பக்கம் எண் :

மலரும் உள்ளம்15

கிழமைப் பாட்டு

ஞாயிற்றுக் கிழமை நகையைக் காணோம்.

திங்கட் கிழமை திருடன் கிடைத்தான்.

செவ்வாய்க் கிழமை ஜெயிலுக்குப் போனான்.

புதன் கிழமை புத்தி வந்தது.

வியாழக் கிழமை விடுதலை யானான்.

வெள்ளிக் கிழமை வீட்டுக்குப் போனான்.

சனிக் கிழமை சாப்பிட்டுப் படுத்தான்.

அப்புறம் அவன்கதை

ஆருக்குத் தெரியும் ?