா யிருப்பதுவும் விளையாட்டே - அதைப்
பெற்றோர் கண்டு அழுவதுவும் விளையாட்டே”

செத்தோர்க்கு அழுவதுவும் விளையாட்டே - சுடலை
சேரும்வரை யழுவதுவும் விளையாட்டே!

     இப்படி வாழ்க்கையில் எல்லா நிலைகளையும் விளையாட்டாய் எடுத்துக்
கொள்ளும் இந்த விளையாட்டுச்