ஏற்றி வளைத்திடு நாணென எங்கள் இதயத் தெழுந்துவரும் - கொடுங் கூற்றை அடித்து நொறுக்கிடப் பாரதி கொண்டு தருங்கவிதை! கோடி யுகம்உருண் டோடிய காலையும் கொற்றவன் பாரதியின் - புகழ் பாடி மகிழ்ந்து குதித்திடும் பாணர் பரம்பரை வந்ததுபார்!
‘சாட்டை’ - 1955