|
போராட்டம்
வர்க்கங்க ளாகப்
பிரிந்த சமூகம்
வளர்ந்தது காண்உலகில் - இரு
வர்க்கங்க ளாகி எதிர்ப்பன, ஆர்ப்பன
என்றும் உறுமுவன!
போட்ட முதலினைக் கொண்டு மனிதன்
புலன்உழைப்பைப் பறிப்பார் - நர
வேட்டை யாடும் முதலாளிகள் வர்க்கம்
விழ, அடி வீழ்கிறது!
பூட்டும் அடிமைத் தளைகள் அறுத்தும்
புரட்சி செயஎழுந்தார் - அவர்
மூட்டும் கனல்புவி மூள்கிறது துயர்
முற்றும் எரிந்திடவே!
வேர்வையில் நன்மை விளைய உழைத்தவர்
வீறுடனே எழுவார் - ‘வர்க்கப்
போர் இட’ என்று புரட்சி முரசு
புவியில் ஒலிப்பதுகேள்!
‘அலை ஓசை’ - 1955
|