பக்கம் எண் :

588சித்தர் பாடல்கள்

33. தடங்கண் சித்தர் பாடல்கள்

தங்கப் பா

அதிவெடி முழக்கி முரசுகள் முடுக்கி
     அலறிடும் உடுக்கைகள் துடிப்ப
விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி
     வீணிலோர் கல்லினைச் சுமந்தே
குதிகுதி என்று தெருவெலாம் குதிப்பார்
     குனிந்துவீழ்ந் துருகுவர் மாக்கள்
இதுகொலோ சமயம்? இதுகொலோ சமயம்?
     எண்ணவும் வெள்குமென் நெஞ்சே!
1
  
அருவருப் பூட்டும் ஐந்தலை, நாற்கை
     ஆனைபோல் வயிறுமுன் துருத்தும்
உருவினை இறைவன் எனப்பெயர் கூறி
     உருள் பெருந் தோனில் அமர்த்தி
இருபது நூறு மூடர்கள் கூடி
     இழுப்பதும் தரைவிழுந் தெழலும்
தெருவெலாம் நிகழும்; அது கொலோ சமயம்?
     தீங்குகண் டுழலுமென் நெஞ்சே!
2
  
எண்ணெயால், நீரால், பிசுபிசுக் கேறி
     இருண்டுபுன் ளாற்றமே விளைக்கும்
திண்ணிய கற்குத் திகழ்நகை பூட்டித்
     தெரியல்கள் பலப்பல சார்த்திக்
கண்ணினைக் கரிக்கும் கரும்புகை கிளப்பிக்
     கருமனப் பார்ப்புசெய் விரகுக்கு
எண்ணிலா மாக்கன் அடி, மிதி படுவர்
     இதுகொலோ, இதுகொலோ சமயம்?
3
  
அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி
     அருவருப் பாக்கலும், மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்
     குரங்கெனத் தோன்றலும், அறியா